முத்துக்கள் மூன்று!

முத்துக்கள் மூன்று!
Published on
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்
இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர்

"கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.' என்கிறார் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் கே.கே. ஹரிதா. மீன்பிடி கப்பலின் கேப்டனுக்கு தான், 'ஸ்கிப்பர்' என்று பெயர்.

கேரள மாநிலம், ஆலப்புழா, எருமல்லுார் என்ற கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியான குஞ்சப்பனின் மகள்தான் இவர். மகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, கல்லுாரியில் மீன் வளத்துறை படிப்பில் சேர்த்தார், குஞ்சப்பன்.

இந்திய கடற்படையில் சேர விரும்பிய ஹரிதா, உடலமைப்பு அதற்கு ஏற்றபடி இல்லாததால் சேர முடியாமல் போனது. பின்னர் கொச்சியில் இருக்கும் Central Institute of Fisheries Nautical and Engineering Training (CIFNET) கல்லூரியில் மீன்பிடித்தல் மற்றும் கப்பல் அறிவியலில் (Fishing and Nautical Science) பட்டப் படிப்பை  முடித்தார்.

முதலில் பயிற்சிக் கப்பலான Prashikshani யில் கேப்டன் குழுவில் ஒருவராக 180 நாட்கள் பயணம் செய்தார். 2017ல் Mate of fishing vessels என்ற பரிட்சையில் தேர்ச்சி பெற்று, இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் அதாவது மீன்பிடி கப்பலின் கேப்டனாக ஆனார்.

கப்பல் பயணத்தை பற்றி குறிப்பிடும்போது, 'விடியற்காலையில், கடலிலும், வானத்திலும் தோன்றும் வர்ண ஜாலங்களை பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.' என்கிறார், ஹரிதா.

*****************************

 தடை தாண்டும் போட்டியில் தங்கம் 

சைப்ரஸ் நட்டின் லிமாசோலில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் (Cyprus International Athletics) இந்தியாவை சேர்ந்த வீராங்கனை ஜோதி தங்க பதக்கம் வென்றார்.

100 மீ தடை தாண்டும் போட்டியில் ஜோதி 13.23 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து இந்த தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

இதற்கு முன் தேசிய அளவில் அநுராதா பிஸ்வால் என்பவர் 2020 ல் தடை தாண்டும் போட்டியில் 13.38 வினாடிகள் என்ற அளவில் முதல் இடத்தில் இருந்தார். இப்போது ஜோதியராஜ் சர்வதேச அளவில் அதை விட குறைவான நேரத்தில் வென்றிருக்கிறார்.

*****************************

இயற்கைப் பொருட்களில் அழகு சாதனம் 

னது சொந்த பயன்பாட்டுக்காக, வீட்டு சமையல் அறையில் ஆரோக்கிய மான அழகு சாதனப் பொருட்களை உருவாக்கி வந்த ஹரிணி சிவகுமார் தற்சமயம் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் எர்த் ரிதம் (Earth Rhythm) என்னும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் பயன்படுத்தும் பொருட்களில் 99 சதவீதம் ரசாயனங்களும், பிளாஸ்டிக்கும் இடம்பெறுவது இல்லை என்பது சிறப்பு.

2015-ல் டெல்லியில் இருந்த போது சருமப் பிரச்னைகள் வராமலிருக்க வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரிக்க ஆரம்பித்த அழகு சாதனப் பொருட்கள் நல்ல பலன் தரவே, அதில் ஆர்வம் ஏற்பட்டு முறையாக  படித்து பட்டம்  பெற்றிருக்கிறார்.

பின்னர் இத்தகைய தயாரிப்புக்களை வீட்டிலிருந்தபடியே ஆரம்பித்து இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார்.

2019-ம் ஆண்டில் Earth Rhythm நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இதைத்  தொடங்கவும் வெற்றிகரமாக நடத்தவும் தன் தந்தை, கணவர், குழந்தைகளின் முழு ஆதரவும் தனக்கு கிடைத்து வருவதாக கூறுகிறார்.

இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 80 சதவீதம் பெண்கள்தான்.  சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களைத் தேடி, பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதோடு, ஆட்டிசம்  போன்ற குறைபாடு உள்ளவர்களையும் கண்டறிந்து அவர்களையும் பணியில் அமர்த்தியிருக்கிறார்.

நீண்ட தூரம் சைக்கிளிங் செய்வது தனக்கு ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும் என்பவர். இது போன்று பெண்கள் அனைவரும், தங்களுக்கென ஒரு பழக்கத்தை  அவசியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com