பணம்!

பணம்!
Published on
.பூங்கோதை, செங்கல்பட்டு

ணமே உனக்குத்தான் எத்தனைப் பெயர்கள்

ர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை
கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை
யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை
ல்விக்கூடங்களில் கட்டணம்
திருமணத்தில் வரதட்சணை
திருமண விலக்கில் ஜீவனாம்சம்
விபத்துக்களில் இறந்தால் நஷ்ட ஈடு
ழைகள் கேட்டுக் கொடுத்தால் தர்மம்
நாமாக விரும்பிக் கொடுத்தால் தானம்


திருமண வீடுகளில் பரிசாக மொய்
திருப்பித் தர வேண்டும் எனக் கொடுத்தால் கடன்
திருப்பித் தர வேண்டாம் என்றால் அன்பளிப்பு
விரும்பிக் கொடுத்தால் நன்கொடை
நீதிமன்றத்தில் செலுத்தினால் அபராதம்
ரசுக்குச் செலுத்தினால் வரி
ரசுப் பொது தர்ம ஸ்தாபனங்களுக்குக் கொடுத்தால் அது நிதி
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம்
தினமும் கிடைப்பது கூலி
ணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம்
ட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் லஞ்சம்
டன் வாங்கினால் அத்தொகைக்கு அசல்
வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும்போது வட்டி
தொழில் தொடங்கும்போது போடும் அதற்கு முதலீடு
தொழிலில் கிடைக்கும் வருமானமோ லாபம்
குருவிற்குக் கொடுப்பது குருதட்சணை
ஹோட்டலில் நல்குவது டிப்ஸ்
பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக
வேறொன்றும் இப்புவியில் இல்லை!
இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற

சிலர் அன்பை இழக்கின்றனர்
சிலர் பண்பை இழக்கின்றனர்
சிலர் நட்புகளை இழக்கின்றனர்
சிலர் உறவுகளை இழக்கின்றனர்
சிலர் கற்பை இழக்கின்றனர்
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்
ப்படிப் பலர் தம் வாழ்க்கையையே இழக்கின்றனர்.

பணமே,
ன் உனக்கு இந்த வேலை?!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com