உங்கள் குரல்

உங்கள் குரல்
Published on

டுப்பூசி போடுவதில் சாதனை படைத்துள்ள  தமிழக அரசை பாராட்டி, 'அந்தப் பணியை செம்மையாக நிறைவேற்றிய செவிலியர்கள்/மருத்துவர்கள் கடவுளின் தூதர்களாகப் பார்க்கப்படுவார்கள். அவர்களை மனதார பாராட்டி நன்றி சொல்லி பெருமிதம் கொள்வோம்'  என்ற கல்கியின் தலையங்கத்தைப் படித்தபோது தமிழர் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!! என்று நினைக்க தோன்றுகிறது!

"தமிழ் தாத்தாவின் கம்ப இராமாயணம்"சுஜாதா தேசிகனின் கடைசிப்பக்க கட்டுரை பல நல்ல தகவல்களை ‌ஏந்தி கம்பன் கவியே கவி என்றதே! பத்தாயிரம் கவிதைகளில் ஆயிரம் கவிதைகளைக் தேர்ந்தெடுத்து கம்பர் 1000 தொகுப்பு நூலொன்றை மகாகவி  அ.கு.ஆதித்தர் வெளியிட்டுள்ளார். மிகவும் அருமையான சுருக்கம். தமிழ் வளர்ச்சி ‌‌‌மன்றம் ‌‌‌பதிப்பித்தது. என்னிடம் 1986 பதிப்பே உள்ளது. மறுபதிப்பு  கிடைக்கவில்லை!

– திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு 

'பயங்கரமான பக்கத்து வீட்டுக்காரர்' கட்டுரை பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலையை வெளிச்சம் போட்டு காட்டியது.

பயங்கர(பக்க)வாதத்தின் ஆபத்தை பாகிஸ்தான் உணர்ந்து , தனது நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுத்து செல்வதோடு, அண்டை நாடுகளுடன் நட்புறவு கொண்டு,  உலக நாடுகளுடன் மென்மையாக நடந்து கொள்வதே அழகு. இதை பாகிஸ்தான் தானாக உணர்ந்தாலும் சரி, அல்லது அமெரிக்காவால் உணர்த்தப்பட்டாலும் சரி. மாற்றமே மாறுதல்களை உருவாக்கும்.

– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

சுஜாதா தேசிகனின் கடைசி பக்கத்தில், இந்த வாரம் டி.கே.சி. பற்றிப் படித்ததும் அவர் சொன்ன இன்னொரு செய்தி நினைவிற்கு வந்தது, ரயிலில் மட்டும் கம்பனைப் படிக்காதீர்கள், அதில் லயித்து இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டு விடுவீர்கள் என்பதே அது.

கல்கியில் முக்கூர் லஷ்மிநரசிம்மாச்சார் எழுதிய "குறையொன்றுமில்லை" தொடரில், கம்பருக்கு ஏன் கம்பன் எனப் பெயர் வந்தது எனக் கேட்டு அவரே பதிலிறுக்கிறார், அவர் கம்பனை(நரசிம்மரை) பாடியதால் என்று…..என்ன ஒரு அழகான கோணம் பாருங்கள்.

– ஸ்ரீகாந்த், பெங்களூரு

னது 25 ஆண்டுகால நிருபர் பணி குறித்து வேலாயுதன் பெருமைப்பட கூறியுள்ளதற்கு அவரை மனந்திறந்து பாராட்டுகிறேன். எழுத்தையும், மனிதர்களையும் நேசிக்கும் அவரது மாண்பு பாராட்டுதலுக்குரியது. மக்களோடு மக்களாக ஃபீல்டில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்களின் அபல கண்ணீரை ஆனந்த கண்ணீராக மாற்றி இருக்கும் அவரது 'நிருபர் பணி' போர் வீரனுக்கு ஒப்பானது.

அவரது பேனா மக்கள் நிமிர எழுதட்டும். வேலாயுதன் வெல்லட்டும்.

– நெல்லை குரலோன்,  நெல்லை

நான் அனுப்பியிருந்த சிறுகதை  'உனக்கும் கீழே உள்ளவர் கோடி' , 8-10-21 கல்கி இதழில் பிரசுரித்ததற்கு மிக்க நன்றி. ஆனால் கதாசிரியர் பெயர் 'தனுஜா' என்று உள்ளது. இதற்கான நோக்கமோ காரணமோ இருப்பின் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.                                  – பாலா சங்கர்  

தவறுக்கு வருந்துகிறோம் (ஆ.ர்)

ம் பாரதப் பிரதமர் அவர்கள் "மனதின் குரல்" நிகழ்ச்சியில் "ஒரு நதியை காப்பாற்றிய பெண்கள்" என்ற தலைப்பில் ஒரு பெண் நதியை காப்பாற்றியது குறிப்பிட்டதை கேட்கும்போது பெருமையாக இருந்தது. தமிழகத்தில் நதிகளை காப்பாற்ற பெண்கள் நிச்சயம் பாடுபடுகிறார்கள் என்பதை அறிய முடிந்தது.  திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண்கள் பற்றி நம் பாரத பிரதமர் இந்த மனதின் குரலில் குறிப்பிட்டதை நமக்கு அழகாக எப்படி எதற்காக எடுத்துரைத்தார் என்று புரியவைத்த கல்கி இதழுக்கு பாராட்டுக்கள்.

– ராதிகா, மதுரை

 "மீண்டும் அமலா" என்ற பக்கத்தை படித்தவுடன் அமலா நடித்த "மெல்ல திறந்தது கதவு" படத்தை பார்த்தது போல ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அமைதியாக அதே நேரத்தில் சுறுசுறுப்புடனும் மிக அருமையாக நடிக்கும் அவர் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கப்போவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல அருமையான செய்தியை பிரசுரித்து எனக்கு மகிழ்ச்சி கொடுத்த கல்கிக்கு பாராட்டுக்கள்.

– பிரகதாநவநீதன்,  திருநகர் 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com