–ராஜ்மோகன் சுப்ரமண்யன்.இந்தியாவின் முதல் குடிமகளாகும் பழங்குடியினப்பெண்!.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 75வது சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாடி வருகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பாரதத் தாய் மேலும் மகிழ்ச்சியைடையும் வகையில் முதல் முறையாக பழங்குடி இனப்பெண் ஒருவர் இந்தியாவின் முதல் குடிமகளாக பொறுப்பேற்க இருக்கிறார். இதன் பின்னனியில் அரசியல் சாதக பாதகங்கள் பல இருப்பினும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவர் உலகின் மிகப்பெரிய தேசத்தின் முதல் முகமாவது பெருமிதமுடன் கொண்டாட வேண்டிய ஒன்று. அந்த பெருமைக்குரியவர் ஒடிசாவில் பிறந்த திரவுபதி முர்மு..பெரும்பாலும் குடியரசு தலைவர், ஆளுநர் போன்ற பதவிகள் அலங்கார பதவிகள் என்று சொல்வதுண்டு. ஆனால் சமீபகாலமாக இவை சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவரும் சூழலில் ஜார்கண்ட் ஆளுநராக இருக்கும் போது பல அதிரடிகளை அரங்கேற்றியவர்தான் இந்த திரவுபதி முர்மு. அறுபத்தி நான்கு வயதாகும் இவர் ஏற்கனவே அரசியலில் பல பதவிகளை வகித்தவர்..யார் இந்த திரவுபதி முர்மு? ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேடா கிராமத்தில் பிறந்தவர் திரவுபதி முர்மு. இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ள திரவுபதி முர்முவின் இந்த கிராமத்தில் இதுவரை மின்சார வசதி கூட இல்லை என்பது விந்தை..1958 ஜூன் 20 ல் பிறந்த திரவுபதி முர்முவிக்கு அரசியல் குரு அவரின் தந்தை நாராயணன் டூடு எனலாம். அவர்தான் அந்த கிராமத்தின் தலைவர். எனவே மக்களுக்கும் அதிகாரத்திற்குமான நெருக்கத்தை குழந்தை பிராயத்தில் இருந்தே பார்த்து வளர்ந்தவர் முர்மு. பழங்குடி இனம் எனினும் கல்வியின் அவசியத்தை இளம் வயதிலேயே உணர்ந்ததினால் படிப்பில் தீவிரம் காட்டினார். 1979 ல் கல்லூரி முடித்த முர்மு உடனடியாக அரசு தேர்வெழுதி இளநிலை உதவிளாளராக மின் துறையில் இணைந்தார். எனினும் அந்த பணி இயந்திரத்தனமாக இருப்பதை உணர்ந்தவர், அதனைவிட நெருக்கமான ஒரு பணியை தேர்ந்தெடுக்க எண்ணி அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆசிரியர் பணிக்கு தாவினார்..ஒடிசா தலைநகர் ஜார்பாடா பகுதியில் அமைந்துள்ள அரவிந்தர் ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் 1994 வரை ஆசிரியையாக தொடர்ந்தார். தந்தையிடம் இருந்த பொதுவாழ்க்கை தொடர்பு முர்முவிடமும் தொற்றிக்கொள்ள 1997 ல் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து நடந்த தேர்தலில் முதல் பதவியே கவுன்சிலர். ஒடிசாவில் பாஜகவின் வளர்ச்சியில் மிகவும் கவனம் செலுத்தி வந்த தேசிய தலைமை, ஒடிசாவின் பழங்குடி மக்களின் எண்ணிக்கையை குறிவைத்து அவரின் இந்த வெற்றிக்கு பரிசாக பழங்குடியின மோர்ச்சா அமைப்பின் தலைவர் பதவியை வழங்கியது. கட்சியில் இணைந்த சில வருடங்களிலேயே இவ்வாறு தேசிய தலைவராக உயர்ந்தார் முர்மு..2000 ல் நடந்த ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளமுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது பாஜக. இதில் ராய்ரங்கப்பூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். கூட்டணியில் முதல் முறையாக அமைச்சராகவும் பதவி பெற்றார். 2005 ல் நடந்த தேர்தலில் தனது சொத்து மதிப்பாக சிறு சேமிப்பையும், சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் இருப்பதையும் பதிவு செய்து எளிமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி அடுத்த தேர்தலிலும் அமோக வெற்றிபெற்று மீண்டும் அமைச்சரானர் முர்மு..அமைச்சராக இருந்த ஒன்பது ஆண்டுகளில் கால்நடை வளர்ப்பு, மீன்வளம், போக்குவரத்து, வணிகம் என பலதுறைகளில் சிறப்பாக பணியாற்றினார். தேசிய அளவில் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதையும் வென்றார்..2015 ஆம் ஆண்டு இவரை ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்க செய்தது பாஜக தலைமை. இதன் பின்னனியில் அரசியல் இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஏன் எனில் அப்பொழுது பழங்குடியின நிலங்களை கையகப்படுத்துதல் உட்பட, பழங்குடியினருக்கு எதிரான பல மசோதாக்கள் ஜார்கண்டில் இயற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. முர்முவை ஆளுநராக பொறுப்பேற்க செய்வதின் மூலம் அந்த மசோதாக்களுக்கு எளிதில் ஒப்புதல் பெறலாம் என நினைத்தது ஜார்கண்டை ஆளும் பாஜக அரசு. ஆனால் முர்மு அதற்கு சிறிதும் தலை வணங்கவில்லை. ஆளுநருக்கே உரிய தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதனை திருப்பி அனுப்பினார். இது பெரும் பரபரப்பை உருவாக்கியது. இருப்பினும் ஜார்கண்ட் அமைச்சரவை மீண்டும் அந்த மசோதவை இயற்றி அவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்திய அரசியல் சாசனப்படி இரண்டாவது அனுப்பும் மசோதாவை ஆளுநர் மறுக்க முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் கையெழுத்து போட்டு அனுப்பினார் முர்மு. இது முழுக்க முழுக்க ஒரு நாடகம் என்று எதிர்கட்சிகள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இப்படி சர்ச்சைகளுடனே கடந்த 2019 ஆம் ஆண்டு ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற முர்மு சற்று அமைதியாக இருந்தார்..