ஆர். மீனலதா, மும்பை.வீடு ஏலமா? கம்பெனி ஏலமா? பொருட்கள் ஏலமா?இல்லை! இல்லை! இல்லை! பின் எதற்காக?.IPL டி- 20 கிரிக்கெட் விளையாட்டின் 15 ஆவது ஸீஸனிற்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்க பெங்களூருவில் மெகா ஏலம் இரு நாட்கள் (பிப்ரவரி 12, 13) பரபரப்பாக நடைபெற நேரடி ஒளிபரப்பானது தொலைக்காட்சியில்.உலகம் முழுவதும் பரவியிருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள (IPL) கிரிக்கெட் 'டி – 20' போட்டி மார்ச் மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அதற்காகத்தான் ஏலமோ ஏலம்!.புது பாணியில் ஆள் சேர்ப்பு.பழைய முறையில், அணிகள் பெரும்பாலான வீரர்களைத் தக்க வைத்து, சில புது வீரர்களை சேர்க்கும் வழக்கம் மாற்றப்பட்டு, 2 முதல் 4 வீரர்களை மட்டும் தக்க வைத்து, பல புதிய வீரர்களைச் சேர்க்கவேண்டுமென கூறப்பட்டது..புதியதாக லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் (அகமதாபாத்) இரு அணிகள் இணைய, மொத்தம் 10 அணிகள் ஆனது..பதிவு செய்யப்பட்ட 1214 வீரர்களில் இருந்து, 590 பேர்கள் அடங்கிய பட்டியல் அறிவிக்கப்பட்டது. (இந்தியர்கள் 370, வெளிநாட்டவர்கள் 220)நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலை மற்றும் வீரர்களின் எண்ணிக்கை2 கோடி – 481.5 கோடி – 201 கோடி – 34சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்குத் தலா 50 லட்சம், 40 லட்சம், 20 லட்சம் என அறிவிக்கப்பட்டன..நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள், கார்ப்பொரேட் மற்றும் பாலிவுட் நடிகர்/நடிகையர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இளைய தலைமுறையினரான ஆர்யன், சுகானா (நடிகர் ஷாருக்கானின் பசங்க); நடிகை ஜூஹி சாவ்லாவின் மகள் போன்றோரும் கலந்து கொண்டனர்..அணி மற்றும் தொகை பட்டியல்:.அணி தொகை:பஞ்சாப் -72 கோடிஐதராபாத் – 68 கொடிராஜஸ்தான் – 62 கோடிபெங்களுரு – 57 கோடி.மும்பை – 48 கோடிசென்னை – 48 கோடிகொல்கத்தா – 48 கோடிடெல்லி – 47.5 கோடிலக்னோ – 60 கோடிஅகமதாபாத் – 53 கோடி.சுவாரசியமான செய்திகள்:.ஆல்ரவுண்டரான இங்கிலாந்து வீரர் 'லியம் லிவிங்ஸ்டன்' ஐ, பஞ்சாப் கிங்ஸ் அணி 11.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. காஸ்ட்லியான வெளிநாட்டு வீரர்.ஆல் ரவுண்டரான சிங்கப்பூர் வீரர் 'டிமோதி ஹேல் டேவிட்' இன் அடிப்படை விலை 40 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட போதும், 8.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது பெரிய ஆச்சர்யம். சிங்கப்பூரானுக்கு அதிர்ஷ்டம்..கிரிக்கெட் வீரர் மகன், வேகபந்து வீச்சாளர், அதிரடி பேட்ஸ்மேன் 'அர்ஜூன் டெண்டுல்கரின்' அடிப்படை நிர்ணய விலை 20 லட்சம். ஒருவரும் ஆர்வம் காட்டாததால், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 30 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது..இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 'ஜோப்ரா ஆர்ச்சர்' முழங்கை வலி காரணம் கடந்த பல மாதங்களாக விளையாடவில்லை. ஓய்வில் இருப்பினும், ஏலத்தில் அவரை எடுக்க போட்டியோ போட்டி. இவரை எப்படியாவது வாங்கி விடமேன்டுமென்ற முனைப்பில், அடிப்படை நிர்ணய விலை 2 கோடி எனினும், 8 கோடி கொடுத்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ஆகிய 'இஷான் கிஷானை', மும்பை இந்தியன்ஸ் 15.25 கோடிக்கு வாங்கியுள்ளது..U-19 வீரர்கள் 'யாஷ் துல்'லை டெல்லி கேப்பிடல்ஸ் 50 லட்சத்திற்கும், 'ராஜ் அங்கத்'ஐ பஞ்சாப் கிங்ஸ் 2 கோடிக்கும், 'ராஜ் கர்தனை' சென்னை சூப்பர் கிங்ஸ் 1.5 கோடிக்கும் வாங்கினர். இவர்களின் அடிப்படை விலை 20, 40 லட்சம்தான்..590 பேர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து, முதல் நாள் 74, இரண்டாம் நாள் 130 ஆக மொத்தம் 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்..IPL வரலாற்றில் தேசிய அணிக்காக விளையாடாத 'ஆவேஷ்கான்'ஐ 10 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வாங்கியுள்ளது..முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் 10 கோடிக்கும் அதிகமாக, மேற்கொண்டு 4 கோடி கொடுத்து, 14 கோடிக்கு 'தீபக் சாஹரை' ஏலத்தில் எடுத்துள்ளது..முதல் நாளில் ஏலத்தில் எடுக்கப்படாத உமேஷ் யாதவ், மறுநாள் 2 கோடிக்கு எடுக்கப்பட்டார். இஷான் சர்மா, அமித் மிஸ்ரா, சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லா, ஸ்டீவன் ஸ்மித், மார்டின் கப்தில் போன்ற பல நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லையென்பது ஏமாற்றத்திற்குரிய விஷயம்.இப்படி பல – பல, பலே – பலே திருப்பங்களுடன் மார்ச்சில் IPL பார்க்கலாம்.