கிராமத் தேவதைக்கு டால்பின் படையல்!

கிராமத் தேவதைக்கு டால்பின் படையல்!
Published on
சுற்றுச்சூழல்
மூலவன்

அட்லாண்டிக் கடல் பகுதியில் பாரம்பரிய திருவிழாவிற்காக 1,500 டால்பின்கள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க்கில் உள்ள வடக்கு அட்லாண்டிக் தீவுகள் சுமார் 50,000 மக்கள் தொகை கொண்டது. அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைத்துள்ளது பரோயே தீவுக் கூட்டம். உலகின் மிக அழகான தீவுக் கூட்டங்களில் இது வும் ஒன்று. உலகின் விளிம்பு என அழைக்கப்படும் இந்தத் தீவுகள் மிகப் பழமையானது.

அண்மையில் பரோ தீவுகளில் ஒரே நாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்பின்கள் வேட்டையாடப்பட்ட நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. டானிஷ் நாட்டில் கடந்த நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நிகழ்வாக ஆண்டுதோறும் நடைபெறும் கிரீன் டிராப் வேட்டை அந்த மீனவ கிராமத்தின் தேவதைக்குப் படையல் வைப்பதற்காக டால்பின்களைக் கொல்லுவது வழக்கம். வடக்கு அட்லான்டிக் தீவுக் கூட்டத்தில் குவியும் டால்பின்களை வேட்டையாடுவது என்பது இறைச்சி, மருத்துவப் பயன்பாடு மற்றும் பொழுதுபோக்கு அம்சமாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பரோ தீவுகளின் கடற்கரைகளில் 1,428 டால்பின்கள் கொல்லப்பட்டன.

கடலில் தங்கள் இஷ்டம்போல் விளையாடிக்கொண்டிருந்த டால்பின் கள் கொல்லப்பட்டு மோட்டார் படகுகள் மூலம் கரைக்குக் கொண்டு வரப்பட்டு நீண்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்போது டால்பின்களின் உடல்களில் இருந்து உதிர்த்த உதிரத்தால் நீல வண்ண கடற்பரப்பு செந்நிறமாகக் காட்சியளித்தது.

டால்பின்களைக் கொல்வதைப் பாரம்பரிய நிகழ்வாகக் மேற்கொண்டாலும் உலகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தக் கொடூரத்தைப் பார்த்துக் கொதித்துப் போயுள்ளனர். மேலும் கடல்சார் உயிரினப் பாதுகாப்பு அமைப்பு களிடமிருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

எங்கள் திருவிழாவிற்காக டால்பின்களைப் பலி கொடுப்பது வழக்கம். அது எங்கள் உரிமை என்றாலும் இப்படிப் பெருமளவில் ஒரே நாளில் நாங்கள் கொல்வதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பெரும் நிறுவனங்கள் எங்கள் கடல் வளத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள் உள்ளூர் மக்கள்.

உலகச் சுற்றுசூழல் ஆய்வாளர்கள் டென்மார்க் அரசு உடனடியாக தலையிட்டு இந்தக் கொலைகளை நிறுத்தவேண்டும் என வேண்டுகிறார்கள். அந்தக் கிராம தேதைதான் டால்பின்களைக் காக்கவேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com