வெங்காயம் பூண்டு சமாசாரம்

வெங்காயம் பூண்டு சமாசாரம்
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

– ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம்

வெள்ளைப் பூண்டை உரிக்கக் கஷ்டமாக இருந்தால், லேசாக நசுக்கியோ, வெயிலில் சிறிது நேரம் காய வைத்தோ, வெறும் வாணலியில் போட்டு சூடு படுத்தியோ உரித்தால் சுலபமாக இருக்கும்.
வெங்காயம், பூண்டு உரிக்கும்போது தோல் காற்றில் பறக்கும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர்விட்டு, அதில் தோலைப் போட்டால் பறக்காது. தோலை அள்ளிப் பெருக்க வேண்டியதில்லை.
வெங்காயம், பூண்டு நறுக்கிய கத்தியை உப்பு கரைத்த நீரில் கழுவினால் அதன் வாசனை போய்விடும். கைகளையும் உப்பு நீரில் கழுவிக் கொண்டால் அந்த வாசனை நீங்கும்.
வெங்காயம் வதக்கி, இறக்கி வைக்கும்போது அதில் சிறிது நீர் சேர்த்தால் பொன்னிறமாக இருக்கும். எளிதில் ஜீரணமாகும்.
வெங்காயம் வதக்கும்போது சிறிது சர்க்கரைச் சேர்த்தால் சீக்கிரம் வதங்கி விடும். சுவையும் கூடும்.
வெங்காயத்தை வெறும் வாணலியில் வதக்கிவிட்டு, பிறகு எண்ணெய் சேர்த்தால் விரைவில் சிவந்து வதங்கும்.
வெங்காயத்தை, சிறிது எண்ணெயில் வதக்கி, பிறகு பஜ்ஜி செய்தால் சுவை கூடும். வளையம் வளையமாகப் பிரியாது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com