சொல்ல விரும்புகிறோம்!

சொல்ல விரும்புகிறோம்!
Published on
இணையதளத்தில் நேரடியாகப் பதிவான 'Comments'

ஐ.எஃப்.எஸ். அதிகாரி சுதாராமன் பற்றிப் படித்து வியந்தோம். பெண்கள் நுழையத் தயங்கும் துறையை எடுத்ததோடு, பல சாதனைகள், விருதுகள் பெற்ற அவரது பணி பாராட்டுதலுக்குரியது. அவரது பயணம் சிறக்கவும், அவரையொட்டி பலரும் இத்துறையில் கால் பதிக்கவும் விரும்புகிறோம்.

'கைகளில் இவ்வளவு விஷயங்களா?' என வியந்தோம். சிறிது நேரம் பார்த்துவிட்டு கடக்கும் விளம்பரங்களை எவ்வாறெல்லாம் நேர்த்தியாக எடுக்க, எத்தனை மெனக்கெடுகிறார்கள் எனப் படித்து உணர்ந்தோம். நல்ல தகவல்களை பகிரும் ஜி.எஸ்.எஸ். அவர்களுக்கு நன்றி.
– மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

'வனத்துறைப் பணி செய்ய வாருங்கள்' என்ற தலைப்பில் பெண் ஐ.எஃப்.எஸ். அதிகாரி சுதா ராமனின் பேட்டியைப் படித்தேன். வனத்துறைப் பணி என்பது புனிதமானது. பெண்களும் பணியாற்றலாம்… பாதுகாப்பானது, வன விலங்களைக் காக்கும் பணி மனதிற்கு நிறைவானது என்பதை தனது அனுபவத்தின் வாயிலாக மிக அற்புதமாக எடுத்துரைத்துள்ளார். பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்.
– ஆர்.வித்யா, பள்ளிக்கரணை

ம்ம்ம்ம்மா… பிளாக் ஆன்ட் ஒயிட்ல… பராசக்தி படத்தினை கலைஞரைய்யா வசனத்தில் சூப்பரா பார்த்த திருப்தியம்மா… ஒரு வரி பிசகாமல் அருமையாக இருந்தது உங்க, 'ஒரு வார்த்தை.'

பத்தைக் கண்டு பயப்படக்கூடாது என்று தன்னம்பிக்கையை வளர்க்கும் கதை, 'அலைபாயுதே!'

ஞ்சியின் சிறப்பினைக் கூறி, அதன் மகிமையை அறிய வைத்த கட்டுரை ஆசிரியர் ஆர்.ஜெயலட்சுமிக்கும் வெளியிட்ட மங்கையர் மலருக்கும் வாழ்த்துகள்.
– து.சேரன், ஆலங்குளம்

ஷாக் அடித்தாலும் கொரோனா பயம் போகவில்லை குசும்பருக்கு ( மகாலிங்கத்துக்கு).
– வி.கே.லக்ஷ்மிநாராயணன்.

காபெரியவர் ஒரு நடமாடும் தெய்வம். எல்லாம் அறிந்த ஞானி. பார்க்க மிக எளிமையாகத் தோன்றும் அவர், ஆதிசங்கரரின் மறு அவதாரம். ஞான திருஷ்டி நிரம்பப் பெற்றவர். அவர் காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே பெரிய விஷயம். அவரை தரிசித்த நாம் எல்லோரும் பாக்கியசாலிகள்.

புவனா நாகராஜன் கூறியதுபோல், கிரிக்கெட் பார்ப்பேன். ஆனால், விமர்சனம் பண்ண தெரியாது. மேட்ச் நடைபெறும் நாட்களில் கணவர், மகள், மருமகன் ஆகியோர் பார்க்கும்போது சீரியல்களை பார்க்காமல் விட்டுக்கொடுத்து விடுவேன்.

திருமணமான பெங்காலி பெண்களின் கையில் எப்போதும் சங்கு வளையல்கள் இருக்கும். பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும். நாங்கள் கொல்கத்தாவில் இருந்தபோது இதனை கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.

