ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

முகநூலில் ஒரு வீடியோ பார்த்தேன் வாசகீஸ்… அந்தப் பெண் அழகுதான்! பார்த்த கண்கள் அனைத்துமே ஒப்புக்கொள்ளக்கூடிய ஒயிலான வடிவம்தான். ஆனால், அதை வெளிப்படுத்திய விதம் கண்ணுல தூசி விழுந்த மாதிரி உறுத்திவிட்டது.

அது ஒரு கல்யாண மண்டபம்… பிரதான ஹாலில் வைக்கப்பட்டிருக்கும் ராட்சச மின் விசிறியைக் கடக்கிறாள் ஓர் அழகான யுவதி. திடீரென்று முகத்தில் வீசிய காற்றில் தலைமுடி கலைந்து அலைகிறது. அதை ஸ்டைலாக ஒதுக்கிக் கொண்டவள், யாருக்கோ கண்ணால் சமிக்ஞை காட்டுகிறாள். காமிரா இன்னும் டைட்-க்ளோஸ் அப் ஆகிறது. இப்போது ஃபேன் காற்றில் உடல் முழுவதும் படும்படி நிற்கிறாள். சில விநாடிகள்தான்… 'டப்' என்று மெல்லிய மேலாடை முழுவதும் விலகி, முன்னழகு அப்பட்டமாய்த் தெரிகிறது. அந்தப் பெண் சிறிதும் கூச்சமோ, படபடப்போ இல்லாமல் மிகவும் காஷுவலாக போஸ் தருகிறாள். நினைத்த காரியம் முடிந்த திருப்தி அவளது முகத்தில்…

இது மாதிரியான 'செட் அப்' வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஏராளமாகக் கிடக்கின்றன. இதில் தோன்றும் பெண்களின் நோக்கம்தான் என்ன? யாரைத் திருப்திப்படுத்த? அல்லது யாரை வெறுப்பேற்ற?

***

முகம்மது அலியை நீங்கள் அறிவீர்கள். மறைந்த பிரபல குத்துச் சண்டை வீரர். இவரது மகள்கள் ஹன்னாவும் லைலாவும் தமது தந்தையாரைப் பார்க்கச் சென்றிருந்தபோது, மேற்கத்திய உடைகள் அணிந்திருந்தனராம். அவை உடலை வெளிப்படுத்தும் விதமாக இருக்கவே, பெண்களை அருகே அமர்த்திக்கொண்டு வாஞ்சையோடு சொன்னாராம்,

''என் அன்பு மகள்களே… இந்த உலகில் அதிக மதிப்பு மிக்கவையாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாக, மேலும் பெறுவதற்கு மிகக் கடினமானவையாகவும் உள்ளன. வைரம் பூமியின் ஆழமானப் பகுதியில் மறைந்துள்ளது. முத்து, ஆழ்கடலில் சிப்பியில் பாதுகாப்பாக உள்ளது. தங்கம், சுரங்கத்துக்குள்ளே அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்டுள்ளது. இவற்றை எடுக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

மாடல்
மாடல்

அதேபோல, பெண்ணின் உடலும் புனிதமானது. தங்கம், முத்து, வைரத்தைவிட உயர்வானது. உன் உடலை நீ முறையாக மறைத்துக்கொள்ள வேண்டும்" என்று அறிவுரை சொன்னராம்!

உண்மைதானே கண்மணீஸ்?
நாகரிகமாக ஆடை அணிவதில் தவறேதுமில்லை. ஆனால், அது கண்ணியமாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் இல்லையா?
'முற்போக்கு' என்பது ஆடை விலகலில் இல்லை. 'பெண்' என்பவள் வெறும் காட்சிப் பொருள் அல்ல! அவள் அரசாட்சிப் பொருள் என்று இளம் யுவதிகளுக்குப் புரிய வைக்கணும்னா, நமது ஆடைகளும் கண்ணியமாக இருக்கணும் டியர்ஸ்…
பொக்கிஷங்கள் நிறைந்த வீட்டைத் திறந்துபோட்டால், என்ன ஆகும்னு நமக்குத் தெரியாதா என்ன?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com