ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
ஒவியம்: பிரபுராம்

"மாமியாரும் மருமகளும் கறுப்பு கோட் மாட்டிக்கிட்டு ஏன் சண்டை போடறாங்க?" 
"இரண்டு பேருமே வக்கீல்டி!
ஆர். மகாதேவன், திருநெல்வேலி.
………………………………………………………..

 "நாலு பவுன் நகை, ரொக்கம் பத்து லட்சம் இதையெல்லாம் வீட்டுல வச்சுட்டு வந்துட்டியே பயமில்லையா?" 
"பக்கத்து வீட்டு ரெய்டு நடக்கறதால பயமே இல்ல…" 
பி. நிர்மலா தேவி, ஈரோடு.
………………………………………………………..

"வோட்டுக்குப் பணம் கொடுப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குறீங்களே…?" 
"நாங்க சிறப்பு பார்வையாளர்கள்." 
எஸ். மோகன், கோவில்பட்டி.
………………………………………………………..

"உன் வீட்டுல கொரோனா கட்டுப்பாடு தளர்வு நடைமுறைக்கு வந்தாச்சா?" 
"வந்தாச்சு! ஆன்லைன் மூலமா சண்டை போட்டுக் கொண்டிருந்த என் மாமியாரும் நானும் இப்போ நேர்ல சண்டை போடுறோம்!" 
கு. அருணாசலம், தென்காசி. 
………………………………………………………..

 "முதல் குழந்தை பேரு கோவேக்சின். இரண்டாவது கோவிஷீல்டு." 
"பலே…" 
"மூணாவது குழந்தை பெயர் டோலோ." 
ஆர். யோகமித்ரா, சென்னை.
………………………………………………………..

"வாழ்வில் ஒருமுறையாவது போரை பார்த்துடணும் மந்திரி?" 
"அதுக்கு மாறு வேடத்தில்தான் போர்களம் போகனும் அரசே!" 
ஆர். சுந்தரராஜன், சிதம்பரம்.
………………………………………………………..

 "நடந்து போயிட்டிருக்கும்போது பொண்டாட்டிகிட்டேயிருந்து போன் வந்தா நின்னு பேசு!" 
"ஏன்?" 
"நம்மளப் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு நடக்கிறவன்னு யாரும் சொல்லிடக் கூடாது பாரு… அதுக்குத்தான்!" 
எஸ். கெஜலட்சுமி, லால்குடி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com