மீண்டும் அமலா

மீண்டும்  அமலா
Published on

-வினோத்

நடிகை அமலாவை நினைவிருக்கிறதா? 1980களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கியவர். . ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ள அமலா 'மைதிலி என்னை காதலி', 'மெல்ல திறந்தது கதவு', 'வேலைக்காரன்', 'வேதம் புதிது', 'அக்னி நட்சத்திரம்', 'மாப்பிள்ளை' உள்ளிட்ட பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 1991இல் வெளியான 'கற்பூர முல்லை' படத்தில் நடித்திருந்தார். 

தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்  ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1992 ஆம் ஆண்டு  பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு அகில் என்கிற மகன் உள்ளார். முதலில் இந்தச்செய்தி வந்த போது பலர் இது

வதந்தி என்று ஒதுக்கினர். காரணம் திருமணத்துக்குபின் நடிப்பதில்லை என்பதில் தீர்மானயிருந்தவர் அவர். ஆனால் இப்போது 30 வருடங்களுக்குப் பிறகு, தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் 'கணம்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்,

இந்தப் படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015இல் வெளியான 'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துவந்த ஷர்வானந்த், 6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது முழமூச்சில். புத்தாண்டில் படம் வெளியாகும் என்கிறது டோலிவுண்ட் வட்டாரம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com