கவிதைத் தூறல்!

கவிதைத் தூறல்!
Published on
என்றும் காதலர் தினமே!                                     

வசர உலகத்தில்
ஆனந்தமாக தன் காதலை
இயல்பாக தினம்
ஈதல் மனதுடன்
உள்ளம் திறந்து
ஊக்கத்துடன் சொல்லி
என்றுமே நான் உன் காதலன்தான்.
ஏன் காதலர் தினம்? என
ஐயத்துடன் அந்த
ஒருநாள் மட்டும் சொல்ல வேண்டும்
ஓதாமல் இருக்க வேண்டாம் என
ஔவை பாட்டி சொன்னது போல
எஃகு போல உறுதியுடன்
தினம் தினம் காதலைச் சொல்வோம்
அதுவே உண்மையான காதலர் தினம்.
 – உஷாமுத்துராமன், திருநகர்

குயில் குஞ்சும் பொன் குஞ்சு! 

குயில்களின் முட்டைகளுக்கு,
காக்கைகளின் கூடு ஒரு  இன்குபேட்டர்…
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்,
பழமொழி காக்கைகளையும்
விட்டுவைக்கவில்லையோ ?

மொட்டுகள்!
மிதிபட்ட மொட்டுகளின்
விரிந்த இதழ்கள்…
திருக்குறளை நினைவுபடுத்தின
இடுக்கன் வருங்கால் நகுக!'
– ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com