
"உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?"
"இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!"
-ஆர். மகாதேவன், திருநெல்வேலி
===================
"வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?"
"ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு பதிவாகிடுச்சாம்."
-எஸ். மோகன், கோவில்பட்டி
===================
"வோட்டுப் போட்ட அடையாள மையை நெற்றியில் வைத்தால் நல்லது."
"ஏன்?"
"ஆமாம், கொஞ்ச நாளைக்கு பொட்டு வைக்க வேண்டியதில்லை."
-எஸ். மோகன், கோவில்பட்டி
===================
"அபராதம் 118 ரூபாயா…அதென்ன கணக்கு?"
"18 ரூபாய் ஜி.எஸ்.டி."
-எஸ். மோகன், கோவில்பட்டி
===================
"பின், ஒடிபி நம்பர் இதை எல்லாம் யாரிடமும் சொல்ல மாட்டேன்."
"சொல்ல வேண்டாம். ஒரு பேப்பரில் எழுதி கொடு."
-எஸ். மோகன், கோவில்பட்டி
===================
"உங்க புத்தகம் இல்லாமல் எனக்கு தூக்கம் வராது."
"அப்படியா?""
"ஆமாம். அதை தலைக்கு வச்சாத்தான் எனக்கு தூக்கமே வருது."
-எஸ். மோகன், கோவில்பட்டி
===================
"கமலா டீச்சர் தன்னையே உரித்து மென்றார்."
"என்னடா சொல்றே?"
"கமலா பழம் திங்கறாங்கடா."
-ஆர். யோகமித்ரா