
கெளதமன்
வழக்கமாக நட்சத்திர வீராங்கனைகளின் போட்டிக்களமாக இருக்கும் அமெரிக்க ஓபன் டென்னில் போட்டியின் இறுதியாட்டம், இந்த ஆண்டு, தர வரிசையில் அதலபாதாளத்திலிருக்கும் இரண்டு வீராங்கனைகளுக் கிடைப்பட்ட போட்டியாக நடந்தது. இதில், தரவரிசையில் 150வது இடத்திலிருந்த, 18 வயது இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு, தர வரிசையில் 73வது இடத்திலிருந்த 19 வயது கனடா வீராங்கனை லேலா பெர்னான்டஸை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையைக் கைப்பற்றி ஆச்சர்யப்படுத்தியிருக் கிறார்! பதின்வயது பெண்களுக்கிடையே இறுதியாட்டம் நடைபெற்றிருப் பதும் ஒரு சாதனை!
இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு, இந்த கிரான்ட்ஸ்லாம் போட்டிக்குத் தகுதி பெறுவதற்காக மட்டுமே மூன்று சுற்று ஆட்டங் களில் விளையாடினார். அதன்பின்னர், இந்தப் போட்டியிலுள்ள சுற்றுக் களில் தொடர்ச்சியாக வென்று, கோப்பையைக் கைப்பற்றியுள்ளார். இதில், அவர் கலந்துகொண்ட அனைத்து ஆட்டத்தையும் நேர் செட் களில் வென்றிருப்பது ஒரு உலக சாதனை. குவாலிஃபையர் ஆட்டத் தில் ஆடி, தேர்வு பெற்று, அதன்பின் கிரான்ட்ஸ்லாமில் விளையாடிக் கோப்பையை வென்ற முதல் வீராங்கனை என்பதும் உலக சாதனை. அதேபோல, 2004ம் ஆண்டில், தனது 17வது வயதில் கிரான்ட் ஸ்லாம் போட்டியை வென்ற மரிய ஷரபோவாவுக்கு அடுத்ததாக, 18 வயதில் வென்றதும் ஒரு சாதனை. 1977ம் ஆண்டுக்குப் பிறகு, இங்கிலாந்துக்காக கிரான்ட்ஸ்லாமை வென்றிருப்பது ஒரு சாதனை. இப்படியாக ஒரே ஆட்டத்தில் வென்று பல்வேறு சாதனை களுக்குச் சொந்தக்காரராகி, எம்மாடியோவ் என ஆச்சர்யப்படுத்தி யுள்ளார் எம்மா!
வாழ்த்துகள்!
இந்த இங்கிலாந்து வீராங்கனையின் பிறப்பிலும்கூட வித்தியாச மானதொரு சாதனை இருக்கிறது. இவரது அம்மா சீனாவைச் சேர்ந்த வர். அப்பா ருமேனியாவைச் சேர்ந்தவர். இவர் பிறந்ததோ கனடாவில். இரண்டே வயதில் இங்கிலாந்து நாட்டில் குடியேறி, வளர்ந்து, அந்நாட்டுக்காகக் களமிறங்கியிருப்பவர்! சர்வதேச வீராங்கனை என்பதற்குப் புது அர்த்தம் கொடுத்திருப்பவர்!