வாசகனை மனதில் வைத்து எழுதினால்…

 வாசகனை மனதில் வைத்து எழுதினால்…
Published on

முகநூல் பக்கம்

கா.சு. வேலாயுதன்

வாசிப்பு, பதிப்பு உலகில் பொன்முட்டையிடும் வாத்தாக இன்ன மும் விளங்கும் கல்கியின் நூல்கள் 1999-ல் அரசுடைமையாக்கப்பட்டது. அவரின் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் பரிவுத்தொகை  வழங்கப்பட்டது.

அப்போது கல்கியின் நிரந்தர பதிப்பாளரான வானதியிடம் கல்கி வாரிசுகள் "உங்களிடம் விற்பனையாகாத கல்கியின் நூல்கள் எவ்வளவு இருக்கின்றன? கல்கி நூல்கள் நாட்டுடைமையாவதால் ஒவ்வொரு பதிப்பகமும் தன் இஷ்டம் போல் அவர் புத்தகங்களை அச்சிட்டு பணம் பார்த்துவிடும். நியாயப்படி அதில் பெருநஷ்டம் உங்களுக்குத்தான். எனவே இந்தப் பரிவுத்தொகை உங்களுக்கே சேரும்" என்று தெரிவிக்க, பதிப்பாளரோ, "இல்லையில்லை. அவரின் நூல்களின் முழு உரிமை வாரிசுகளான உங்களுக்குத்தான். நீங்கள் வைத்துக்கொள்வதே சரி" என்று கூற கல்கி வாரிசுகள் அதை ஏற்கவில்லையாம்.

பதிலாக, "பரிவுத்தொகை 20 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்து, அதில் வரும் வட்டித் தொகைக்கு ஈடாக வானதி அச்சிடும் கல்கியின் நூல்களை விரும்பும் பள்ளி, கல்லுரிகளுக்கு வழங்கிடவும், அந்தத் தொகையை வானதி எடுத்துக்கொண்டு, அதற்கான பில்களை கல்கிக்கு அனுப்பிடவும் மாற்று ஏற்பாடு செய்துள்ளனர்.

கா.சு.வேலாயுதன்
கா.சு.வேலாயுதன்

இன்றுவரை அதுதான் நடந்து வருவதாக வானதியின் பதிப்பாசிரி யரே என்னிடம் தெரிவித்தார். ஒரு எழுத்தாளரும், பதிப்பாளரும் இப்படி ஒரு தார்மீக வணிக உறவு முறையுடன் செயல்பட்டது நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை.

பிரதிபலன் பாராமல் வாசகர்களை மனதில் வைத்து இதயசுத்தி யுடன் எழுதப்படும் எழுத்தும், அதே மனதுடன் வாசகர்களை மனதில் வைத்தே பதிப்பிக்கப்படும் புத்தகங்களும் இப்படி நீடு வாழுமோ என்னவோ? எழுத்தும், எழுதுகோலும் தெய்வம் என்பது இதுதானோ?

(கே.கே.மகேஷ் பதிவிட்ட 'நூல்கள் நாட்டுடைமை' குறித்த பதிவுக்கு நானிட்ட பின்னூட்டத்திலிருந்து)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com