வியந்தது: சிங்கம் மேல் வந்த குமரகுருபரர்

வியந்தது: சிங்கம் மேல் வந்த குமரகுருபரர்
Published on
-ஜி. இந்திரா, ஸ்ரீரங்கம்

மீபத்தில் நம் பிரதமர் காசிக்குச் சென்றபோது அவரது உரையில் திரு மோடி அவர்கள் ராணி அகல்யாபாய் ஹோல்கரையும், சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங்கையும் குறிப்பிட்டுச் சொன்னார். அதில் விஷயம் இல்லாமல் இல்லை.

வேத காலத்திலிருந்து வழிவழியாய் இந்துக்களின் தலைநகராய் பொதுநகராய் இருந்தது காசி. பரந்து விரிந்த பாரத கண்டத்தில் அது புண்ணிய நதியான கங்கையின் ஓரத்தில் ஞானிகளாலும், ரிஷிகளாலும் அடையாளம் காணப்பட்ட புண்ணிய இடமாக இருந்தது. அதற்கான முதல் சவால் புத்த – சமண காலத்தில் வந்தாலும் பின்னாளில் அவை முறியடிக்கப்பட்டன. நிஜமான ஆபத்து ஆஃப்கானியர் இங்கே ஆளவந்தபோது நடந்தது.

ப்கானியர் ஆட்சியின் கருப்புப் பக்கம் தமிழகம் போன்ற மாநிலங்களில் தெரியாது. காரணம் நாயக்க இந்து மன்னர்கள் இங்கு வலுவாய் இருந்தார்கள். ஆனால், வடஇந்தியா அப்படி அல்ல. 1300 முதல் 1650 வரை மிகப் பெரிய இக்கட்டில் இருந்தது. இந்து அடையாளங்கள் இல்லாதபடி பலத்த மாற்றங்களும் அடையாள ஒழிப்பும் இருந்தன.

வீர சிவாஜி
வீர சிவாஜி

காசிக்கு இதில் முதலிடம் இருந்தது. அதை மீட்க கிளம்பியவன் வீர சிவாஜி. அவனுக்கும் காசிக்கும் பொருத்தம் அதிகம். ஆனால் வெகு சாமான்ய குடும்பத்தில் வந்த சிவாஜி, பிஜப்பூர் சுல்தானை அடக்கி அவரை ஒடுக்கி, பின் மொகலாயர்களுடன் மோதிய அவரது வீரமும், துணிச்சலும் மிகவும் அதிகம். அவன் படாதபாடுபட்டு கோட்டைகளை பிடித்தும் முடிசூட்ட முடியா தடை இருந்தது. கடைசியில் அவுரங்கசீப்பிடமிருந்து தப்பி காசியில் தலைமறைவாக திரிந்து மாராட்டியம் திரும்பிய பின்தான் சத்ரபதி என முடிசூட்டினான். காசிக்குச் சென்றபின்தான் அவனுக்கு முழு வெற்றி கிட்டியது. விதி வசத்தால் 50 வயதில் மரணமடைந்ததால் அவன் மகன் சாம்பாஜியினை அவுரங்கசீப் வீசி எறிந்தான். காசியில் அடையாள மாற்றங்கள் நடந்தன. அவுரங்கசீப்பால் சிவாஜி மகனை கொல்ல முடிந்ததே தவிர சிவாஜி ஏற்றி வைத்த இந்து எழுச்சியினை அடக்க முடியவில்லை. அலை அலையாய் எழுந்து மராட்டியர் அடித்த அடியில் மொகலாய வம்சம் அசைந்தது.

