வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.மங்கையர் மலர் வாசகீஸ் FB பகிர்வு! .மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இல்லாமல் முகம் பொலிவு பெறும். எருக்கன் பூக்களை வதக்கி வீக்கம். கட்டி.மீது வைத்து கட்டினால் குணமாகும். அகத்தி பூக்களை உணவில் சேர்த்துக் கொண்டால் கண் எரிச்சல் தலை சுற்றல் நீங்கும். ஜாதி மல்லி பூக்களை அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் மறையும். சாமந்தி பூக்கள் காய்ந்ததும் அரைத்து பூச தோல் நோய்கள் சரியாகும்.–வாணி கணபதி.செம்பருத்தி:வீட்டில் பூக்கும் செம்பருத்திபூவை சுவாமிக்கு வைத்து விட்டு மறுநாள் அதை எடுத்து வெந்நீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடித்தால் இதயத்தில் இருக்கும் அடைப்புகள் நீங்கி ரத்த ஓட்டம் சீராகும்.இதை நான் தினமும் செய்து வருகிறேன் இதனால் நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.– உஷா முத்துராமன்.செம்பருத்திப் பூக்கள் நிறைய கிடைக்கும் போது இதழ்களை சுத்தமான துணியால் துடைத்து காயவைத்து மிக்ஸியில் பவுடராக்கவும்.வேண்டிய அளவு எடுத்து பசும்பால், கடலை மாவு,தேன் சேர்த்து முகத்திற்கு பேக் காகப் போட்டால் முகம் பொலிவுறும். -விஜி சம்பத்.*******************************.ஆவாரம் பூ:ஆவாரம் பூவை தினமும் 1/2 கைப்பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு அரை டம்ளராக வற்றியவுடன் வடிகட்டி வாரம் 2 முறை குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.– சரஸ்வதி ஸ்வாமிநாதன், கோமதி சிவாயம்..*******************************.வேப்பம் பூ:வேப்பம் பூவை வாரம் ஒரு முறை வறுத்து சிறிது உப்பு சேர்த்து பொடி செய்து சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல், வயிற்று உப்புசம், முதலியவற்றுக்கு தீர்வு கிடைக்கும். வயிற்று பூச்சிகள் இருந்தால் குணம் கிடைக்கும்.-பிரேமா சூரியநாராயணன்..வேப்பம் பூ,சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் மூன்றையும் சம அளவு எடுத்து வாணலியில் லேசாக வறுத்து விட்டு சிறிது உப்பு சிறிதளவு பெருங்காயம் ஒரே ஒரு மிளகாய் வத்தல் வைத்து பொடி செய்து உதிரியான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் பித்தம் போன்றவை நீங்கி நல்ல ஜீரண சக்தி வரும்.-உஷா முத்துராமன் மதுரை..வேப்பம் பூவையும் வதக்கி தயிர் சேர்த்து பச்சடி போல் சாப்பிட்டால் வயிற்று பிரட்டல் தலை சுற்றல் பித்தம் முதலியவைகள் நீங்கும்.-வசந்தா கோவிந்தன்.*******************************.முருங்கைப் பூ:முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, 1/2 தேக்கரண்டி பொடியுடன் சிறிது தேன் சேர்த்து, தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய் தீரும். கண்கள் பிரகாசம் அடையும். நரம்புகள், எலும்புகள் வலுப்பெறும்.-ஜகதாம்பாள்.*******************************.