ஞ்சி சுரசம், இஞ்சி முரப்பா, இஞ்சி கஷாயம் ஆகியவற்றை எளிதில் செய்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இஞ்சியின் மேன்மைகள் பலவற்றை விரிவாக எடுத்துக்கூறிய கட்டுரையாளருக்கு நன்றிகள் பல.

லகார விடுகதைகள் நன்றாக இருந்தன. கவிதைத் தூறலில் இனி மதிய உணவாக நூடுல்ஸும் சிப்ஸும் காக்கைகளுக்கும் அணில்களுக்கும் கிடைக்கலாம் என்பது அருமையிலும் அருமை.ஜோக்குகள் அனைத்தும் சிறப்பு. அதிலும் குறிப்பாக, கபசுர குடிநீர் கொண்டு உப்புமாவைக் கிளறுவது சூப்பரோ சூப்பர்.
– கே.எஸ்.கிருஷ்ணவேணி, சென்னை.

'வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க' பக்கத்தில் வந்த சங்கு வளையல் பற்றிப் படித்ததும் பெருமையாக இருந்தது. உண்மைதான்… இன்று எத்தனையோ போலிகள் வந்தாலும் உண்மையான சங்கு வளையல்களைக் கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. நான் வைத்திருக்கும் சங்கு வளையலை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டேன். மிகவும் அருமையான பக்கம். பாராட்டுக்கள்.
– உஷா முத்துராமன், திருநகர்

திரைப்படத்தை நண்பர்களுடனும் உடன்பிறப்புகளுடனும் லூட்டி அடித்துக் கொண்டு பார்க்கும் ரகமான அனுஷாவிற்கு பாராட்டுக்கள். 'சீனி சுப்புடு' எனும் உங்களின் செல்லப் பேரை தைரியமாகச் சொல்லி, எங்களிடம் அன்பும் ஆதரவும் பெறும் அனுஷாவை நாங்கள் என்றுமே பாராட்டுகிறோம். தீபாவளி வாழ்த்துக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை

'பெண் என்பவள் வெறும் காட்சிப் பொருளல்ல' என்று ஆணித்தரமாகச் சொன்ன அனுஷாவிற்கு பாராட்டுக்கள். மிக அருமையான, இன்றைய காலத்திற்குத் தேவையான நல்லதொரு, 'ஒரு வார்த்தை.'
– லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை

'அலைபாயுதே' என்ற நகைச்சுவையான சிறுகதை படித்து, நானும் வாய்விட்டுச் சிரித்தேன். அயர்ன் பாக்ஸ் சுட்டதற்கு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சுகவாசியாக இருக்கும் மகாலிங்கம் உண்மையிலேயே கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும், ரசித்து சிரிக்க வைத்த அருமையான சிறுகதை. பாராட்டுக்கள்.
– வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

'துன்பம் தொலைந்த திருநாள்' என்ற புராணக் கதையைப் படித்ததும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதை ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு வெளிவந்து இருந்தாலும், எத்தனை முறை படித்தாலும் அதே சுவையைக் கொடுக்கும் அழகானதொரு தீபாவளி பற்றிய, 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா?' என்ற கதையினை எங்களுக்குக் கொடுத்த, 'மங்கையர் மலருக்கு' தீபாவளி வாழ்த்துக்களுடன், பாராட்டுக்கள்.
– பிரகதா நவநீதன், மதுரை

ரமான கொலு காட்சிகள், தகுதியான தோ்வு, பாா்க்கப் பாா்க்க ஆனந்தமாய் இருந்தது. 'மங்கையா் மலாில்' ரசனைக்கு பஞ்சமே இல்லை. வாசகிகளும் சளைத்தவா்கள் அல்ல என்பதை நிரூபித்தது… வாழ்த்துக்கள்.
– நா.புவனா நாகராஜன், செம்பனாா்கோவில்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com