மலைப் பாறைக்கு நடுவே சிக்கிய இளைஞர்: 3 நாட்களுக்குப் பின் ராணுவம் மீட்பு!

மலைப் பாறைக்கு நடுவே சிக்கிய இளைஞர்: 3 நாட்களுக்குப் பின் ராணுவம் மீட்பு!

கேரளாவில் மலப்புழா சேரத் என்ற செங்குத்தான  மலையேற்றத்தில் ஈடுபட்டபோது பாபு என்ற இளைஞர் பாறியின் நடுவே சிக்கி 3 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த நிலையில், இன்று ராணூவம் அவை மீட்டது.

கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில்  மலப்புழா சேரத் என்ற செங்குத்தான  மலையேற்றத்தில் பாபு என்ற இளைஞர் ஈடுப்பட்டபோது, பாறைகளில் சிக்கி, மலைப் பள்ளத்தில் அதல பாதளத்தில் விழுந்தார்.

கிட்டதட்ட இரண்டு நாட்களுக்கு மேலாக உணவு  தண்ணீரின்றி மயங்கிய நிலையில் இருந்த பாபுவைப் பற்றி தகவல் அறிந்த ராணுவம், அவரை மீட்க விரைந்தது. சென்னையிலுள்ள தக்ஷின பாரத்தைச்  சேர்ந்த மலையேற்றத்தில் சிறப்பு பெற்ற ராணுவ வீரர்கள் கடும் முயற்சிக்குப் பின்னர் மலையேறி இளைஞர் பாபுவை மீட்டுள்ளனர். மூன்று நாட்களாக மலை பள்ளத்தில் சிக்கிய இளைஞர் பாபுவை 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டு, அவரை ராணுவத்தினர் மேலே ஏற்றி கொண்டு வந்தனர். பின்னர் ஹெலிக்காப்டர் மூலமாக மருத்துவமனைக்கு பாபு  அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com