பெருமிதம் கொள்வோம்

பெருமிதம் கொள்வோம்
Published on

சீதா லட்சுமி

திட்டமிடப்பட்ட பத்தே நாட்களில் உருவாக்கப்பட்ட நாட்டின் 75வது சுதந்திரதின விழாவின் வைர விழா நினைவுத்தூண்.

சென்னை தலைமைச்செயலகம் -மெரினா கடற்கரை -நேப்பியர் பாலம்- அருகே பத்தே நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த நினைவு சின்னம். மொத்த உயரம் 59 அடி. தூணின் உச்சியில் இந்திய அரசினுடைய ராஜகம்பீரச் சின்னமான நான்குமுக சிங்கங்கள். அதன் மேல்பகுதியில் அசோகச் சக்கரம். நாட்டின் 75வது சுதந்திர நாள் என்பதைக் குறிக்கும் வகையில் '75'என்கிற பொன்நிற உலோக எழுத்துகள்.

இதைத்தாங்கி நிற்க துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்பட்ட நாற்புற இரும்பு சிறப்புத் தகடுத்தூண்கள். அந்த இரும்புத் தூணைத் தாங்கி நிற்பதற்கு சதுர மேடை. அந்த மேடையின் நான்கு முனைகளிலும் துப்பாக்கியுடன் நின்றுகொண்டு இந்த நினைவுத் தூணைக் காவல் காப்பது போன்ற தத்ரூபமான அற்புதமான நான்கு ராணுவ வீரர்களின் சிலைகள். இத்தனையும் பத்தே நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

அசாத்திய உழைப்பு. அரிதான பொருட்களைக் கொண்டு அற்புதமான வடிவமைப்பு. டிஜிட்டல் டிஸ்ப்ளேயில் பத்தே நாட்களில் இரவு பகலாக இந்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்ட விதத்தை Making of statute என்கிற முறையில் காண்பிக்கப்பட்டது.

தலைநகர் தில்லியில்கூட நாட்டின் 75வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு இப்படி ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இதை மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கிய நாமக்கல் பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்திற்கும் பாராட்டுகள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com