
"இவர் மன்னர் மகன் என்று எப்படி கண்டுபிடிச்ச?"
"அதான் புறா ஒலையை பார்த்தவுடனே பயந்து ஓடுறாரே!"
……………………………………………………………………….
"இவர் போலி டாக்டருன்னு எப்படி சோல்ற?"
"பணவீக்கத்தை குறைக்க வைத்தியம் பார்க்கப்படும்னு போர்டு வைத்து இருக்கார்."
……………………………………………………………………….
"நம்ம தலைவர் ரொம்ப நல்லவருன்னு எப்படி சொல்ற?"
"ஒவ்வொரு உண்ணாவிரத போராட்டத்திற்கும் தவறாமல் பிரியாணி போடுறார்."
……………………………………………………………………….
"எதுக்கு தலைவர் சலூன் கடையில் சண்டை போடுறார்."
"அங்கேயும் போய் கட்டிங் கேட்டுதான்."
……………………………………………………………………….
"என் மனைவி மேக்கப் பைத்தியம்…"
"அதுக்காக முகத்தில் மருதாணியை வைத்து சிவப்பாக நினைப்பது நல்லவா இருக்கு."
……………………………………………………………………….
"என் கணவருக்கு அறிவே இல்லை டாக்டர்…"
"அதை நாங்க ஸ்கேன் எடுத்து பார்த்துதான் சொல்ல முடியும்."
– மு. நிர்மலா தேவி, திண்டுக்கல்
……………………………………………………………………….
"தலைவரை பாலைவனத்துக்குக் கூப்பிட்டு போனது தப்பா போச்சு."
"ஏன்?"
"இவ்வளவு மணல் இருக்கு. அடுத்து இந்தத் தொகுதியில்தான் போட்டியின்னு சொல்லுறார்."
……………………………………………………………………….
"தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சு…"
"ஏன்?"
"நர்சு தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்து இருக்கார்."
……………………………………………………………………….
"நான் முதல்வராகிட்டேன்…"
"தலைவரே தூக்கத்துல உளராமல் படுங்க!"
-எஸ்.கே. செளந்தராஜன், திண்டுக்கல்