வெல்டன் ஆஸ்திரேலியா!

வெல்டன் ஆஸ்திரேலியா!
Published on

டி – 20 உலகக் கோப்பை – 2021

– Sankalp Harikrishnan
Sankalp Harikrishnan
Sankalp Harikrishnan

சிசி டி20, 2021ம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை முதன் முறையாக வென்றிருக்கிறது ஆஸ்திரேலியா!
மிகச் சிறந்த அணியாகக் கருதப்பட்டாலும், ஆஸ்திரேலிய அணிக்கு டி20 உலகக் கோப்பை கனவாகவே இருந்தது. டேவிட் வார்னர், மார்ஷ் ஆகியோரின் அதிரடி
ஆட்டத்தால் டி
20 இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது ஆஸ்திரேலியா!

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் தலைமையில் வெற்றியை நோக்கி முன்னேறியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஜேசன் ராய், டைமல் மில்ஸ் இருவரும் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலக நேர்ந்தது. இது, இங்கிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.

பாபர் ஆசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி அபாரமாக ஆடி முன்னேறி, அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதி, தோல்வியைத் தழுவியது. கடந்த கால கிரிக்கெட் நாயகர்களான இந்திய மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளின் சிறப்பான விளையாட்டு, பார்க்கப் பார்க்க கண்கொள்ளாக் காட்சி. இந்திய அணிக்கு விராட் கோலியின் தலைமையில் நடந்த கடைசி டி20 போட்டி இது. நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளிடம் இந்தியா தோற்க நேர்ந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றமே.

டி20 கிரிக்கெட் என்றால் அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயில் மற்றும் பிராவோ இவர்களின் பெயர்கள் நிச்சயம் இருக்கும். கிரிக்கெட் ரசிகர்களின் ENTERTAINERS என்று சொல்லலாம். இவர்கள் நடப்பு டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள்.

ஐசிசி தொடர்கள் என்றாலே நியூஸிலாந்து அணி, 'அன்டர்டாக்ஸ்' என்ற ரீதியில்தான் ஒவ்வொரு போட்டியையும் கடந்து செல்கிறார்கள். இத்தொடரில் தொடர்ந்து நிலையான, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது நியூஸிலாந்து அணி. வில்லியம்ஸின் தலைமையில் டி20 அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதித் தோற்றாலும், அத்தோல்வியினை கண்ணியத்துடன் எதிர்கொண்டது நியூஸிலாந்து அணி.

மது அணி வீரர்களின் பலங்கள், பலவீனங்களை நன்கு அறிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு முழு ஆதரவும், ஊக்கமும் கொடுத்து தன் அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச்சின் (AARON FINCH) தலைமை மிகவும் பாராட்டுக்குரியது. இந்த மகத்தான வெற்றிக்கு அந்த அணியில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டேவிட் வார்னர் (DAVID WARNER), ஆடம் ஸாம்பா (ADAM ZAMPA) மற்றும் மிட்செல் மார்ஷ் (MITCHELL MARSH) இவர்களின் சிறப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ஜஸ்டின் லேங்கரைப் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். பேரார்வம் கொண்டவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை நேசிப்பவர். நம்பிக்கையும், பொறுமையும் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக, மிகுந்த அனுபவம் உடையவர். அவரின் பங்களிப்பும் மகத்தானது.

வெல்டன் ஆஸ்திரேலியா! வாழ்த்துக்கள்!!

தமிழாக்கம் : மங்கை ஜெய்குமார்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com