நடப்பதால்…

நடப்பதால்…
Published on

படித்ததில் பிடித்தது
வாசகர் ஜமாய்க்கிறாங்க!

ங்கள் கால்களை செயல்பாட்டிலும், வலுவாகவும் வைத்திருங்கள். வயதாகும்போது தலைமுடி நரைத்து, சருமம் தளர்ந்து, முகத்தில் சுருக்கங்கள் வந்தால் பயப்படக் கூடாது. உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால் உங்கள் உண்மையான கால் வலிமை பத்து வருடங்கள் குறையும். டென்மார்க்கில் உள்ள கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தின் ஒரு ஆய்வு முடிவு, முதியவர்கள், இளைஞர்களை வைத்து நடத்தியதில் செயலற்ற நிலையில் இருந்தால் கால்களின் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது, 20 – 30 வருடங்கள் முதுமையடைவதற்குச் சமம். எனவே, நடந்து செல்லுங்கள்.

மது முழு உடல் எடையை கால்களே தாங்குகின்றன. கால்கள் ஒரு வகையான தூண்கள். ஒரு நபரின் எலும்புகளில் ஐம்பது சதவிகிதம் மிகப்பெரிய வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகள் கால்களில் உள்ளன. வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் இரும்பு முக்கோணத்தை உருவாக்கி, மனித உடலைச் சுமக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் எழுபது சதவிகித மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல் (Burning the Calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. ஒரு நபர் இளமையாக இருக்கும்போது அவருடைய தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை. கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராகச் செல்லும். வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள்.

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல், வயதாகும்போது மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது. ஆகவே, நடந்து செல்லுங்கள். கூடுதலாக எலும்பின் உரமான கால்சியம் விரைவில் இழக்கப்படும். இதனால் எலும்பு முறிவிற்கு ஆளாகிறார்கள். பொதுவாக, வயதான நோயாளிகள் பதினைந்து சதவிகிதம் தொடை எலும்பு முறிவு பாதிப்பால் இறந்து விடுகிறார்கள். எனவே, தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள். கால்களை வலுப்படுத்துவதன் மூலம் ஒருவர் மேலும் வயதாவதைத் தடுக்கலாம்.

ங்கள் கால்களுக்குப் போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவு செய்து தினமும் குறைந்தது 30லிருந்து 40 நிமிடங்கள் நடக்க வேண்டும். கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது 60 வயதிற்குப் பிறகும்கூட தாமதமல்ல. வயதாகி விட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதுமான வேலை என்பதை உணர்ந்து நன்றாக நடங்கள்!
தகவல் : இந்திரா கோபாலன், ஸ்ரீரங்கம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com