கவிதை!

கவிதை!
செ. கலைவாணி

செ.கலைவாணி ஓய்வுபெற்ற தமிழாசிரியை 'சிதறிய பரல்கள் கவிதை நூல்' அடர்வன மின்மினி துளிப்பா நூல் கலையும்கைவண்ணமும் கைவினை நூல் இம்மூன்று நூல்களை வெளியிட்டுள்ளேன் என் கவிதைகள் தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன முன்னணி பெண்கள் மாத வார மின்னிதழ்களில் முன்னணி செய்தித்தாள்களில் எனது கைவேலைகள் குறித்து செய்திகள் வந்துள்ளன. துளிப்பா பேரிகை விருது கவிப்பறவை விருது சதகக்கவிஞர் விருது கவித்தென்றல் விருது போன்று பலவிருதுகள் வாங்கியுள்ளேன். என் மூச்சுக் காற்றே தமிழன்னை தான் வாழ்நாள் முழுவதும் தமிழன்னைக்குக் கவிதையாரம் சூட்டுவதே என்பணி.

Updated on: 
-செ.கலைவாணி, சேலம் 
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!

உழைப்பென்னும் படைப்பூக்கச் செயலாலே,
உருவானாதே இவ்வுன்னத உலகம்.
உடலெனும் இயந்திரத்தால் உழைப்பை உரமாக்கி,
உலகை எந்நாளும்  இயங்கச் செய்பவனே உழைப்பாளி.
உழைக்கும் வெள்ளையணுக்களால் இயங்கும்
உழைப்பாளியின் உடல் உலகிற்காய் உழைக்கிறது.
உழைப்போரின் வியர்வைத்துளிகள்  உருவாக்கிய உலகம்,
உழைப்போரால் பசியாறுகிறது.
உழைப்பவன் அழுக்காகி உலகை அழகாக்குகிறான்.
உழைப்பவனின் வியர்வையால் உலகம் மணக்கிறது.
உழைப்பவன் ஓய்வெடுத்தால்
உலகம் சுழல்வதை நிறுத்தும்.
உழைப்பவன் உழைக்க மறுத்தால்
உலகம் இன்னலில் சுழலும்.
உழைப்பாளரின்றேல் உலகில்லை.
உலகில்லையென்றால் உயிர்களில்லை.
உழைப்பாளிகளின் உருக்குக் கரங்களால் உருவான உலகம்
உழைப்போரை உயர்த்திட உருவானதே உழைப்பாளர் தினம்.
உலகில் சமத்துவம் மலர உழைப்போரை ஏத்துவோம்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
உழைக்கும் தோழர்களை ஒன்றாய்த் திரட்டி
உலகம் நமதென்று சிந்து பாடுவோம்.

***************************

வாசிப்பதும் தியானம்!

புத்தகம் போதிமரம்.
புரட்டுவோர் புத்தர் ஆகலாம்.
உலகமே இயற்கை எழுதும்
வண்ணப் புத்தகம் தான்.
அணிவகுத்த எண்ணங்கள் எழுத்தாணி தழுவ
பிறந்தது புத்தகமாய்.
சைகையில்  தொடக்கம், ஒலிக்குறிப்பில் வளர்ச்சி
ஓவிய எழுத்துகள்!
அகத்தைப் புத்தாக்கம் செய்திடும்
நல்லதொரு புத்தகம்.
திருப்பப் பட்ட புத்தகம்,
'திறக்கும்' நம் மனக்கதவை!
தன்னை மறந்த நிலையில்
புத்தகம் படித்தலே தியானம்!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com