அருள்வாக்கு

அருள்வாக்கு
Published on
நால்வருக்கும் விநாயகர் அருள்
ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

சுந்தரமூர்த்திக்கும் பிள்ளையார் அனேக அனுக்ரகங்கள் பண்ணியிருக்கிறார். அவருக்கு மாத்திரம் இல்லை. 'நால்வர்' என்று சிறப்பித்துச் சொல்கிற அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நாலு மகாபெரியவர்களுக்குமே ஒவ்வொரு சமயத்தில் விக்னேஷ்வரர் அருள் புரிந்திருக்கிறார்.

இங்கே ஒரு புலவர் வந்து விக்னேஷ்வரரைப் பற்றி ஒரு பழைய தமிழ்த் துதி பாடினார். 'மூத்த நாயனார் திருவிரட்டை (திரு இரட்டை) மணிமாலை' என்று அதற்குப் பெயர். அதிலே ஒரு இடத்திலே, பிள்ளையாருக்கு ஒற்றைத்தந்தம், இரட்டைக்காது, மூன்று கண் என்று வருகிறது – 'ஒரு கோடு, இரு செவி, முக்கண்' என்று பாடியவர் நல்ல புலவர் ஆனதினால். 'ஒண்ணு, இரண்டு, மூணு' என்கிறதோடே முடிக்காமல், நாலாவதாக 'நால்வாய்' என்றும் சேர்த்திருக்கலாம்' என்றார்.

நால்வாய் என்றால், 'பிள்ளையாருக்கு ஏது நாலு வாய்?' என்று தோன்றும். இங்கே 'நால்' என்பது எண்ணிக்கை இல்லை. 'நாலுதல்' என்றால் 'தொங்குவது' என்று அர்த்தம். யானை வாயைப் பார்த்தீர்களானால் தெரியும். அது தொளதொள என்று தொங்கினாற்போலத்தான் இருக்கும். அதனால் யானைக்கு நால்வாய் என்று ஒரு பேர். பிள்ளையார் யானைதானே?

'நால்வாய்' என்று அவர் சொன்னதும் எனக்கு நாலு பேருடைய வாய் நினைவு வந்தது. யார் அந்த நாலு பேர் என்றால் நமக்கு சிவபக்தியையும் தமிழையும் ஒருசேர வளர்த்துக் கொடுத்திருக்கிற நால்வர்தான். தேவார திருவாசகங்களைக் கொண்டு தமிழால் சிவ பக்தியையும், சிவ பக்தியால் தமிழையும் வளர்த்துத்தந்தது அவர்களுடைய வாய்தானே? அந்த நால் வாயை நினைத்துக் கொண்டேன். அப்புறம் அந்த நால்வாய்க்கும் இந்த நால்வாய்க்கும் இருக்கிற சம்பந்தங்களை ஞாபகப்படுத்திக்கொண்டு பார்த்தேன். அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லலாம் என்று (நினைக்கிறேன்), சம்பந்தத்தைச் சொன்னேன். சம்பந்தரோடேயே ஆரம்பிக்கிறேன். அவர் குமாரஸ்வாமி அவதாரம். அண்ணாக்காரரையும், அவரையும் பிரிக்கவே படாது என்றும் சொன்னேனோல்லியோ? அதோடு திருமுறைகளிலேயே நூல்களை வரிசைப்படுத்தும்போது சம்பந்தரில்தான் ஆரம்பித்து, அப்புறம் அப்பர், அப்புறம் சுந்தரர் என்று போயிருக்கிறது.

தேரழுந்தூர் என்று கேள்விப்பட்டிருக்கலாம். தமிழில் கவிச்சக்கரவர்த்தி என்கிற கம்பன் பிறந்த ஊர். 'அழுந்தை மறையோர்' என்று பாட்டுக்குப் பாட்டு அங்கே விசேஷமாக வைதிகாசாரத்தை வளர்த்துவந்த பிராம்மணர்களை ஞானசம்பந்தர் தம்முடைய பதிகம் நெடுகப் போற்றியிருக்கிறார். அங்கே ஸ்வாமிக்கு வேதபுரீஸ்வரர் என்றே பேராயிருப்பதால் ஊருக்கே வேதபுரி என்று இன்னொரு பேர் இருந்திருக்கணும். அந்த வேதபுரியில்தான் தமிழின் சக்கரவர்த்திக்கவி பிறந்திருக்கிறார். அங்கே ஞானசம்பந்த விநாயகர் என்றே ஒரு பிள்ளையார் இருக்கிறார்.

சம்பந்தரின் பாடல் பெற்ற அந்த ஸ்தலம் வைஷ்ணவர்களின் திவ்ய தேசத்திலும் ஒன்று. ஆமருவியப்பன் என்றும் கோஸகர் என்றும் ப்ரக்யாதி வாய்ந்த பெருமாள் அந்த ஊரில் கோவில் கொண்டிருக்கிறார்.

சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் அந்த ஊருக்குப் போனபோது இரண்டு பக்கங்களில் இரண்டு கோபுரங்கள் தெரிந்தன. ஒன்று ஈஸ்வரன் கோவில். இன்னொன்று பெருமாள் கோவில். அனன்யமான பக்தியை – அதாவது, ஒரு தெய்வத்திடம் மட்டுமே மனசை பூர்ணமாக அர்ப்பணித்துச் செய்கிற பக்தியை – ஈஸ்வரனிடமே வைக்கவேண்டுமென்றுதான் அவருக்கு அதிகாரம் சிவ பக்தியை வளர்த்துக் கொடுக்கவே அதிகார புருஷராக அவதாரம் செய்திருந்தவர் அவர். அதனால் கண்ணுக்குத் தெரிந்த இரண்டு கோவிலில் எது சிவாலயம் என்று தெரியாமல் அவர் கொஞ்சம் குழம்பினார். அப்போது இந்தப் பிள்ளையார்தான் அவருக்குக் கோவிலை அடையாளம் காட்டினார். அதனால் 'வழிகாட்டி விநாயகர்' என்றும் அவருக்கு ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது.

ரொம்பவும் சந்தோஷத்துடன் சிவாலயம் சென்று பதிகம் பாடின சம்பந்தர் ஸ்வாமியிடம், 'எனக்கு வழிகாட்டியது பிள்ளையார்தான் என்று என்றென்றைக்கும் லோகம் நினைவு வைத்துக் கொள்ளும்படியாக அவருக்கு என் பெயரையே சூட்டவேணும். அதோடு, நீங்கள் ஆர்த்ரா (ஆருத்ரா) தரிசனமும் அந்த சந்நதியில்தான் மண்டகப்படி நடத்திக்கொள்ள வேண்டும்' என்று வரம் கேட்டு வாங்கிக் கொண்டார்.

அதனால்தான் அங்கே அந்தப் பிள்ளையாருக்கு 'ஆளுடைய பிள்ளையார்' என்றே சொல்லப்படும் ஞானசம்பந்தரின் பேர். அந்த ஊர் சிவன் கோவில் நடராஜாவுக்குத் திருவாதிரையின்போது இன்றைக்கும் அங்கே தான் ஆர்த்ராதர்சன வைபவம் நடத்தப்படுகிறது. சம்பந்தரை விக்னேஷ்வரருடன் சம்பந்தப்படுத்தும் இன்னும் இரண்டு சம்பவங்களில் அப்பர் ஸ்வாமிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

அந்த இரண்டு தேவாரகர்த்தாக்களும் சமகாலத்தவர்கள். சம்பந்தருக்கு அப்பர் 'ஸீனியர் கான்டெம்பரரி'. இரண்டுபேருக்கும் பரஸ்பரம் அபார ப்ரியமும் மரியாதையும். சேர்ந்து சேர்ந்தே அநேக க்ஷேத்திரங்களுக்குப் போயிருக்கிறார்கள். அந்த ஊர்களில் இருந்த ஜனங்களுக்கு அப்படியொரு பெரிய பாக்யம்- சிவ பக்தியிலேயே ஊறிப் பழுத்த பழம் அப்பர், பிஞ்சிலேயே பழுத்த சம்பந்த மூர்த்திகள் இரண்டு பேரையும் சேர்த்து தரிசிக்கும்படியாக!

அந்த மாதிரி அவர்கள் திருவீழிமிழலை என்ற மகாக்ஷேத்திரத்திற்குச் சேர்ந்து போனார்கள். அவர்கள் வந்ததில் ஊராருக்கு ரொம்பவும் சந்தோஷந்தான். ஆனாலும் அந்த சந்தோஷத்தைக் கொஞ்சம் பங்கப்படுத்துவதாக அப்போது அங்கே கடுமையான பஞ்சம் ஏற்பட்டிருந்தது.

தன-தான்யம் என்கிறது (வழக்கம்). தான்யத்திற்கு இந்த மாதிரிப் பஞ்சம் வந்தாலும், தனஸம்ருத்தி (செல்வச் செழிப்பு) இருந்தால் வெளியூர்களிலிருந்து தானியங்கள் கொள்முதல் செய்துகொண்டு சமாளித்து விடலாமோன்னோ? அதனால், ஜனங்களின் கஷ்டத்தைப் பார்த்து மனசுருகிய அந்த இரண்டு பேரும் ஈஸ்வரனிடம் பொன் கேட்டுப் பிரார்த்தித்தார்கள். பொன்னாசையைத் தள்ளின இரண்டு பேரும் லோகோபகாரத்திற்காக அப்படிக் கேட்டுக் கொண்டார்கள். ஸ்வாமியும் இரண்டு பலி பீடங்களில் அவர்களுக்குப் பொன் வைத்தார். 'படிக்காசு' என்ற நாணய ரூபத்தில் பொன்னை வைத்தார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com