ஓ… ஓமம்!

ஓ… ஓமம்!
Published on

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க

செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரி செய்வது வரை பல நன்மைகளை வழங்குகிறது ஓமம். ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டியது அவசியம். இல்லையெனில், ஓமத்தினை நீரில் நன்றாக ஊற வைத்து அந்த நீரினை குடித்து வருவது நல்லது.

ஓமத்தில் உள்ள முழு சத்துக்களையும் நீரின் மூலம் எளிதில் பெற முடியும். அதற்கு இரண்டு தேக்கரண்டி ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின்னர் அடுத்த நாள் காலையில் ஓமத்தினை நன்றாக நசுக்கி தண்ணீரில் ஊற வைத்து அதனை வடிகட்டி குடிக்க வேண்டும்.

நாள்பட்ட வாயுத் தொல்லையால் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால், ஓம நீரை தினமும் குடித்து வாருங்கள். இதனால் வாயுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

ஓமம் ஒருவரது செரிமான சக்தியை மேம்படுத்தும். பொதுவாக, எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டு, வயிறு உப்புசத்தினால் அவஸ்தைப்படுவோம். அப்போது ஓமத்தை அல்லது ஓம நீரை ஒருவர் சாப்பிடும்போது, அதில் உள்ள, 'தைமூள்| எனும் பொருளானது வயிற்றுப் பகுதியில் உள்ள செரிமான திரவ சுரப்பிற்கு உதவுகிறது. எனவே, இது செரிமான செயல்பாட்டினை சீராக்கும்.

ஒரு டம்ளர் நீரில் ஓமத்துடன், சிறிது துளசி இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி பருகினால், நெஞ்சு சளி பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி

—————-

மடிசார் மகாலட்சுமி

பெங்களூரு மகாலட்சுமி நகரில் அமைந்துள்ள மகாலட்சுமி கோயிலில் எழுந்தருளியுள்ள மகாலட்சுமியின் உயரம் 17 அடி தாமரை பீடம் என்னும் கமலாசனம் 5 அடி உயரத்தில் இருக்க, அதன் மேல் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறார். உருவில் பெரிதான தேவிக்கு ஐந்து புடவைகள் இணைந்து அப்படியே (மடிசார்) சார்த்தி விடுகிறார்கள். மூக்குத்தி, காது, தோடு மூக்கு புல்லாக்கு, கொண்டையுடன் அமர்ந்திருக்கும் மகாலட்சுமிக்கு கொசுவம் வைத்து மடிசார் மடிப்புடன் அலங்கரிப்பது வழக்கம். இத்தேவியை வழிபட செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். இங்கு பிரசாதமாக லட்டு, கல்கண்டு, இனிப்பு வெண்மாவு, உருண்டை வழங்குவது வழக்கம்!
எம். வசந்தா, சென்னை

—————-

தங்க வடாபாவ் தெரியுமா?

துபாயில் உலகிலேயே முதன்முறையாக தங்கத்தில் செய்த துரித உணவான வடாபாவ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 22 காரட் தங்கத்தில் செய்யப்படுகிறது. வறுத்தெடுத்த உருளைக்கிழங்கு மசியலை மைதாவில் செய்த 'பாவ்' எனப்படும் இரு ரொட்டித் துண்டுகளின் நடுவே வைத்து வடாபாய் தயாரிக்கப் படுகிறது. அதன்பின் தங்க சரிகை காகிதத்தை வடாபாவை மூடி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர். ஒரு தங்க வடாபாவின் விலை 2,000 ரூபாய்!
ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி

—————-

வாஸ்து எளிய கருத்துகள்; பெரிய மாற்றம்!

ச்சைத் தாவரங்கள் வீட்டின் உட்புற சூழலைத் தூய்மையாக்கும்.மேலும் மன அமைதிக்கு தூண்டுகோலாக அமையும்.

 கிரிஸ்டல் கற்களும்,கல் உப்பும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சி தூய்மைப் படுத்தும்.

 ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து பறவைகள் அருந்த, வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல்கள் கூடும்.

வீட்டின் சமையலறையில் தென்மேற்கு மூலையில் தானியங்கள் சேமித்து வைக்க வளம் மென்மேலும் பெருகும்.

 வீட்டின் நிலை வாசல் கதவருகே,அதிகமான பொருட்களை சேமித்து வைக்காமல் இருந்தாலே, நேர்மறை ஆற்றல்கள் பெருகும்.

 டைனிங் டேபிளில் கூடைகளில் நிறைய பழ வகைகளை நிரப்பி வைத்தால்,உடல் நலனை உற்சாகப்படுத்த தூண்டுகோலாக அமையும்.

வீட்டின் நுழைவு வாயில் அதிக வெளிச்சம்படும் வகையில் இருப்பது நேர்மறை ஆற்றல் பெருக உதவும்.

 வீட்டின் கழிப்பறை மற்றும் குளியலறை வீட்டின் பூஜையறைப் போலவே சுத்தமாக வைத்திருந்தால் நேர்மறை ஆற்றல்கள் பெருகும்.
சகுந்தலை அசோகன், மும்பை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com