உலகளாவிய நாக வழிபாடு!

உலகளாவிய நாக வழிபாடு!
Updated on
நாக பஞ்சமி – ஆகஸ்ட் 2
ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

ரம், செடி, கொடி, பயிர், புற்று, பறவை, மிருகம், மலை, நதி, கடல் என்று  இயற்கையையும் அதில் இருக்கும் சகல சராசரங்களையும் வழிபடுவதும்; அவை அனைத்திலும் கடவுளைத் தரிசிப்பதும் பாரத கலாசாரத்தில் உள்ள சிறப்பு. அதனால்தான் பாரத தேசத்தை கர்ம பூமியாக வர்ணிக்கின்றனர். அப்படிப்பட்ட நம் தேசத்தில் நாகத்தை பூஜை செய்து வழிபடுவது என்பது நம் கலாசாரம் தொடங்கிய காலத்திலிருந்தே வரும் பழக்கம். அவ்வாறு நாகங்களை வழிபடும் திருநாளே நாக சதுர்த்தியும் நாக பஞ்சமியும்.

ஸ்ரவண மாதத்தில் (ஆடி-ஆவணி) வரும் சதுர்த்தியை நாக சதுர்த்தியாகவும் பஞ்சமியை நாக பஞ்சமியாகவும் கொண்டாடுகிறோம். நாக பஞ்சமியை வைணவர்கள் 'கருட பஞ்சமி' என்ற பெயரில் கடைபிடிக்கின்றனர். இந்த ஆண்டு (ஆடி 16) ஆகஸ்ட் 1ம் தேதி நாக சதுர்த்தியும் (ஆடி 17) ஆகஸ்ட் 2ம் தேதி நாக பஞ்சமியும் வருகிறது.

நாகங்களை வழிபடும் சர்ப்ப வழிபாடு இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் பல நாடுகளிலும் பண்டைய காலம் முதல் காணப்படுகிறது என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

சிந்துச் சமவெளி:

ந்தியாவின் முதல் நாகரிகமான சிந்துச் சமவெளி நாகரிகத்தில் நாக சித்திரங்கள், முத்திரைகள், யோகியின் அருகில் படமெடுத்து நிற்கும் சர்ப்பம் உள்ள சிலைகள் பல கிடைத்தன. இதைக் கொண்டு பாரத தேசத்தில் சர்ப்ப வழிபாடு செய்யும் பண்பாடு பல்லாண்டு காலம் முன் தொடங்கி இன்றளவும் தொடர்கிறது என்றறியலாம்.

ஈராக்:

மெசபடோமியா நாகரிக காலத்தில் (தற்போதைய ஈராக்) கிராமங்களைச் சுற்றிலும் நாக தேவதையின் சிற்பம் உள்ள கற்களைப் புதைத்து வைத்தார்கள். அந்தச் சிலைகளை 'நின்னீ' என்ற பெயர் கொண்ட தேவதையாக பூஜித்து வந்தார்கள்.

எகிப்து:

கிப்து நாகரிக காலத்தில் 'ரன்னத்' என்ற பெயரில் பசுமை தேவதையாக சர்ப்பங்களை வழிபட்டார்கள். பூமியின் கடவுள் 'சேவ்' என்ற நாகராஜா என்று நம்பிக்கையோடு வழிபட்டார்கள். இந்த 'சேவ்' கடவுளின் தலை பாம்பு போல் இருக்கும்.

பாரசீகம்:

பாரசீகத்தில் பண்டைய காலத்தில் வானவில்லை நாகராஜாவாகக் கருதி வழிபட்டார்கள்.

கிரீஸ்:

கிரேக்க நாட்டில் பாம்புகளை பூமியின் புதல்வராக எண்ணியதோடல்லாமல் பாம்புகள் பயிர்களை வளர்க்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. கிரேக்கரின் பண்டைய தலைநகரான ஏதென்சில் 'எதேநீ' கோயில்களில் பாம்புகளை வளர்க்கும் வழக்கம் இருந்தது.

