ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி – 2021 முடிவுகள்

ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி – 2021 முடிவுகள்
Published on

கடந்த பல ஆண்டுகளாக உங்கள் மங்கையர் மலரில், " ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி" வாசகர்களின் உற்சாக பங்கேற்புடன் வெகு ஜோராக நடந்து வருகிறது. தன் அன்பு மனைவி ஜெயஸ்ரீயின் பெயரில் இப்போட்டியினை நடத்தி பரிசுத் தொகையையும் வழங்கி வரும் திரு. ராஜகோபாலன் அவர்களுக்கு மங்கையர் மலர் சார்பாக நன்றிகள் பல.

இந்த ஆண்டு, இப்போட்டி, முதல் முறையாக, கல்கி குழுமத்தின் www.kalkionline.com இணையதளம் வாயிலாக மட்டுமே நடத்தப்பட்டது. ஆன்லைனில் மட்டுமே அறிவித்து நடத்தப்பட்ட இப்போட்டியில் நூற்றுக்கணக்கான வாசகர்கள் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. முதல் சுற்று நடுவர்களாக அமர்ந்து, பெறப்பட்ட கதைகளை பொறுமையாக படித்து குறிப்பெடுத்து தேர்வு செய்தனர் திருமதி. ஸ்யாமளா ரங்கநாதன், திருமதி. பத்மினி பட்டபிராமன், திருமதி. மங்கை ஜெயகுமார் மற்றும் திருமதி.உஷா ராமகிருஷ்ணன்.

பாரதிபாலன்
பாரதிபாலன்

இறுதிச் சுற்று நடுவராக இருந்து மிகச் சிறந்த 12 கதைகளைத் தேர்வு செய்தார் எழுத்தாளர்,சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் திரு. பாரதிபாலன் அவர்கள். தனக்கு இப்பணி ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

மங்கையர் மலர் – ஜெயஸ்ரீராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டியின் இறுதிச் சுற்றில் பரிசுக்கு உரிய கதைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை வழங்கிய 'மங்கையர் மலர்' இதழுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி.

இப்போட்டியில் கிராமம், நகரம், மாநகரம் மற்றும் பிற மாநிலங்களில் வசிப்பவர்கள் பல்வேறு வயதினர், நிலையினர் என்று மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றிருப்பது மகிழ்சியாக இருக்கிறது . இவர் தம் படைப்புகளில் மனதினை – மொழியை – தற்காலச் சமூகத்தை உள்வாங்கிப் பிரதிபலிக்கும் தன்மையைக் காணமுடிகிறது. படைப்பு நுட்பமும் – கலை வெளிப்பாடும் சற்றுக் குறைவாக இருந்தாலும், அவர்களின் படைப்பார்வமும், தான் உள்வாங்கிக் கொண்டவைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற வேட்கையும் எனக்கு இங்கே முக்கியமாகப் படுகிறது. அவர்களின் படைப்பு மனதினை கனிவித்து, ஊக்கமூட்டி, உற்சாகப்படுத்திய கல்கி குழுமத்தின் இந்தப் பணி போற்றத்தக்கது. இது எனக்கு ஒரு புதுவிதமான அனுபவம்.
– பாரதிபாலன்.

தலா 3000/- பரிசு பெறும் கதைகளின் விவரம் பின்வருமாறு:

1. மாசிப் பிறை – பானுமதி, சிங்கப்பூர்
2. அவர் பொருட்டுப் பெய்யும் மழை – ஆதலையூர் சூரியகுமார், திருநாகேஸ்வரம்
3. என்னை மன்னிச்சிடு பார்வதி – இராம. பாலஜோதி – புதுக்கோட்டை
4. புதிய ஜோதி – சக்தி சோலை – பந்தல் குடி
5. உன்னோடு எந்நாளும் – ஜனனிராம் – சென்னை
6. இறை விளையாட்டு – கஸ்தூரி குருசாமி – சென்னை
7. பெரியாத்தா – வள்ளி – திருநெல்வேலி
8. அன்பெனும் பேராயுதம் – நித்யா – திருப்பூர்
9. சம்பளம் – ர. கிருஷ்ணவேனி – நொளம்பூர்
10. ஏழு வயசுக்கு எல்லாம் தெரியும் – பாமதி நாராயணன் – பெங்களூரு
11. எதிர்பாராதது – கீதா சீனிவாசன் – பெருங்களத்தூர்
12. இனிமே இப்படித்தான் – தனபாக்கியம் – ஈரோடு.

பரிசு பெற்ற சிறுகதைகள் அக்டோபர் 11-10-2021 வாரம் முதல்
மங்கையர் மலர் ஆன்லைன் இதழில் தொடர்ந்து வெளியாகும்.
இணைந்திடுங்கள்: www.kalkionline.com படித்து மகிழுங்கள் !
பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com