கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்
Published on

ஓவியம் : ரஜினி

"புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு பண்றதுல ரெண்டு எம்.எல்..க்களுக் குள்ள வந்த பிரச்னையை அமைச்சர் தீர்த்துவச்சுட்டாராமே எப்படி?"
"குரங்கு அப்பம் பிரிச்ச கதையாத்தான்."  -விரேவதி. தஞ்சை

"சீட்டு கம்பெனி ஆரம்பிச்சது தப்பா போச்சு."

"ஏன்?"
"காலையில ஜாகிங் போனாகூட நூறு பேரு பின்னாடியே ஓடி வர்றாங்க."  -ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்

"யாருமே பிச்சை போடலைனா என்னப்பா செய்வே?"
"நல்ல கடையா பார்த்து ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன்."   -வி.ரேவதி, தஞ்சை

"டாக்டர், காது உள்ளே சங்கு ஊதறா மாதிரியே கேட்குது…"

"ஆபரேஷன் வரைக்கும் கேட்கும் அப்புறம் கேட்கவே கேட்காது.
கவலைப் படாதீங்க."   வி.பார்த்தசாரதி, சென்னை

"டேபிள் ஃபேன சிலிங் ஃபேனா மாற்றமுடியுமா?"
"முடியும், செய்திருக்காங்க."
"எங்கே?"
"ரயிலில் பாரு."   -ஆர்.யோகமித்ரா, சென்னை

"அந்த பேஷன்டோட கண்டிஷன் எப்படி இருக்குமா நர்ஸ்?"

"அவர் ஏகப்பட்ட கண்டிஷன் போடறாரு டாக்டர்."
                             -வி.பார்த்தசாரதி, சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com