சிரியா:

சிரியாவில் சூரிய வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட தூணின் மீது பாம்பு சிற்பங்கள்  செதுக்கப்பட்டுள்ளன.

இத்தாலி:

த்தாலியில் உள்ள 'இசின்' தேவாலயத்தில் உள்ள ஒரு லிங்கத்தை பாம்பு சுற்றிக் கொண்டுள்ளது.

நேபாள்:

நேபாளத்தில் ஸ்ரீமன் நாராயண் ஆலயத்தில் நாக பூஜை செய்கிறார்கள்.

ஜப்பான்:

ப்பான் நாட்டில் 'சசான்' என்ற இனத்தவர் சர்பங்களை மழை பெய்விக்கும் கடவுளாக வழிபடுகிறார்கள். 'நாகசாக்' என்ற பண்டிகையின்போது வெள்ளை பாம்புகளை வழிபடுவார்கள். நாகங்களை கடவுளின் பிரதிநிதிகள் என்றும் சமுத்திர தேவைதைகள் என்றும் கருதி பூஜை செய்கிறார்கள்.

ஆப்பிரிக்கா:

பாம்புகளை தம் சௌபாக்கியம் என்றும் தம் மூதாதையரின் ஆத்மாக்கள் என்றும் கருதும் வழக்கம் ஆப்பிரிக்காவில் மலை சாதியினரிடம் காணப்படுகிறது.

ஜைன – பௌத்த மதங்கள்:

ஜைன – பௌத்த மதங்களிலும் பாம்புக்கு முக்கியத்துவம் உள்ளதைக் காண முடிகிறது. ஜைன விக்கிரகங்களின் பீடங்கள் மீது பாம்பு ஓவியங்களைக் காண முடியும். நாகார்ஜுன மலை, கண்டசாலா, அமராவதி முதலான இடங்களில் உள்ள பௌத்த சிற்பங்களிலும்  பாபம்புகளின் சிலைகள் உள்ளன.

இவ்விதமாக உலகின் பல நாடுகளிலும் சர்ப்பத்தை வழிபடும் கலாசாரம் பண்டைக்காலம் முதலே இருந்து வருகிறது.

************************

ஆகஸ்ட் 2,  கருட பஞ்சமி

ந்த  ஒரு முக்கியமான  செயலைத் தொடங்கும்போதும் கருடனைத் தியானித்து கருட துதியைக்  கூறினால் காரிய சித்தி தரும்.

வானத்தில் கருடனைப்  பார்ப்பதும், கருடனின் குரலைக்  கேட்பதும்  சுப சகுனமாகக் கருதப்படுகிறது.

மங்கள வாத்தியங்களின் 16 வகையான தொனி, ஆதோத்யம் எனப்படும் அதன் நாதமே கருடன் எழுப்பும்  ஓசையாகும்.

கார்கோடகன் என்னும் நாகத்தின் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனி  தோஷம் போகும் என்பது ஐதீகம். அந்த  கார்கோடக  நாகம் கருடனுள் அடக்கம்.

கருடனைக் கொடியாக  கொண்டதாலேயே கிருஷ்ணன்  சிசுபாலனை  வென்றதாக பாகவதம் கூறுகிறது.

மவுரியர்களின் அதிர்ஷ்டக் கடவுளாக கருடபகவான் வணங்கப் பட்டிருக்கிறார்.

அதர்வண வேதத்தில்  வரும் 32 வித்யைகளில்  கருட வித்தையே  முதலிடம் வகிக்கிறது.

வைணவர்கள்  திருவாராதன  மணி முடியின்  மேல் சுதர்சனாழ்வாரோ, கருடாழ்வாரோ  எழுந்தருளியிருப்பது  வழக்கம்.

எல்லாவிதமான  தர்மரகசியங்கள், நீதிகள், ஆத்மா கடைந்தேற வழி அனைத்தையும் கருட புராணத்தில்  அறியலாம்.
-மகாலட்சுமி சுப்பிரமணியன்,  காரைக்கால்

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com