ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
படங்கள்: பிள்ளை

"கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு வந்த தலைவர்கிட்ட குழந்தைக்குப் பேர் வைக்கச் சொன்னது தப்பாப் போச்சு!"

"என்னாச்சு?""

"'நோபால்'ன்னு பேர் வச்சிட்டார்."

– சி.ஆர். ஹரிஹரன், கேரளா

******************

"நான் சுயசரிதை எழுதலாம்னு இருக்கேன்யா!"

"வேண்டாம் தலைவரே… போலீஸ் வீடு தேடி வந்துடுவாங்க!"

– சி.ஆர். ஹரிஹரன், கேரளா

******************

"கடன் கொடுத்தா சொன்ன தேதியில ஒழுங்கா திருப்பிடுவியா?"

"வார்த்தை தவறினா, அடுத்த தடவை கடனுக்கு வரும்போது நீங்க விரட்டி விட்டுட மாட்டிங்களா சார்?"

– வி.ரேவதி, தஞ்சை

******************

"அவர் போலி டாக்டர்னு எப்படி உறுதியா சொல்றீங்க?"

"சுகர் டெஸ்ட்டுக்கு எவ்வளவு ஃபீஸ்னு கேட்டா, கிலோவுக்கு ரூ.500/-ன்னு சொல்றாரே!"

– வி.ரேவதி, தஞ்சை

******************

"டார்லி்ங்… நேத்து ஏன் பீச்சுக்கு வரல?"

"சாரி டார்லிங்… நேத்து எங்க வீட்டுலயே சுண்டல் செஞ்சிருந்தாங்க. அதான் வரலை…"

– இரா. அருண்குமார், புதுச்சேரி

******************

"ஏன்டா உங்க அம்மா இன்னிக்கு ரொம்ப சைலன்ட்டா இருக்காங்க?"

"லிப்ஸ்டிக்கிற்குப் பதிலா ஃபெவிஸ்டிக் எடுத்துக் கொடுத்துட்டேன்பா. அதான்…"

– இரா. அருண்குமார், புதுச்சேரி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com