
1. "கமலம், நீ சிவப்புப் புடைவை கட்டிக்கிட்டு தலைநிறைய மல்லிகைப் பூவோடு ஜல் ஜல்னு கொலுசு சத்தத்தோடு நடந்து வரும்போது எப்படி இருக்கே தெரியுமா?"
"சென்னாத்தானே தெரியும்?"
"வேண்டாம் சொன்னா நீ ரொம்ப பயப்படுவே…"
– வி. ரேவதி, தஞ்சை
2."புலவருக்கு ஏன் சவுக்கடி விழுகிறது?"
"மன்னரைப் பார்த்துப் புகழ்ந்து பாடுவதற்குப் பதில் ஒப்பாரி பாடல் பாடி விட்டாராம்."
– சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்
3. "படத்தின் க்ளைமேக்ஸ் நம்பும்படியாக இல்லையே…"
"அப்படியா?"
"ஆமாம். கடைசியில் பேய் விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்குதுன்னு காட்றாங்க."
– ஆர்.யோகமித்ரா, சென்னை
4. "தலைவர் கட்சி மாறப்போறார்னு எப்படிச் சொல்றே?"
"இப்பல்லாம் பேசும்போது கட்சியின் நலன் கருதி, கட்சியின் நலன் கருதின்னு அடிக்கடி பேசுறாரே…"
– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்
5. "மதியம் ஒரு மணிக்கு டி.வி. சீரியல் பார்த்தியா சரசா?"
"ஆமா ஏன் கேக்கறே?"
"இல்ல நீ கேவிக் கேவி அழுத மாதிரி சத்தம் கேட்டிச்சே…"
– வி. ரேவதி, தஞ்சை
6."மடைதிறந்த வெள்ளம்போல் பேசுகிறாரே தலைவர் ஏன்?"
"கடை மூடுவதற்குள் பேச்சை முடிக்கணும்னு கூட்டத்துக்கு கூட்டிக் கிட்டு வந்தவங்க சொல்லிட்டாங்களாம்."
– சி. ஸ்ரீரங்கம் திருவெறும்பூர்