மருதாணிப் பூ:உறக்கம் இன்றி தவிப்பவர்கள் மருதாணிப் பூவை பறித்து ஒரு துணிப்பையில் வைத்து அதன் மேல் தலை வைத்து உறங்கினால் உறக்கம் நன்றாக வரும்.– அன்பு பாலா.*******************************.மல்லிகைப் பூ:மல்லிகைப் பூவிற்கு தலையில் உள்ள கெட்ட நீரை உறிஞ்சும் சக்தி உண்டு எனவே சூடிய மலரை இரவு தலைக்கு வைத்துக் கொண்டை போட்டுக் கொண்டு படுத்தால் காலையில் மணமான கூந்தலுடன்… மேற்படி பலனும் கிடைக்கும்..தாய்ப்பால் தருவதை நிறுத்தும் பொழுது மார்பகங்களில் பால் கட்டிக் கொண்டு, கனத்துப் போய் வலி எடுக்கும். அப்போது மல்லிகைப் பூக்களை மார்பில் வைத்துக் கட்டினால் வலி குறையும்.– பிருந்தா.*******************************.ரோஜா பூ:சாதா ரோஜாவின் இதழ்களை ஒரு லேயர் அதன் மேல் தேனை ஊற்றி..அதற்கு மேல் இன்னொரு லேயர் என்ன மாறி மாறி வைத்து ஜாடியில் அப்படியே வைத்து விட்டால் ..ஓரிரு மாதத்திற்கு பின் நல்ல குல்கந்து கிடைக்கும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி.-தி.வள்ளி, திருநெல்வேலி.ரோஜா இதழ்களை அரைத்து, சர்கரையோ வெல்லமோ சேர்த்து நெய் விட்டுக் கிளறி குல்கந்தாக செய்து சாப்பிட்டால் மூல வியாதிகள் குணமாகும்!-வசந்தா கோவிந்தன்..பன்னீர் ரோஜாப்பூக்களை காய வைத்து குளியல் பவுடர் மருதாணி,முல்தாணிமட்டி ,சந்தனம்,பச்சைப்பயிறு ,இவற்றோடு சேர்த்து அரைத்து பயன்படுத்த உடல் குளிர்ச்சியாகும், வியர்வை துர்நாற்றம் நீங்கி சர்மம் பொலிவோடு விளங்கும்.-செண்பகம் பாண்டியன்..ரோஜா பூவின் இதழ்களை பாலில் வேக வைத்து இதழ்களுடன் பாலையும் சேர்த்து மூன்று வேளை அருந்த உடல் உஷ்ணம்,வாயு மற்றும் அதனால் அடிக்கடி வரும் ஏப்பம் உடனே மறையும்.– ராதா நரசிம்மன்.ரோஜா இதழ்களை அலம்பி, சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீர் வற்றியதும் வெல்லம், ஏலப்பொடி, கிராம்பு பொடி போட்டு கிளறி, ஆறியதும், காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து, தினமும் உணவுக்கு பின் வெற்றிலையுடன் உண்டால், உடல் சூடு, குடல் எரிச்சல், ஜீரண கோளாறு, மலச்சிக்கல் முதலியவற்றிலிருந்த் நிவாரணம் கிடைக்கும்.-ஜெயஸ்ரீ சாய்நாத்.நாட்டு ரோஜா இதழ்களை எடுத்து நீரில் அலம்பி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, உடலைக் குளிர வைக்கும் துர்நாற்றம் நீங்கும். வாய்ப்புண்களை தடுக்கும்.-மீனாலதா.*******************************.மகிழம் பூ:காய்ந்த மகிழம்பூக்களை பொடிசெய்து கைக்குட்டையில் கட்டி தலையணை உறைக்குள் வைத்து விடலாம். அந்தத் தலையணையில் படுத்துத் தூங்கினால் ஒற்றைத் தலைவலி போய்விடும்– பிரேமா ரமணி..*******************************.வாழைப் பூ:வாழைப் பூ இடித்து சாற்றை உண்டு வர கர்ப்பப்பை கோளாறு நீங்கும்.– ஸ்ரீவித்யா கணேசன். *******************************.அன்னாசிப் பூ:அன்னாசிப்பூவை பொடி பண்ணி தினம் மூன்று வேளைகள் ஒரு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் நன்றாகப் பசி எடுக்கும். பசியில்லை என்று புலம்புபவர்கள் இதை முயற்சி செய்யலாம்.-ஹேமலதா சீனிவாசன்.