
ஓவியங்கள்: பிரபுராம்.
"மேடம்… உங்க கணவருக்கு சமீபத்தில் அடிச்ச விஷக் காய்ச்சலால் காது சுத்தமா கேட்கலே… நீங்க பேசறது எதுவும் காதில் விழாது."
"டாக்டர்… நீங்க சொன்னதை புரிஞ்சுக்கிட்டேன். நீங்க நடமாடும் தெய்வம்!"
-ஆர். யோகமித்ரா, சென்னை
******************************
"பாட்டி உன் இளமையின் ரகசியம் என்ன?"
"தினமும் காலை அரைமணி நேரம், மாலை அரை மணி நேரம் உன் அம்மாவுடன் வாய்ச்சண்டை பயிற்சி எடுத்துக்கிறேன் பேராண்டி!"
– கு. அருணாசலம், தென்காசி
******************************
ஜோக்ஸ்: வி. ரேவதி, தஞ்சை.
ஓவியங்கள்: பிள்ளை.
மனைவி: தூங்கும்போது என் வாய்க்குள் 'ஈ' போயிடுச்சுங்க!
கணவன்: தூங்கும் போதாவது உன் வாயை மூடக்கூடாதாடி…?
******************************
இந்த வண்டிக்கு ரோட் டேக்ஸ் இல்ல… பெட்ரோல், டீசல் தேவையில்ல…. நம்பர் பிளேட் தேவை இல்லை டோல் கேட் பிரச்னையில்ல…
என்ன வண்டி அது ?
மாட்டு வண்டிதான்… ஆனா கிளம்ப வேண்டிய இடத்துக்கு ரெண்டு நாள் முன்னாயே கிளம்பணும் அம்புட்டுதான்…!
******************************
"டிவில ஆங்கரா இருந்த என் பொண்ணு இப்ப சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சிட்டா!"
"எப்படி பங்கஜம்?"
"அவளுக்கு சிரிப்பை விட அழுகை நல்லா வருதுன்னு செலக்ட் பண்ணிட்டாங்க!"
******************************
பத்து சவரன் நகையை வச்சுக்கிட்டு லோன் வேணும் சார்!"
"வாங்கிக்கலாமே…!"
"அஞ்சஞ்சு பவுனா பிரிச்சு என் பேரிலும், ப்ரண்ட் பேரிலும் வைக்கணும் சார்!"