
"சபாவுல என்னோட கச்சேரிக்கு கூட்டம் வரணும்னா என்ன செய்யணும்யா?"
"சபா கேன்டீன்ல உங்க கச்சேரியை வச்சுக்குங்க பாகவதரே!"
—————————————————-
"தோசை என்னப்பா இவ்வளவு சின்னதா இருக்கு?"
"பொடி தோசை வேணும்னு நீங்க தானே சார் சொன்னீங்க!"
—————————————————-
"தலைவர் தினமும் ஜிம்முக்குப் போய் உடம்பைக் குறைத்துக்கொள்ள ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்கார்?"
"குண்டர் சட்டத்துல போலீஸ் கைது செய்துடுவாங்களோன்னு பயந்துக் கிட்டுத்தான்!"
—————————————————-
"எதுக்கு தலைவரே கண் டாக்டரை பார்க்கப் போகணும்னு சொல்றீங்க?"
"என் பார்வையே சரியில்லைன்னு மகளிரணித் தலைவி சொல்றாங்கய்யா!"
—————————————————-
"அடுத்த தேர்தல்ல நாமதான்யா ஜெயிப்போம்!"
"அதுவரை நம்ம கட்சி இருக்கணுமே தலைவரே!"
—————————————————-
" கட்சி மீட்டிங்குக்கு எப்படி இவ்வளவு கூட்டம் சேர்ந்தது?"
"தலைவர் பேச மாட்டார்னு சொல்லி அழைச்சுகிட்டு வந்தோம்!"
—————————————————-
"தலைவர் வீட்டுக்கு ரெய்டு நடத்த வந்த சிபிஐ அதிகாரிகள் ஏன் ரெய்டு நடத்தாம திரும்பிப் போயிட்டாங்க?"
"தலைவர் ஆளும்கட்சி கூட கூட்டணில சேர்ந்துட்டார்னு தகவல் கிடைச்சுதாம்!"
—————————————————-
"நான் சுயசரிதை எழுதப்போறேன்யா!"
"வேண்டாம் தலைவரே, சுயசரிதைக்கு விபரம் சேகரிக்க எத்தனை போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் நீங்க போவீங்க?"
—————————————————-
"எல்லா ரவுடிங்களையும் போலீஸ் பிடிக்கப் போறாங்களாம்யா!"
"அதுக்கு நீங்க ஏன் இப்படி பயப்படுறீங்க தலைவரே?"
"நம்ம கட்சி ஆபீஸ்ல ரெய்டு நடத்துவாங்களே!"