உதடுகள் பராமரிப்பு

உதடுகள் பராமரிப்பு
Published on

வாரத்தில் இரு நாட்கள் உதடுகளில் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் உதடுகள் ரோஜா பூ போல் மென்மையாகும். முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் பூசிவந்தால், உதடுகள் அழகு பெறும்.

தினமும் உதடுகளில் நெய் அல்லது வெண்ணெயை தடவி வர, வெடிப்புகள் நீங்கி உதடுகள் வழுவழுப்பாகக் காட்சி தரும். உதடுகளில் வெடிப்பு இருந்தால் அதனை சரி செய்த பிறகே லிப்ஸ்டிக்கோ மேக்கப்போ போட வேண்டும்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக உதடுகளில் தடவாமல் லிப்பிரஷ்ஷின் உதவியோடுதான் போடவேண்டும். உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க ஃபேஸ் வாஷ் அல்லது தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக் போடும்முன் உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும். லிப்ஸ்டிக் போட்டபின்தான் லிப் கிளாஸ் தடவ வேண்டும். அப்போதுதான் நன்றாக இருக்கும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் போடக்கூடாது. இதனால் தொற்றுநோய்கள் பரவும். இரவில் பீட்ரூட் சாறு தடவிவந்தால், உதடு ரோஸ் நிறமாகும். இரவு படுக்கப்போகுமுன் உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விடுவது, உதட்டுக்கும் உடலுக்கும் நல்லது.

– எஸ்.சித்ரா, சிட்லபாக்கம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com