ஜானகி பாட்டியின் நெகிழி ஜாலம்!

ஜானகி பாட்டியின் நெகிழி ஜாலம்!
Published on
-தனுஜாஜெயராமன்

சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் திருமதி. ஜானகி விஸ்வம் அவர்கள் 92 வயதைக் கடந்தவர். இந்த வயதிலும் தற்போது வரை பல்வேறு கைவினைப் பொருட்களை செய்து பலரையும் அசத்தி வருகிறார். எந்த ஒரு பொருளிலும் கைநயத்தைக் காணும் ஜானகி பாட்டி, தற்போது வீணாய் கிடக்கும் நெகிழி பைகளை வைத்து கைவினைப் பொருட்களை செய்து வருகிறார். ஜானகி பாட்டியின் நங்கநல்லூர் வீடு முழுவதும் அவரது கைவண்ணத்தில் மிளிர்கிறது. நாம் அவருடன் பேசியதிலிருந்து…

உங்களை பற்றி சொல்லுங்க…
னது சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி. நான் பிறந்து வளர்ந்தது  எல்லாமே திருச்சி தான். திருமணத்திற்குப் பிறகு கணவரின் பணி காரணமாக  கொல்கத்தாவில் வசித்து வந்தேன். தற்போது சென்னையில் வசித்து வருகிறேன்.

கிராஃப்ட் செய்வதில் உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?

னக்கு சின்ன வயதிலிருந்தே கண் பார்த்தா கை செய்துவிடும் பழக்கம். எப்போதுமே சின்னச் சின்ன கைவினைப் பொருட்களை செய்துகிட்டிருப்பேன். நான்  கொல்கத்தாவில் இருந்த போது அங்கே முட்டையில் கைவினை பொருட்கள் செய்வதை  கூட கற்றுக்கொண்டேன். முட்டை ஒடுகளை சுத்தம் செய்து, அதில் ஓவியங்கள் வரைவது. முட்டைக்கு துணிகளை மாட்டி அதை பொம்மைகளாக உருவாக்குவது போல  செய்ய கற்றுக்கொண்டேன்.

என்னென்ன கைவினைப் பொருட்கள் செய்யத் தெரியும்  உங்களுக்கு?
யர் கூடைகள் பின்னுவது, க்ரோஷா ஒயரில் பல்வேறு கூடைகளையும் பவுச்களையும் பின்னுவது  இது இரண்டுமே எனது விருப்ப கைவினை செயல்பாடாக இருந்தது. பின்னர் உல்லன் நூலில் ஸ்வெட்டர் பின்னுவதை ஆர்வமாக கற்றுக்கொண்டேன் . பிறகு முத்துகள் மணிகளைக் கொண்டு பல்வேறு கைவினைப் பொருட்களை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தேன். குழந்தைகளுக்கான டெட்டி பியர்களை கூட வீட்டிலேயே செய்துவந்தேன். தற்போது  வீணாகும் நெகிழி பைகளைக் கொண்டு கைவினைப் பொருட்களை செய்து வருகிறேன்.

நெகிழி பைகளில்  கைவினைப் பொருட்களா?  எப்படி செய்வீர்கள்?
ஒரு நாள் கடையிலிருந்து  பொருட்கள் வாங்கிய நெகிழி பைகளைப் பார்த்ததும் இதில் கைவினைப் பொருட்களை செய்து பார்த்தாலென்ன என்ற யோசனை தோன்றியது. உடனே அதற்கான முயற்ச்சிகளை தொடங்கிவிட்டேன். நான் முதலில் நெகிழி பைகளை  அரிந்து  ஒரு நூல் பந்து போல செய்துக் கொள்வேன். ஏற்கனவே க்ரோஷா மற்றும் ஓயர்களை பின்னிய அனுபவம் எனக்குக் கைகொடுத்தது.  நான் நெகிழியை   பின்னி சாமி படங்களுக்கான அழகிய மாலைகளை செய்து வருகிறேன். வீட்டு உபயோகத்திற்காக டேபிள் மேட் , டோர் மேட் போன்றவற்றை செய்து வருகிறேன். மொபைல் வைக்கும் பவுச்கள் ,  கைபைகள் எனவும் செய்கிறேன்.

இதனை தொழிலாக செய்யும் எண்ணம் இருக்கிறதா?
ற்போது வயதின் காரணமாக இதனை தொழிலாக செய்யும் எண்ணம் வரவில்லை. இந்தப் பொருட்களை வீட்டு நபர்களுக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பரிசாக மட்டுமே அளித்து வருகிறேன். எதிர்காலத்தில் யாராவது என்னிடம் கற்றுக்கொண்டு தொழிலாக செய்ய முயலலாம்.

நீங்க கைவினை கலைகளை மற்றவர்களுக்கு சொல்லி தருகிறீர்களா?
ர்வமாக கேட்டு வரும் அனைவருக்கும் கற்றுத் தருகிறேன். வீட்டில் மகளுக்கும் பேத்திகளுக்கும் கற்றுத்தந்தேன். வெளிநபர்கள் பலரும் கற்க ஆர்வமாக வருகின்றனர்.

இதைத்தவிர உங்களது பொழுதுபோக்கு ?
ல்வேறு கடவுள் உருவங்களையும் , பறவைகளையும் வரைவதில் ஆர்வம் உண்டு. ஓய்வு நேரங்களில் பல படங்களை வரைந்து வருகிறேன்.

உங்கள் குடும்பம் பற்றி?
னக்கு மூன்று மகன்கள் , மூன்று பெண்கள். நான் தற்போது கூட்டுக் குடும்பமாய் என் மகன்களுடன் வசித்து வருகிறேன். அனைவருமே நான் கைவேலைப் பொருட்கள் செய்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறார்கள். என்னை மிகவும் உற்சாகப் படுத்துகிறார்கள்.

ஜானகி விஸ்வத்தின் மகனான திரு.வெங்கடேஷ் அவர்களை பேசியதிலிருந்து….
ம்மா 92 வயதிலும் சுறுசுறுப்பாக வளையவருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வயதிலும் தனது வேலைகள் அனைத்தையும் தானே செய்து வருகிறார். ஓய்வு நேரங்களில் பயனுள்ள பல கைவினைப் பொருட்களை செய்து வருகிறார். இவரது கைவினைப் பொருட்களை பரிசாக பெற்றவர்கள் வெகுவாக பாரட்டி வருவது  எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  அம்மாவைப் பற்றி  கேள்விபட்ட பலரும் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்தி வருகின்றனர். மேலும்  அம்மாவின் பிறந்தநாள் வரும் ஏப்ரல் மாதம்  வரப்போகிறது. அவரது இந்த 93 வது பிறந்த நாளை வெகுச் சிறப்பாக கொண்டாடப்  போகிறோம்.

ஜானகி பாட்டியின்  கலை ஆர்வமும், ஆயுளும் மென்மேலும் வளர கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என வாழ்த்தி வணங்கி விடைபெற்றோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com