
படங்கள்: பிரபுராம்
"தலைவருக்கு சீட் கிடைக்கலியாம்!"
"அதனால தேர்தல்ல நிக்க முடியலியா?""
"இல்லய்யா! பஸ்சுல உட்கார சீட் கிடைக்கல!"
– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்
………………………………………………………………………….
"நிஜமாகவே போருக்கு போறேன்னு குரல் கொடுத்துக் கொண்டே கிளம்புகிறாரே மன்னர்!"
"இத்தனை நாளும் போருக்குப் போவதாக சொல்லிவிட்டு வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொள்வாராம்."
– எஸ். பவானி, திருச்சி
…………………………………………………………………………..
"இவ்வளவு வருஷம் அரசியலில் இருந்தும் தன் பெயரில் சொத்து எதுவும் இல்லை என்கிறாரே தலைவர்!"
"நல்லா கவனிங்க… தன் பெயரில் இல்லைன்னுதான் சொல்கிறார்."
– எஸ். பவானி, திருச்சி
………………………………………………………………………….
"தலைவருக்கு பசி பொறுக்காதே, பின்பு எப்படி நாளைக்கு விரதம் இருக்கப் போவதாக சொல்கிறார்?"
"மெளன விரதம் இருக்க சாப்பிட தடையில்லையே…"
– எஸ். பவானி, திருச்சி
………………………………………………………………………….
"புழலைப் பார்த்தவன்னு எதிர்க்கட்சிக்காரன் சொல்றான். நான் திகாரையே பார்த்தவன் என்று அவன்கிட்ட சொல்லுங்கய்யா…"
"எதற்கெல்லாம் போட்டி போடுவது என்ற விவஸ்தை இல்லையா தலைவரே!"
– எஸ். பவானி, திருச்சி
………………………………………………………………………….
"கீழ்ப்பாக்கம் போகணும்னா எந்த ஆட்டோகாரனும் வர மாட்டேன்கிறானே!"
"முதலில் உங்க கிழிஞ்ச சட்டையை மாத்திட்டு கேளுங்க சார்.
– எஸ். பவானி, திருச்சி
………………………………………………………………………….
"நான் போரில் ஜெயித்த மாதிரி பாடச் சொன்னால் புலவர் முடியாது என்கிறார் அமைச்சரே…"
"புலவர் என்றால் கொஞ்சம் பொய் பேசுவாங்கதான். அதற்காக அண்டப்புளுகு, ஆகாச புளுகெல்லாம் சொல்ல மாட்டாங்க மன்னா."
– எஸ். பவானி, திருச்சி