ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

ரூரில் நடந்த சம்பவம் இது நட்புகளே.. நாளிதழ்களில் செய்தியாவும் வந்துச்சு!

ப்ளஸ் ஒன் மாணவிகள் மூன்று பேர் , சாலையோரம் மயங்கிக் கிடந்துள்ளனர்! எழுப்பினால் ஃபுல் போதை!

"வைன் குடிச்சா, நல்ல கலரா ஆயிடலாம்"னு ஏதோ ஓர் ஆண் நண்பர், உசுப்பி விட்டதோடு, தனது அறைக்குக் கூட்டிக்கொண்டு போய், மதுவை ஊற்றிக் கொடுத்திருக்கிறார். (ர்' என்ன? கொடுத்திருக்கிறான்!) அது வெறும் மதுவா? அல்லது போதை மாத்திரை ஏதும் கலக்கப்பட்டதா? தெரியவில்லை.

அந்த பாய் ஃப்ரெண்டை கைது செய்தும், இந்த மூன்று முத்துக்களைக் கண்டித்து அறிவுரை சொல்லியும் அனுப்பி வைத்துள்ளது காவல்துறை!("ஒத்த ரோசா! ரொம்ப நல்லா பொண்ண வளர்த்துருக்க அம்மா!")

ந்த விஷயம் நடந்த அதே நட்சத்திரம், அதே திதி, அதே அமிர்த நாழிகையில்தான், தமிழ்நாடு எங்கும் போதைக்கு எதிரான விஷயங்கள் ஏராளமாக, தாராளமாக நடந்தேறின.

நமது தமிழக முதல்வர் கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் உட்பட!

"'ஆபரேஷன் கஞ்சா' என்னும் பெயரில் அதிரடி பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 'போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு' என டி.எஸ்.பி. பதவி உருவாக்கப்பட்டு, அந்தப் பிரிவு வலுப் படுத்தப்படும்" என்று முதலமைச்சர் அறிவித்தார்.

"இதை ஏதோ நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. நேர்மையான வர்களுக்குத்தான் நான் சாஃப்ட்! குறிப்பாக போதைப் பொருள் நடமாட்டத்திற்குத் துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன்" என எச்சரித்துள்ளார். நன்றி அய்யா!

'போதை ஓர் அழிவு; கல்வி ஒன்றே தீர்வு' என்றெல்லாம் பள்ளி மாணவர்கள் வெயிலில் கால் கடுக்க பேரணி, மாரத்தான் எல்லாம் நடத்திக்கொண்டு இருந்த அதே நேரம், 'விருமன்' பட ரிலீஸ்! அதுல ஒரு பாட்டு! ஆரம்ப வரி என்ன தெரியுமா?

'கஞ்சா பூவுக் கண்ணால' – ஒரு பொண்ணோட கண்ணு அழகா இருக்குன்னா, அதை வர்ணிக்க, எத்தனையோ பூ இருக்கே? அல்லி, குவளை, நீலத் தாமரை, பன்னீர் பூ, ஏன்… மான், மீன், பட்டாம்பூச்சின்னு எனக்கே தோணுதே! அதையெல்லாம் விட்டுட்டு, 'கஞ்சா பூவு'! பாடல் ஆசிரியர் கருமாத்தூர் மணிமாறன் எழுதினாலும், யுவன் ஷங்கர் ராஜாவோ, இயக்குநர் முத்தையாவோ மாற்றியிருக்க வேண்டாமா?

அட்லிஸ்ட் கார்த்தி? யாருக்கும் பொறுப்பு இல்லை!

சென்சார் போர்ட்டுலகூட ஒரு சின்ன மறுப்பு கூட சொல்லலை போல! கஞ்சாவுக்கு அப்புறம் என்ன? அபின்? ப்ரவுன் ஷுகர்! கொக்கைன்! லொட்டு… லொசுக்கு எல்லாத்தையும் எழுதி, யூத் க்யூரியாசிட்டியை கிண்டி விட்டா போச்சு! யார் கெட்டா என்ன?

"வேட்டைக்காரன்" படத்துல (விஜய்) 'கரிகாலன்' பாடலில் 'கஞ்சா வெச்ச கண்ணு' என்ற வார்த்தை வரும்போதே, சமூக ஆர்வலர்கள் கண்டித்து இருந்தால், ஆரம்ப வரியிலேயே 'கஞ்சா பூவு'ன்னு எழுத தைரியம் வருமா? எல்லாமே கேஷுவலா போச்சு! ஸோ… டேக்கிட் ஈஸி! பாலிஸி!

ந்த போதை வஸ்த்துக்களை பயன்படுத்த ஆர்வத்தைத் தூண்டும் கலாசாரம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது நல்லதல்ல என்ற சமூகப் பொறுப்புணர்வு எப்போது வரும்? வேதனையுடன் காத்திருக்கிறோம். 'பக்கத்து வீடுதானே தீப்பற்றி எரியுது!' என அலட்சியமாக இருந்துவிட முடியாது… சங்கிலிப் பாதிப்பு போல, எல்லா நன்மை – தீமையும் நம்மையும் பாதிக்கும்! அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் நிச்சயம் பலி ஆவார்கள். ஏனென்றால்… ஒரு தீயப்பழக்கம் எப்போதும் ஒற்றையாகப் போகாது!

இளைஞிகளே… 'SAY NO TO DRUGS…' Please!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com