உடலை வில்லென வளைக்கும் யோகா சிறுமி!

உடலை வில்லென வளைக்கும் யோகா சிறுமி!
Published on
-தனுஜா ஜெயராமன்

சாக்லேட் உண்ணும் வயதில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறாள் தமிழகத்தை  சேர்ந்த சிறுமி தமிழினி. தற்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டே உலக அளவில் பல்வேறு யோகா போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை அள்ளி வரும் தமிழினி சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கிறார். உடலை வில்லென வளைத்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி யோகாவில் கலக்கி வரும் தமிழினியின் தந்தை ரஜினி நம்மிடம் பேசியதிலிருந்து…

தமிழினி யோகா பயிற்சியை ஆரம்பித்தது எப்போது?

மிழினி கடந்து ஐந்து வருடங்களாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாள். தற்போது பதினோரு வயதாகும் தமிழினியை அவளது ஆறாவது வயதில் யோகாவில் சேர்த்து விட்டோம். அவளுக்கு சிறு வயதில் ஏற்பட்ட வீசிங் ப்ரச்சனை காரணமாக மருத்துவரின் அறிவுரைப்படியே யோகாவினை கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். பிறகு அதில் தமிழினி காட்டும் அதீத ஈடுபாடுகளை கண்டு நாங்களும் அவளது யோகா குரு விஜய மோகன் ராவ் அவர்களும் அவளை பல்வேறு போட்டிகளுக்காக தயார்படுத்தினோம். அவள் கலந்துகொள்கிற அனைத்துப் போட்டிகளிலும் தமிழினி பரிசுகளை பெற்று வருகிறாள் என்பது மகிழ்ச்சியாக மற்றும் பெருமிதமாக இருக்கிறது. தற்போது அவளது வீசிங் பிரச்சனையும் முற்றிலுமாக குணமாகி விட்டது. அதனால் உலக அளவிலான பல்வேறு யோகாசன போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறாள். தமிழினி இதுவரை எழுபதிற்கு மேற்பட்ட இந்திய அளவிலான போட்டிகளில் வென்றுள்ளார். பல்வேறு வயதிற்கான பிரிவில் கலந்து கொண்டு பரிசினை தட்டிவருகிறாள்.

இச்சிறுவயதில் எந்த மாதிரியான போட்டிகளில் தமிழினி கலந்து கொள்கிறாள்? அவள் பெற்ற பரிசுகள் என்னென்ன?

முதலில் அவளது வயதுக்கான யோகா போட்டியில் கலந்துக்கொண்ட பிறகு அதில் முதலில் வந்தவர்களை அவர்களே தேர்ந்தெடுத்து ஓவரால் போட்டிகளில் கலந்து கொள்ள செய்வார்கள். அது போன்று பல்வேறு ஓவர்ஆல் போட்டிகளில் ஜெயித்திருக்கிறாள் தமிழினி. தற்போது உலக அளவிலான போட்டிகளிலும் பல்வேறு பிரிவுகளில் பங்குகொண்டு பரிசினையும் பெற்று வருகிறாள்.

தமிழினி கலந்துகொண்ட போட்டிகள், பெற்ற வெற்றிகள்…

உலக ஆன்லைன் யோகா சாம்பியன்ஷிப்பில் யோகா இளவரசி என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

இந்திய யோகா பெடரேஷன் நடத்திய 72வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் ஓப்பன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறாள்.

தமிழ்நாடு மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய போட்டியில் ஓவர்ஆல் சாம்பியனாக வந்திருக்கிறார்.

தென்னிந்திய யோகா சாப்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்தது.

தமிழ்நாடு அளவிலான யோகாசன சாப்பின்ஷிப் போட்டியின் வெற்றியாளர்.

நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டியில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தையும் யோகா நட்சத்திர விருதினையும் வென்றிருக்கிறாள்.

இந்தியன் ஹத்தா யோகா பெடரேஷன் நடத்திய விர்சுவல் தேசிய விளையாட்டு போட்டியில் சாதனையாளராக தேர்ந்தெடுக்கபட்டார்.

இன்டர்நேஷனல் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் நடத்திய போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளாள்.

தமிழினியின் எதிர்கால ஆசைகள்…

ற்போது யோகா போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கபடவில்லை. வருங்காலத்தில் யோகாவை ஓலிம்பிக் விளையாட்டில் சேர்த்தால் அதில் இந்தியா சார்பாக பங்கேற்க வேண்டும் என்பது தமிழினியின் ஆசை . எதிர்காலத்தில் யோகா அகாடமி துவங்கி பலருக்கும் யோகா பயிற்சியளிக்கவும் விரும்புகிறாள்.

தற்போது தமிழினி YPL எனப்படும் யோகா சாப்பியன் லீக் போட்டியில் நான்கு லெவலில் வென்றிருக்கிறாள். மீதமுள்ள பல்வேறு லெவல்களிலும் வென்று ஓவர் ஆல் சாம்பியனாக வெற்றியடையவும் மேலும், பல்வேறு போட்டிகளில்  கலந்துகொண்டு யோகாவில் சிறந்து விளங்கவும் நமது மங்கையர்மலர் சார்பாக வாழ்த்தி விடைபெற்றோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com