அவுரங்கசீப்பு
அவுரங்கசீப்பு

அவுரங்கசீப்புக்குப் பின் மெல்ல சரிந்தது. இக்காலக் கட்டத்தில்தான் அகல்யாபாய் ஹோல்கர் எனும் மராட்டிய வம்சத்து ராணி. சிவாஜி ஏற்றி வைத்த எழுச்சியில் உதித்த இந்து ராணி. அவள் கணவர் காண்டேராவ் ஹோல்கர் 1754ல் மொகலாயருடன் போரில் இறக்க ராணி முடி சூடினாள். இக்காலம் நம் கட்டபொம்மனுக்கு முந்தைய காலம். தெற்கே ராபர்ட் கிளைவ் கால் வைத்த காலம். சுமார் 30 ஆண்டு காலம் அவளின் சமஸ்தானம் அசைக்க முடியா பலத்துடன் இருந்தது. ராஜமாதா ஜீஜாபாயின் அவதாரமாக மக்கள் அவரை கொண்டாடினார்கள். அவள் நடத்திய வீரபோர்களால் காசி மராத்தியர் வசமாயிற்று.

அகல்யாபாய்
அகல்யாபாய்

சுமார் 700 ஆண்டுக்குப் பின் காசியில் இந்து ஆலயத்தை மீட்டவள் அகல்யாபாய் ஹோல்கர்தான். அவுரங்கசீப் உருவாக்கிய அனைத்தையும் கலைத்துப் போட்டாள். அவள் காலத்தில்தான் கங்கை படி கட்டப்பட்டது. ஆலயத்தின் பல விஷயங்கள் செய்யப்பட்டன.

காசி மட்டுமல்லாமல் மதுரா, சோமநாதபுரி என பல திருப்பணிகள் செய்தாள். சோமநாதபுரி ஆலயத்தில் முதல்விளக்கினை அவள்தான் ஏற்றி வைத்தாள். அவளின் 30 ஆண்டு ஆட்சி காலம் காசியின் பொற்காலம். வீரசிவாஜி கண்டிருந்த கனவை அவளே நிறைவேற்றினாள். காசி படித்துறையில் அவளுக்கு சிலை இன்றும் உண்டு.

ரஞ்சித் சிங்
ரஞ்சித் சிங்

அடுத்து மோடி குறிப்பிட்ட
சீக்கிய மன்னன்
ரஞ்சித் சிங்
இந்திய வரலாற்றை
மாற்றிப்
போட்டவன்.
கே ஹினூர் வைரத்தை
அவனே கையில்
கட்டியிருந்தான்.
காசியினை மீட்டு
எடுத்தான்.

சுமார் 1000 கிலோ தங்கத்தை கோயிலுக்கு கொடுத்தான். இதையெல்லாம் சொன்ன மோடி மகாகவி பாரதியாரையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

சுப்ரமணி பாரதி
சுப்ரமணி பாரதி

சுப்ரமணி பாரதியாக உருவானது காசியில்தான். "காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்" என்ற பாரதி வரிகளை காசியில் மோடி மேற்கொண்டார். பிரதமர் ஆலயம் மட்டும் திறந்து வைக்காமல் ஆலயத்தின் அடையாளங்களைப் பற்றியும் கூறியது சிறப்பானது.

ஆனால், காசியின் வரலாற்றில் குமரகுருபரரும் ஒருவர். முழு யோகியான அவர் காசியின் கொடுநிலை கண்டார். சுல்தானிடம் கேட்டபோது அவன் "சிங்கத்தின் மேல் வந்து உருது பேசினால் யோசிக்கலாம்" என பரிகாசம் செய்ய, மறுநாளே ஒரு சிங்கம் மேல் வந்து உருதில் அவர் வைத்த கோரிக்கையைக் கேட்டு அரண்ட சுல்தான் கோயிலை திரும்ப கொடுத்தான்.

குமரகுருபரர்
குமரகுருபரர்

அன்னை மீனாட்சியே
சிம்மமாக
வந்ததாக ஜதீகம். இது
காசியின்
வரலாற்றில் நடந்த அற்புதம்.
அந்த அற்புதத்தின்
தொடர்ச்சியாகத்தான் இன்றும்
தமிழக செட்டிகளே
அங்கு சந்தனம் அரைக்கும்
திருப்பணி செய்கின்றனர்.
காசி மீட்பில் குமரகுருபரரும்
நிச்சயம் நினைவுகூற
தக்கவர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com