ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

'வாழ்க்கை ஒரு வட்டம்டா!' இது விஜய் படத்தோட பஞ்ச் டயலாக்!

எங்க ஸ்கூல் வாத்தியார் ஒருவரைப் பார்த்துப் பேசியபோது, சம்பந்தமே இல்லாத இந்த டயலாக் ஞாபகத்துக்கு வந்துடுச்சு மேலான நட்புகளே!

முன்னொரு காலத்துல, நம்பப் பெண்களின் நிலைமை (ஸாரிஇப்ப கூட பல பெண்களின்) எப்படி இருந்தது தெரியுமா? முதல் 20 – 25 வருஷம் அப்பா அண்ணன்களின் கட்டுப்பாட்டில்… 25 – 60 கணவன் மற்றும் புகுந்த வீட்டு ஆண்களின் தயவில்… 60க்குப் பிறகு சாகும் வரை மகன் மற்றும் பேரன்களின் கன்ட்ரோலில்

ஆண்கள் தயவின்றி, பெண்கள் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது. அப்படியொரு ஆதிக்கம்! ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்!

ங்கள் விஞ்ஞான ஆசிரியர் ரமணி ஸார்! வயது எழுபது இருக்கும். அவரது மனைவி இதயநோய் பாதிப்பால் இறந்து போய்விட்டார். மனைவியின் மறைவின்போது அவருக்கு வயது 55. ஒரே மகன் பத்தாவது படித்துக்கொண்டிருந்தான்.

'சமையல் அறை எந்தத் திசையில்?' என்றுகூட தெரியாத அவர், தானே சமைக்கக் கற்றுக்கொண்டு மகனை ஆளாக்கி, நல்லவிதமாகத் திருமணமும் செய்து கொடுத்துவிட்டார்.

வந்த மருமகள், அவரது எண்ணம்போல் இல்லை. "என்னை மதிக்கவே மாட்டேங்கிறா; வீட்டுல அவ வெச்சதுதான் சட்டம். நான் பாசமா வளர்த்த பையனை உருட்டி, மிரட்டி வேலை வாங்குறா. மகனுக்குப் பிடிக்குமேன்னு நான் எதுன்னா ருசியா சமைச்சாலும்,

'உடம்புக்கு ஆகாதுடேக் ஜஸ்ட் ஃப்ருட்ஸ்!' என்று கன்டீஷன் போடுகிறாள். என்னோட உட்கார்ந்து அவன் டீ.வி பார்த்தாலோ, இரண்டு வார்த்தை சகஜமா பேசினாலோ ரொம்ப கடுப்பாயிடுவா. உடனே, 'தலைவலி'னு ரூமுக்குள்ள போய் படுத்துடுவா. இவன் தாஜா பண்ணி, மாத்திரை கொடுத்து, தைலம் தேய்ச்சு, ஸ்டீம் பிடிக்க வெச்சு, காஃபி போட்டுக் கொடுப்பான்.

'மாமாஇப்படிச் செய்யலாமா?'னு ஆலோசனைகூட கேக்கறதில்ல. வாசல்ல இருந்த மரத்தை வெட்டிட்டா! கார் பார்க்கிங் செய்ய இடைஞ்சலா இருக்காம்! எனக்கு அல்சர், நீரிழிவுன்னு இருக்கிறதால, ஃபுட் கன்ட்ரோல். மேட்ச் பார்த்தா, நாய்ஸ் பொல்யூஷன்! காஃபி, டீ கிடையாது. லைம் டீதான். நானே தயாரிக்கவும் கட்டுப்பாடு.

நான் இருபது வருஷம் எங்க அம்மா கண்ட்ரோல்ல இருந்தேன். அப்புறமா பொண்டாட்டி கண்ட்ரோல்இப்ப கடைசிக் காலத்துல மருமகள் கண்ட்ரோல் பண்றா…" என்று வருத்தப்பட்டார்.

"ஆண்கள் எங்கே தங்களை மீண்டும் அடிமைச் சங்கிலிப் பூட்டி அடைத்து விடுவார்களோ என்ற பெண்களுக்கே உரிய அச்சம் சார் அது. அதனால்தான் அவள் ஓவர் டாமினேட் செய்து, அந்த வீட்டுக்குள் பிரதான நிலையை ஸ்திரப்படுத்த முயல்கிறாள். நீங்கள் உங்களை கண்ட்ரோல் செய்வது மருமகள் என நினைக்காமல், மகள் என்று நினைத்துப் பாருங்களேன்சொந்த மகள் என்றால் அவளது கட்டுப்பாடுகளை, 'அன்புமழை' என பொறுமையுடன் ரசிப்பீர்கள்தானே?" என்று எனக்குத் தெரிந்த சமாதானம் சொன்னேன்.

னாலும் டியர் யங் லேடீஸ்பாசமாக வளர்த்த மகனையும், பெரிய சொத்தையும் உங்களிடம் தாரை வார்த்துவிட்ட, அந்த முதியோர் இனம் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் கௌரவமா நடத்தணும், பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சி மகிழணும் என்பது மட்டுமேஅதை மனதில் கொண்டு நடக்கவும்ஆண் பாவமும் பொல்லாதது!

ஏன்னாவாழ்க்கை ஒரு வட்டம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com