இஞ்சி லேகியமும் பிக்பாஸ் பர்பியும்!

இஞ்சி லேகியமும் பிக்பாஸ் பர்பியும்!
Published on

ஜோக்ஸ்
ஓவியம்: பிள்ளை

''நீயும், உன் மாமியாரும் கடைகள்ல விலகி நின்று சமூக இடைவெளியை சரியா கடைப்பிடிக்கிறீங்களே!''
''எப்பவும், எங்கயும் நாங்க அப்படித்தான்!''

''பெரிய மாப்பிள்ளை ஸ்வீட் கடை வெச்சிருக்கார். சின்ன மாப்பிள்ளைக்கு பட்டாசு, மத்தாப்பு பிசினஸ்னு சொல்றீங்க. உங்களுக்கு பலகார, பட்டாசு செலவு கிடையாது!''
''அந்தக் கடைகளை வெச்சுக்குடுத்ததே நான்தானே!''
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.

''தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட் செஞ்சிருக்கியே… என்ன பெயர்?''
''பிக்பாஸ் பர்பிங்க! முந்திரிய பர்பியில தேடித் தேடி பிடிக்கணுங்க!''

ஹேமலதா சீனிவாசன்
ஹேமலதா சீனிவாசன்

''தீபாவளி வெடி ஏன்டா ஒண்ணுகூட வெடிக்க மாட்டேங்குது?''
''கொரோனா டச் பண்ணாம இருக்க சோப்பு போட்டு வாஷ் பண்ணிட்டோம் அப்பா!''

''தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் செஞ்சிருக்கே பானு?''
''கொரோனா லேகியம்ங்க…''
''கொரோனா லேகியமா?''
''ஆமாங்க… இஞ்சி லேகியத்துக்குத்தான் புது பெயர்!''

''என்னங்க, உங்க அம்மா ரொம்பவும்தான் அடம் பண்றாங்க…''
''என்ன கேட்கறாங்க?''
''தீபாவளி குளியலுக்கு நிலவேம்பு குடிநீர்லதான் கங்கா ஸ்நானம் செய்வேங்கிறாங்க!''
– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.

''அவர் ரொம்ப முன் எச்சரிக்கையானவர்!''
''அதுக்காக பாம்பு மாத்திரை கொளுத்தும்போது, கையில தடி வெச்சிக்கிட்டு கொளுத்துறதெல்லாம் ரொம்ப ஓவர்!''
– பி.சி.ரகு, விழுப்புரம்

''தீபாவளிக்கு மாப்பிள்ளை சொந்த செலவுல ஸ்கூட்டர் வாங்கிக்கிறதா சொல்லிட்டார்…''
''இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்!''
''பெட்ரோல் செலவை மட்டும் நான் ஏத்துக்கணுமாம்!''

ஹேமலதா சீனிவாசன்
ஹேமலதா சீனிவாசன்

''என்னது… மாஸ்க் பட்டாசா?''
''ஆமாம் சார்! பட்டாசு வெடிச்சா, கலர் கலரா எட்டு மாஸ்க் வெளியே வரும்!''

''தீபாவளிக்கு மனைவி செஞ்ச அல்வாவை சாப்பிட்டதும் தலைவர் கண் கலங்கிடுச்சா… ஏன்?''
''ஜெயில்ல சாப்பிட்ட களி ஞாபகத்துக்கு வந்ததாம்…''

''தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் என்ன தெரிஞ்சுக்க விரும்புறீங்க மேடம்?''
''பக்கத்து வீட்டுக்காரி தீபாவளிக்கு எத்தனை பட்டுப்புடைவை எடுத்திருக்கான்னுதான்!''
– ஆர்.கீதா, கேரளா

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com