அன்புவட்டம்!

அன்புவட்டம்!
Published on

தாலியைக் கழற்றி வைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதே!
– வாணி வெங்கடேஷ், சென்னை

ப்போதெல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே, பல நாகரிகப் பெண்கள் போடும் முதல் கண்டிஷனே என்னத் தெரியுமோ?

"கல்யாணத்துக்குப் பிறகு தாலி அணிய தன்னை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது" என்பதுதான்! "அன்பும் அக்கறையும் மனசுல இருந்தா போதாதா?" என்பது அவர்களது வாதம்.

நகர்ப்புறங்களில் வயதில் மூத்த பெண்களே, பியூட்டி பார்லர், ஜிம், ஸ்கேனிங் சென்டர், வெளியூர் பயணம் போன்றவற்றில் தாலியைத் தன்னிச்சையாக, எந்த மறுப்புமின்றி கழற்றி விடுகிறார்களே வாணி!

என்னைப் பொறுத்தவரை, 'தாலி' என்பது ஓர் மங்கல அடையாளம்! 'புருஷன்' என்பவன் அந்தச் சொல்லுக்குத் தகுதியான ஆண்மகனாக இருந்தால் மட்டுமே அது 'தாலி'! இல்லை என்றால் அது ஜஸ்ட் கயிறு! இன்னும் சில பெண்களுக்கோ, அது கழுத்தில் மாட்டப்பட்ட நிரந்தரச் சுருக்குக் கயிறு!

மனைவியின் தாலியை அறுத்து விற்று, சரக்கு அடிக்கும் ஆண்கள் உலவும் தரும பூமி இது அய்யா!

**************************

த்து அவதாரங்களில் உங்களைக் கவர்ந்த இரண்டு?
– மஞ்சு வாசுதேவன், பெங்களூரு

பெரியவங்க சொல்லியிருக்காங்களே, "எந்தக் கஷ்டம் வந்தாலும், "ராமா… கிருஷ்ணா"ன்னு இருன்னு! அப்போ நானும் அதைத்தானே வழி மொழிஞ்சாகணும்? ஆனா, எனக்கு ஓங்கி உலகு அளந்த உத்தமனும், சீரிய நரசிங்கமும் மேலான ஏற்றம் கொண்டவர்களாகத் தோன்றுகிறார்கள்.

மகாவிஷ்ணு முதன்முதலில் முழு மனித வடிவில் தோன்றியது
ஸ்ரீ வாமன அவதாரத்தில்தான்! பாலகனாகத் தோன்றி, பின் வானத்துக்கும் பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து, "வாக்கு கொடுத்தபடி மூன்றாவது அடியை எங்கே வைப்பது?" என்று மகாபலி சக்ரவர்த்தியிடம் கேட்டதும், அவரும் தலைவணங்கி, தன் சிரசின் மீது வைக்கும்படி கேட்டுக் கொண்டதும்… ஆஹா… அருமையான கட்டம்! அது மட்டுமில்லை…

பிற அவதாரங்களில் சம்ஹாரம் செய்த மகாவிஷ்ணு, இதில் மகாபலிக்கு பாத ஸ்பரிஸம் தந்து அனுகிரகமே செய்தார்!

பக்தனின் வாக்கினை மெய்யாக்க, திடீரென அவதரித்தவர் ஸ்ரீநரசிம்மர். இரணியனின் அரண்மனையில் இருந்த தூண்கள் 'நரசிம்ம கர்ப்பம் தரித்தன' என்கிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகர். பாலகன் பிரகலாதன் நம்பிக்கையோடு கூப்பிட்ட உடனே, ஜோதிமயமாக வெளிப்பட்டு, பின் "அடடா… குழந்தை பயந்து விடுவானே!" என்று உணர்ந்து சாந்த ஸ்வரூபியாகக் காட்சியளித்து மறைந்துவிடும் அற்புத வடிவமும் என்னைக் கவர்ந்ததே!

(இந்த பத்தியை நான் எழுதும்போது சம்பந்தமே இல்லாமல், பேபி ரோஜாரமணியும், எஸ்.வி.ரங்காராவும் கண்முன் தொன்றி மறைகிறார்கள்! அபச்சாரம்… அபச்சாரம்… நாராயணா… நாராயணா!)

**************************

னுவைச் சிந்திக்க வைத்த கவிதை ப்ளீஸ்?
– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்

'எலிக்கு எலிப்பொறி
கிளிக்குக் கூண்டு
எருதுக்குத் தொழுவம்
சிங்கத்துக்கு மிருகக் காட்சி சாலை
நாய்களுக்குச் சங்கிலி
மீன்களுக்கு வலை!

ஆக,
இப் பூ மண்டலம் மொத்தமும்
மனிதனின் பரம்பரைச் சொத்தா?
வீட்டில் குழந்தைக்குக் காய்ச்சலடித்தால்
கோழிக் குஞ்சுக்குச் சாவா?
ஊரில் பஞ்சம் வந்தால்
ஆடுகள் பலியா?
இவ்வுலகில்
பழங்கள் கனிவது
பறவைகளுக்காக இல்லையா?
பழம்… பறவை…
எல்லாமே உனக்குத்தானா…?'
-இது ஒரு தெலுங்குக் கவிதை… 'தனி கொள்ள பரணி' என்பவர் எழுதியது. மனிதனின் சுயநலம் பற்றிய இக்கவிதையை எப்போதோ படித்திருக்கிறேன். நிஜம்தான்! நம்முடைய ஆசைக்கும் அத்துமீறலுக்கும் எல்லையே இல்லை!

**************************

பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாவது ஏன்?
– கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

யார் சொன்னது ஹெச்.எம்.மேடம்? ஏதாவது நல்ல விஷயம் பண்ணணும்னா, கூட்டு சேர்ந்துக்கறாங்களே!

இப்ப 'கார்கி' படத்தையே எடுத்துக்கோங்க! வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ('பொன்னியின் செல்வன்'ல் 'பூங்குழலி'யாக நடிப்பவர்), இவர், தான் சொந்தமாகத் தயாரிக்கும் படத்தில், அதுவும் பெண்களின் பிரச்னையை உரத்தக் குரலில் பேசும் கதையில், தான் நடித்துப் பெயர் வாங்காமல், சாய்பல்லவிக்கு வாய்ப்பு கொடுத்து, அதை ஜோதிகா ரிலீஸ் செய்து, மாபெரும் ஹிட் ஆக்கியுள்ளனரே!

வால் செய்தி: ஒரு சிறுமிக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, தனியொருவளாகப் போராடி, நீதி தேடும் புதுமைப் பெண்ணாக சாய்பல்லவியின் நடிப்பு அற்புதம். நூறு ஆண்டு கால தமிழ் சினிமாவில் இப்படி ஒரு க்ளைமேக்ஸ் இதுவரை வந்ததில்லை என கொண்டாடுகிறார்கள்… ஒவ்வொரு பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்! புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் பெண்களே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com