– சேலம் சுபா.பெண்கள் நினைத்தால் எதுவும் மாறலாம் எதையும் மாற்றலாம். ஆனால் நினைக்க வேண்டும். சாதாரண நாப்கின்கள்தானே என்று நினைக்காமல் மாதம் மூன்று நாட்கள் நம்முடன் ஒன்றி இருக்கும் நாப்கின்கள் ஆரோக்கியமானதா என்றுயோசிக்க வேண்டும். நாப்கின் என்றால் அந்த பிராண்ட்தான் என்ற மைன்ட் செட்டை உடைத்து அதைவிட நல்லதை ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். சகபெண்கள் மீதான அக்கறை சென்னையை சேர்ந்த ஹானஸ்ட் பேட் நாப்கின் உரிமையாளர் அபிராமியின் பேச்சில் தொனித்தது..மிகப்பெரிய புகழ் பெற்ற குடும்பத்தின் மருமகளான அபிராமியின் பெண் நலம் சார்ந்த தொழில் முயற்சியைக் கேள்விப்பட்டதும் ஆச்சர்யம்தான் முதலில் எழுந்தது. அன்பான குடும்பம், நிறைவான பொருளாதாரம் அதிகமான அந்தஸ்து பாதுகாப்பான சூழல் இத்தனையும் கொண்ட ஒரு பெண் வெளியே வந்து தொழில் செய்வது என்பதே சவால்தானே? எப்படி வந்தது இந்த ஆர்வம்? அவருடன் பேசியதிலிருந்து…."வசதியான வீட்டில் பிறந்து வசதியான வீட்டுக்கு மருமகளாக வந்தாலும் எனக்குள் எப்போதுமே தனித்துவம் பெறவேண்டும் எனும் விருப்பம் உண்டு. என் தந்தையும் தாத்தாவும் எங்கள் சமூகத்தில் புகழ்பெற்ற தொழிலதிபர்கள். திருமணம் செய்து வந்ததும் அனைவரும் அறிந்த குடும்பம். இன்னாரின் பேத்தி இன்னாரின் மகள் இன்னாரின் மருமகள் இன்னாரின் மனைவி என்பதையும் தாண்டி தாத்தாவைப் போல் சிறந்த தொழிலதிபராக விளங்கி நான் யார் என்று என்பதை நிரூபிக்க எண்ணினேன். பொதுவாக வசதிகளும் பாதுகாப்பும் அந்தஸ்தும் உள்ள பெண்கள் பொதுவெளிக்கு வந்தால் இந்த சமூகம் அவர்களை"இவளுக்கென்ன வசதியாத்தானே இருக்கா? சம்பாதிக்கணும்னு ஆசைய பாரேன் என்றும் நல்லா ரெஸ்ட் எடுக்கிறதை விட்டுட்டு இப்படி வந்து வேலை செய்யணும்னு தலையெழுத்தா" என்றெல்லாம் கேள்விக்கணைகளை வீசும். நீங்கள் எது செய்தாலும் அதை விமர்சிக்க நாலு பேர் சுற்றி இருப்பார்கள். அதையெல்லாம் காதில் வாங்காமல் கடந்தால் மட்டுமே நம் சுயம் காக்கலாம்..என் திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் பிறந்து, ஒன்பது வயதிலும் ஐந்து வயதிலும் வளர்ந்து, என் நேரம் அதிகமாக கிடைத்தது. யோசித்தேன். இனி நான் எனக்கான அடையாளத்தை தேட முயற்சிக்க வேண்டும் என்று நினைத்து குடும்பத்தினரிடம் அனுமதி கேட்டேன். என் கணவர் மற்றும் என் புகுந்த வீடு அனைவரும் எனக்கு ஆதரவு தந்ததால் என்னால் இன்னும் உற்சாகத்துடன் தேடலில் இறங்க முடிந்தது..ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது மறு பிரவேசம். புகுந்த வீடும் பிறந்த வீடாக மாறும் பாக்கியம் பெற்ற பெண்கள் வரம் பெற்றவர்கள். அந்த வகையில் என் தந்தை இல்லாத குறையே தெரியாமல் என்னை பாசத்துடன் கவனித்து எனக்கு ஆதரவு தந்த கணவர் குடும்பத்திற்கு என் நன்றிகள். என் தாய் ராஜலட்சுமியையும் இங்கு குறிப்பிட வேண்டும் . கணவரை இழந்த நிலையில் எங்களை பண்பாக வளர்த்து நல்ல வாழ்க்கையைத் தேடித்தந்தவர். எனக்கு ரோல் மாடல்.பெண்களுக்கு முதல் பிரச்னை என்றால் அது மாதவிலக்குதான். நானும் அதில் விலக்கல்ல. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின் போது நாப்கின் மாற்றுவது என்பது எரிச்சல் தரும் விஷயமாக இருக்கும். அதிலும் வெளியிடங்களுக்கு செல்லும்போதும் பயணங்களின் போதும் இன்னும் அதிக வேதனை தரும் விஷயமாக மாறும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இளம்பெண்களை பாதிக்கும் ஒன்று. அரிப்பும் பிசுபிசுப்பும் துணியில் கறை படும் எனும் அச்சமும் நம் மனநிலையை மாற்றி அன்றாட வாழ்வையும் பாதிக்கும்..தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்ததுமே எனக்கு நான் சந்தித்த கிராமப்புற மாணவிகள்தான் நினைவுக்கு வந்தனர். காரணம் அவர்களில் சிலர் சொன்னது "அக்கா நாங்கள் இலைகளை தொன்னை போல் செய்து உபயோகிக்கிறோம். என்ன செய்வது? இது எங்களுக்கு கொஞ்சம் வசதியாக உள்ளது. வேறு வழியில்லை." நான் ஆச்சர்யப்பட்டேன். இவர்களுக்கு மாற்று முறையான மென்சுரல் கப் பற்றி கண்டிப்பாகத் தெரியாது. நாப்கினை விட இது போன்ற முறைகளில் அதை அப்புறப்படுத்துவது வெகு கடினம். மென்சுரல் கப்களை ஒவ்வொரு முறையும் சுடுநீரில் நன்கு கழுவிய பின்பே மீண்டும் உபயோக்கிக்க வேண்டும். ஆனால் இவர்கள் பராவயில்லை. அதை தூக்கி எறிந்துவிட்டு வேறு வைக்கிறார்கள். அவர்களாக யோசித்து இந்த முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். காரணம் பொருளாதாரம். யோசித்தேன்..கண்டிப்பாக தரமான அனைவரும் வாங்கக்கூடிய விலையில்தான் நாப்கின் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான தேடலிலும் பயிற்சியிலும் முயற்சியிலும் இறங்கினேன். ஹானஸ்ட் பேட் நாப்கின்களை அறிமுகப்படுத்தினேன். ஹானஸ்ட் என்றால் நேர்மை உண்மை. பெண்கள் பின் விளைவுகள் பற்றிய எந்த சந்தேகமும் இன்றி நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வகையில் இதை உருவாக்கி உள்ளோம். முக்கியமாக நாள் முழுவதும் பணியில் உள்ள பெண்களுக்கும் மாணவிகளுக்கும் எங்கள் ஹானஸ்ட் பேட் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் அரிப்பு ரேஷஸ் கிருமி பாதிப்புகள் போன்ற அசவுகரியங்களில் இருந்து கண்டிப்பாக விடுபடலாம்..சைனாவில் நடைமுறையில் உள்ள பாம்பூ சார்கோல் (Bamboo charcoal) முறையை இதில் கொண்டு வந்தோம். சார்கோல் மாதவிலக்கின் போது வெளிவரும் இரத்தத்தை உறிஞ்சி அந்த இடத்தை பிசுபிசுப்பின்றி வைத்துக்கொள்ள உதவுகிறது. பிசுபிசுப்பு இல்லாததால் அரிப்பு போன்றவைகள் தடுக்கப்படுகிறது. மேலும், அதிக ஜெல்லுடன் கொண்ட காட்டன் அடுக்குகளை கொண்டதால் முதல் அடுக்கில் இரத்தம் விழத் துவங்கியதுமே அதை உள்ளிழுத்து ஈரப்பதத்தை தடுக்கிறது. இதனால் பெண்கள் நாள் முழுவதும் தங்கள் பணிகளை மாதவிலக்கு எனும் நினைவே இன்றி அன்றாட நாட்களைப்போல கடந்து செல்ல முடியும்..சென்ற வருடம் நவம்பரில் இந்த நாப்கினை அறிமுகப்படுத்தி சென்னை மகாலிங்கபுரத்தில் இதற்கென தனி அலுவலகம் துவங்கி இளம் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தேன். துவங்கியாயிற்று சரி, இதை எப்படி சந்தைப்படுத்துவது? மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? சவால் காத்திருந்தது..என்னதான் நல்ல பொருள் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ள அவ்வளவு சீக்கிரம் யாரும் முன் வருவதில்லை. பழகிப்போன பிராண்டு வகைகளை விட்டு விட்டு புதிய வகையை ஏற்பதில் மனத்தடை. இந்த மைன்ட் செட்டை மாற்றினால்தான் எந்த ஒரு நல்ல தயாரிப்பும் வரவேற்பைப் பெறும்..நம் தயாரிப்பின் தரத்தை நம்மால் நிரூபிக்க முடிந்தால் நிச்சயம் மக்கள் நம் பக்கம் திரும்புவார்கள். என்ன அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்.திறமையுடன் பொறுமையும் எந்தத் தொழிலுக்கும் அவசியம் தேவை. அதிலும் இது பெண்கள் சம்பந்தப்பட்டது என்பதால் அதிக கவனத்துடனே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தோம். எந்த ஒன்றையும் முதல் முறையாக உபயோகிக்க வைக்கவே முயற்சி தேவை. காசு போட்டு வாங்குவதை விட சாம்பிள் பீஸ் என்று இலவசமாகத் தந்து எங்கள் நாப்கினின் தரத்தை புரிய வைத்து வருகிறோம். அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் இதை ரீடெயில் மார்க்கெட்டுக்கு கொண்டு வரத்திட்டம்.".இலவசம் எனும் அஸ்திரம் தொழிலில் வரும் சவாலை முறியடிக்க அபிராமிக்கு கை தந்துள்ளது. அதெல்லாம் சரி. எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் தங்களுக்குள் இருக்கும் தனித்தன்மையை உணர்ந்து செயலில் இறங்கினால் கண்டிப்பாக அனைவரும் சுயமாக சாதிக்கலாம்..தங்களுக்கென்று முகவரியை உருவாக்கலாம் என்று நிருபித்திருக்கும் அபிராமி யார்? மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரன் துஷ்யந்த்தின் மனைவி என்பது சிறப்பு.