மலரும் மனிதநேயம்

மலரும் மனிதநேயம்
Published on

இனி படிக்க வைக்க இயலாது என்று அவளது கூலி வேலைக்குப் போகும் தாயாரால் தீர்மானிக்கப் பட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்த தேவதை.விவரம் அறிந்து சமயபுரம் மொடக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அழைத்து வந்தார். அந்தப் பெண்ணின் பெயர் துர்கா.

"என்ன க்ரூப் வேண்டும்?""வொகேஷனல்தான் கிடைக்கும்னு சொன்னாங்க.""ஃபர்ஸ்ட் க்ரூப் தரேன். படிக்கிறியா?""முடியுமா தெரியல?""முடியுமா பாரு. முடியலன்னா மாத்திக்கலாம்.""சரிங்க சார்."

இப்படியாக எனது மகள்களின் எண்ணிக்கையில் இன்னும் ஒரு எண்ணைக் கூட்டினாள் துர்கா."செல் வாங்குவதற்காக வந்த தொகையில் முதல் செல் அவளுக்கு. சிம் போட்டுத் தரேன் யார்ட்டயாச்சும் பேசு."

"போன் பேசனதே இல்ல அவ. வீடுபோயி சாமி கும்பிட்டுட்டு பேசச் சொல்றேன்"என்கிறார் அவளது பாட்டி. ரயிலேறாத குழந்தையைப் பார்த்திருப்போம். இந்த டிஜிட்டல் உலகத்தில் போனே பேசியிருக்காத குழந்தைகள் சிலர் எம் பள்ளியில் உண்டு.

அவளுக்கு குவைத்தில் இருந்து ஒரு தோழர் அனுப்பிய 12,000 ரூபாயில் இருந்து 9700க்கு வாங்கிய போன்தான் துர்காவிடம் இப்போது. இரு நண்பர்கள் அனுப்ப இருப்பதையும் சேர்த்து 59000 ரூபாய் வருகிறது. இதில் 9700 போக அந்த இரு நண்பர்களும் அனுப்பும் பட்சத்தில் 49,300 மீதம் உள்ளது. திங்களன்று இன்னும் ஐந்து குழந்தைகளுக்கு செல் வரும். பெயர் சொல்லக்கூடாது என்பதால் சொல்லவில்லை. பணம் கொடுத்தவர்களோடு குழந்தைகள் பேசுவார்கள்.

என்னுடைய ஒவ்வொரு குழந்தைக்குப் பின்னாலும் ஒரு கதை உண்டு. இந்த ஆண்டு உதவி பெற்று 10 குழந்தைகளைக் கல்லூரிகளில் சேர்த்திருக்கிறோம். அதற்காகப் படாத பாடுபட்ட எங்கள் நண்பர் ஆனந்தகுமார் சாருடைய கைகளைப்பற்றிக் கொள்கிறேன். பழைய செல் இருப்பவர்கள் கொடுத்து உதவுங்கள்.

இப்போதும் கையேந்துகிறேன்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com