சுவையான பீட்ரூட் வடை

சுவையான பீட்ரூட் வடை
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
– ஆர்.சாந்தா, சென்னை

தேவையானவை : துவரம் பருப்பு – கால் கப், கடலைப் பருப்பு – அரை கப், காய்ந்த சிவப்பு மிளகாய் – 5, சோம்பு – அரை தேக்கரண்டி, கல் உப்பு – தேவையான அளவு, இஞ்சி – சிறிதளவு பொடியாக நறுக்கியது, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் பொடிதாக நறுக்கியது – 2, பீட்ரூட் – 1, (நைஸாக சீவிக்கொள்ளவும்), கறிவேப்பிலை – சிறிதளவு பொடிதாக நறுக்கியது, எண்ணெய் – அரை லிட்டர்.

செய்முறை : துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இவற்றை சுத்தமாகக் களைந்து, இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து, அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு, சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, துருவிய பீட்ரூட் இவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் மாவை சிறிய சிறிய வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும். பொதுவாக, குழந்தைகள் அதிகமாக பீட்ரூட்டை விரும்புவது இல்லை. எனவே, வித்தியாசமாக இந்த பீட்ரூட் வடையை செய்துத்தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு ஆரோக்கியமானதும்கூட.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com