கவிதைத் தூறல்!

கவிதைத் தூறல்!
Published on
-பி.சி. ரகு, விழுப்புரம்
விலைவாசி!

வரெஸ்ட் சிகரத்தை விட
எல்.ஐ.சி., பில்டிங்கை விட
அரசியல்வாதிகளின்
கட்-அவுட்களை விட
உயர்ந்து நிற்கிறது
விலைவாசி!

****************************************

முதிர்கன்னியின் வேண்டுகோள்!

தென்றலே
என் மீது வீசாதே!
தேதிகளே
என் வயதை நினைவுபடுத்தாதே!
பூக்களே
எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள்
புதுமணத் தம்பதிகளே
என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்…
குறைந்த விலையில்
எனக்கொரு மாப்பிள்ளை
கிடைக்கும் வரை.

****************************************

பாவம்!

வீடு கட்ட
மரம் வெட்டப் போனேன்…
வெட்டாமலே திரும்பிவிட்டேன்
மரத்தில் குருவிக்கூடு!

****************************************

வேண்டுகோள்!

டிகார முட்களே
மெல்ல நகருங்கள்
பேசிக் கொண்டிருக்கிறேன்
காதலியிடம்!

****************************************

ஏன்?

தேர்வு நேரத்தில்
புன்னகைக்காதே என்றேன்
பார்த்தாயா பெண்ணே…
வினாக்களுக்கு
விடை எழுதாமல்
கவிதை எழுதிக்கிடக்கிறேன்!

****************************************

வேதனை

த்தனை விலையுயர்ந்த
கண்ணாடிகள்
வாங்கி வந்தும்
அழகாய் காட்டவில்லை
என் முகத்தை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com