திரவுபதி முர்முவின் அரசியல் வாழ்க்கை அதிவிரைவான பாதையில் இருந்து வந்தாலும், அவரின் சொந்த வாழ்க்கை என்பது சோகம் நிரம்பியது. பழங்குடியின பழக்கவழக்கப்படி 15 வயதிலேயே திருமணமாகி அதன் காரணமாக கடுமையான குடும்ப வன்முறையை எதிர்கொண்டவர். பின்னர் அதிலிருந்து விலகி முழுக்க முழுக்க மக்கள் சேவகராக மாறியவர். எனவே விமர்சனங்களும், வலிகளும் அவருக்கு பழகிய ஒன்றாகிவிட்டது..தற்போது பதினாறாவது குடியரசு தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் திரவுபதி முர்மு. இதன் பின்னனியிலும் அரசியல் சர்ச்சைகள் வெடிக்கின்றன..தேசிய அளவில் தன்னை ஒரு சமூக பாதுகாவலனாக காட்டிகொள்ள பாஜக ஆடும் அரசியல் ஆட்டம் என்று குரல்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. மாநிலங்களில் தனக்கு சாதகமான ஆளுநர்களை எப்படி நியமித்து கைப்பொம்மையாக வைத்திருக்கிறதோ அதே போன்று இப்பொழுது ஜனாதிபதி பதவியிலும் ஒரு கைப்பொம்மையாகதான் முர்மு செயல்படுவார் என்கின்றன எதிர்கட்சிகள். அதற்கு ஏற்ப வேட்புமனு தாக்கல் செய்யும் போது முறைப்படி திரவுபதி முர்மு தான் மனுவை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கவேண்டும்; ஆனால் அவர் சும்மா நின்றுகொண்டிருக்க பிரதமர் மோடி அந்த மனுவை தருகிறார். இது மரியாதை நிமித்தமான நிகழ்வு என பாஜக சொன்னாலும், நெட்டிசன்கள் இதனை கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்..திரவுபதி முர்முவை எதிர்த்து ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தியுள்ளது எதிர்கட்சிகள். அவருக்கு வெற்றி பெற வாய்ப்புகள் மிக குறைவு எனினும் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பை பதிவு செய்ய இதை ஒரு வாய்ப்பாக கருதுகின்றன எதிர்கட்சிகள்..எப்படியும் திரவுபதி முர்முதான் வெற்றிப்பெற போகிறார். ஒரு சாதரண குக்கிராமத்தில் பிறந்து, கவுன்சிலர், எம் எல் ஏ, அமைச்சர், ஆளுநர் என படிபடியாக மக்கள் நிர்வாகத்தை கற்றிருக்கிறார். படித்தவர் மற்றும் இன்று வரை எளிமையான வாழ்க்கையை வாழ்பவர். என்னதான் பாஜக சித்தாந்த ரீதியாக அவரை வைத்து சாதிக்க முயன்றாலும் பல கோடி பழங்குடி மக்களின் முகமாகவும், இந்திய பெண்களின் முகமாவும் பொறுப்பேற்கும் அவர் பொறுப்புடன் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பை நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்..ஏன் எனில், 'ஜனாதிபதி' எனும் பதவியை அலங்கார பதவியாக சில மேட்டுகுடிகளே பொறுப்பேற்றுவந்தனர். கே.ஆர்.நாராயணன், அப்துல்கலாம் போன்றோர் அதன் தன்மையை மாற்றினர். இவற்றை யெல்லாம் உற்று கவனித்து வருபவர்தான் திரவுபதி முர்மு. குறிப்பாக ஒரு பழங்குடி இனத்தில் இருந்து ஜனாதிபதி ஆவது என்பது நிகழ இந்தியாவில் 75 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. பத்தாண்டுகள் முன்பு பி ஏ சங்கமாவை ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடி இனத்தில் இருந்து முன்மொழிந்தார் அன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா. ஆனால் அன்று அது நிறைவேறவில்லை. இன்று வேறு வடிவத்தில் அவரின் கனவு நிறைவேறி இருக்கிறது..பாஜக சித்தாந்தத்தை தவிர்த்து பார்த்தால் அனைத்துக் கட்சிகளும் வரவேற்க வேண்டிய வேட்பாளர் திரவுபதி முர்மு. ஆனால் அது அவ்வாறு நிகழவில்லை. பொறுப்பேற்ற பின்னர் தன் நிர்வாக திறமையின் மூலம் 'நான் எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானவர்' என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் நடந்துகொள்ளவேண்டும். அதுதான் சாமனிய பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மேலும் தன்னம்பிக்கை ஊட்டுவதாக அமையும். பிசகினால் இம்மக்கள் எப்பொழுதும் கைப்பாவைகள் என்ற நிலையே உறுதி செய்யப்படும். எது எப்படியோ இந்த அறிவிப்பு நிச்சயம் பாரத தாய்க்கு குதுகலமூட்டும். இது நீட்டிக்க திரவுபதி முர்மு சாதிக்கவேண்டும்.சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!