ஜோக்ஸ்!

ஓவியம்: பிள்ளை
ஓவியம்: பிள்ளை
Published on

''அந்த அருவி கீழே நகைச்சுவை எழுத்தாளர்கள் கூட்டமா நிக்கிறாங்களே… ஏன்?"
''அது ஜோக் ஃபால்ஸாம்!"
– நிலா, திருச்சி

————————

''வாளுக்கு வாள் மோதி பார்க்கலாமா என்று கேட்ட எதிரி நாட்டு மன்னரிடம் நம் மன்னர் என்ன சொன்னார்?"
"காலுக்கு கால் ஓடி பார்க்கலாமா என்று சொன்னாராம்!"
– நிலா, திருச்சி

————————

''நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்…"
"இருக்கட்டும்… அதுக்காக அரண்மனை ஆராய்ச்சி மணியாக குல்பி ஐஸ் வண்டி மணியைக் கட்டுவது சரியல்ல!"
– நிலா, திருச்சி

————————

லாக்டவுன் தமாஷ்
''வீட்ல பொண்டாட்டி தொல்லை தாங்க முடியலடா… கொரோனா வரக்கூடாதுன்னு கேசரியில கூட மிளகு, சீரகம் தாளிச்சுக் கொட்றா."
''உங்க வீட்ல எவ்வளவோ பரவாயில்லடா… என் மனைவி கபசுரக் குடிநீர்லதான் உப்புமாவே கிண்டறா…"
– ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்

————————

"மன்னரை எங்கே மாதக்கணக்காய் அரண்மனை பக்கமே காணோம்?"
"அவர் 'ஒர்க் ஃப்ரம் அந்தப்புறம்' அதான்!
-சம்பத் குமாரி, திருச்சி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com