
-வெங்கடராமன் ராமசுப்ரமணியன்
அமெரிக்காவின் பிரபல ஒழுங்குபடுத்துதல் நிபுணர் (organizing expert) ஜூலி மார்ஜென்ஸ்டர்ன் (Julie morgenstern) கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற பிரபல அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒழுங்குபடுத்துல் ஆலோசகராக உள்ளார். மேலும், பல்வேறு வீடுகளுக்கு சென்று, அவற்றை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பதற்கு ஆலோசகராகவும் உள்ளார். ஒரு நிறுவனத்தில் உணவுவிடுதி (pantry) எங்கு இருக்க வேண்டும், எழுதுகலன்கள் எடுக்குமிடம் (stationeries) எங்கிருக்க வேண்டும் என்ற ஒவ்வொரு விஷயத்தையும் அவர் வடிவமைக்கிறார். அவர் 'ஒழுங்குபடுத்துதல் – உள்ளே வெளியே (organizing inside out)' என்ற பிரபல புத்தகம் எழுதியுள்ளார். அதில் SPACE (ஸ்பேஸ், அதாவது இடம்) என்ற சாம்யத்தை முன்வைக்கிறார். அதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். இந்த சாம்யம், ஒரு சிறிய மணிபர்ஸிலிருந்து, பிரம்மாண்ட அரண்மனை வரை எந்த ஒரு இடத்தையும் ஒழுங்குபடுத்த உதவும் வகையில் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜூலி ஒரு இடத்தினை ஒழுங்குபடுத்துவதற்கு
மூன்று கட்ட நடவடிக்
கைகளை பரிந்துரைக்கிறார்.
அந்த இடம் என்பது உங்களுடைய வீட்டின் வரவேற்பறை, சமையலறை என்று
எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இதற்கு பின்வரும் கேள்விகளை எழுப்ப வேண்டும். அதன் மூலம், அந்த பிரச்சனையை நாம் நன்கு புரிந்து கொள்ள ஏதுவாகிறது.
அந்த இடத்தை ஏன் நீங்கள் ஒழுங்காக வைத்திருக்க விரும்புகிறீர்கள் ? ஏன் இடத்தை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும், அதனால் கிடைக்கும் பயன்கள் போன்றவற்றில் தெளிவாக இல்லாவிட்டால், இடத்தை ஒழுங்காக பராமரிப்பது கடினம். எனவே, நோக்கத்தை தெளிவாக வரையறுக்க வேண்டும். உதாரணமாக, கூடத்தில் நான் சந்தோஷமாக அமர்ந்து, புத்தகம் படிக்க விரும்புகிறேன்.
ஒரு இடம் ஒழுங்காக இல்லாமலிருப்பதற்கு அடிப்படையில் மூன்று விதமான காரணங்கள் இருக்கலாம் என்கிறார் ஜூலி.
இடத்தைப் பற்றி அலசி ஆராய்ந்த பின்னர், அதனை மாற்றி அமைப்பதைக் குறித்த வியூகம் அவசியம். இது இரண்டாவது கட்டம்.
ஒரு இடத்தை ஒழுங்கு செய்வதற்கு மழலையர் பள்ளி ஒழுங்குபடுத்துதல் (kindergarten model of organizing) என்ற முறையை ஜூலி பரிந்துரைக்கிறார்.
ஒரு மழலையர் பள்ளியின் அறையில் நீங்கள் நுழைந்தால், அது மிகவும் ஒழுங்காக இருக்கும்.
எனவே, நாமும் பின்வரும் முறைகளை கையாள வேண்டும்.
எந்த ஒரு அறையையும், செயல்பாட்டு மண்டலங்களாகப் பிரிக்கவேண்டும்.
உதாரணமாக, ஒரு கூடத்தை எடுத்துக் கொண்டால், தொலைக்காட்சி பெட்டி பார்ப்பது, புத்தகம் படிப்பது, பாட்டு கேட்பது, குடும்பத்துடன் ஆனந்தமாக நேரம் கழிப்பது செயல்பாடுகள் நடக்கும். எனவே, அதற்கேற்ப செயல்பாட்டு மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும்.
செயல்பாட்டு மண்டலத்தில், செயல்பாடு, செயல்பாட்டிற்கு தேவைப்படும் பொருட்கள், அவற்றை சேமித்து வைப்பதற்கான இடம் என்ன என்று வரையறுக்க வேண்டும்.
உதாரணமாக, தொலைக்காட்சிப் பெட்டி பார்ப்பது என்று எடுத்துக் கொண்டால்,
அறையின் செயல்பாட்டு மண்டலங்களை அறையில் வரைபடத்தில் வரையறுக்க வேண்டும்.
அறையின் செவ்வகமான, சதுரமான கட்டத்தை ஒரு காகிதத்தில் போட்டுக் கொண்டு, செயல்பாட்டு மண்டலங்களை அதில் வரையறுக்க வேண்டும்.
உதாரணமாக, கூடத்தில் புத்தகம் படிக்கும் செயல்பாட்டு இடம், தென்கிழக்கில் ஜன்னலோரத்தில் .
கூடத்தில் தொலைக்காட்சி பார்க்கும் செயல்பாட்டு இடம், வடக்கில் நடுவில்
என்று அறையின் பல்வேறு செயல்பாட்டிற்கான இடங்களை பென்சலில் வரையறுக்க வேண்டும்.
இப்போது, இடத்தை ஒழுங்குபடுத்த நேரத்தை ஒதுக்க வேண்டும். எந்த ஒரு செயலுக்கும் நேரத்தை ஒதுக்காவிட்டால், நடைபெறுவது கடினம்.
உதாரணத்திற்கு, கூடத்தை ஒழுங்குபடுத்த, பின் வருமாறு நேரத்தை ஒதுக்கலாம்…
அந்த இடத்தின் தற்போதைய நிலை, அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டுமென்ற எதிர்கால நிலை என்ற தெளிவு கிடைத்தாகி விட்டது. அதனை இப்போது, SPACE (ஸ்பேஸ்) சாம்யத்தின்படி, செயல்படுத்த வேண்டும். அறையில் , ஒவ்வொரு மண்டலமாக இதனை செயல்படுத்த வேண்டும்.
உதாரணமாக, உடைகள் அலமாரியை எடுத்துக் கொள்வோம்.
ஆறு மாதங்களுக்கு, ஒரு வருடத்திற்கு ஒரு முறை, எல்லாம் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து, மண்டலங்களை சரியாக வைத்திருப்பது.
ஜூலி மார்ஜென்ஸ்டர்ன் அவர்களது மூன்று கட்ட நடவடிக்கைகளை வீட்டின் எல்லா அறைகளுக்கும், ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்த, வீடு முழுவதுமாக ஒழுங்காக இருக்கும். நீங்கள் முடிந்தால், அவர் எழுதியுள்ள புகழ்பெற்ற ஒழுங்குபடுத்துதல் உள்ளே வெளியே (organizing inside out) புத்தகத்தைப் படியுங்கள்.
நாங்கள் எங்களது குடும்பத்தில் இந்த முறையை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.