0,00 INR

No products in the cart.

​மன இருள் விலக்கும் கீதை!

ரு பெரியவர் எப்போதும் தனது வீட்டு வாசலில் அமர்ந்து, பகவத் கீதையை படித்துக்கொண்டே இருந்தார்! இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டு வந்தான்!

ஒரு நாள் அவரிடம், தாத்தாஎப்போதும் இந்தப் புத்தகத்தையே படிச்சுகிட்டு இருக்கீங்களே, இதை எவ்வளவு காலம் படிக்கிறீங்க? என்றான்.

பெரியவர், ஒரு அம்பதுஅம்பத்தஞ்சு வருஷமா படிக்கிறேன்” என்றார்.

அப்படின்னா, இந்தப் புத்தகமே உங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் இதை படிக்கிறீங்க? என்றான் இளைஞன்.

தாத்தா சிரித்தபடி, தம்பிஎனக்கு ஒரு உதவி செய்! அதுக்கப்புறம் பதில் சொல்றேன்” என்றார்.

இளைஞன், என்ன உதவி தாத்தா? என்றான்.

பெரியவர், பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார். அதில் அடுப்புக் கரி இருந்தது! அதை ஒரு மூலையில் கொட்டினார்! பல நாட்களாக அடுப்புக் கரியை சுமந்து சுமந்து, அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது!

பெரியவர், தம்பி, அதோ அங்கே இருக்கிற தண்ணீர் பைப்புல இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்” என்றார்.

இளைஞனுக்கு சிரிப்பு வந்தது! இருந்தாலும் பெரியவர் சொல்லிவிட்டதால், எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான். அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா தண்ணீரும் மூங்கில் கூடையின் ஓட்டை வழியே தரையில் ஒழுகிப்போனது!

பெரியவர், தம்பி, இன்னும் ஒரு முறை பிடியேன்” என்றார்.

இளைஞன் மீண்டும் முயன்றான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்? மீண்டும் கீழே கொட்டிப்போனது!

பெரியவர், இந்தத் தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் தண்ணீர் நிரப்பிப் பாரேன்” என்றார்.

இளைஞன் மனதிற்குள், ‘இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுவோம்!’ என்று நினைத்துக்கொண்டு தண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே எல்லா தண்ணீரும் தரையில்.

தாத்தா, இந்தாங்க உங்க கூடை! இதில் தண்ணி நிற்குமான்னு உங்களுக்குத் தெரியாதா? எதுக்கு என்னை இந்தப் பாடுபடுத்துறீங்க” என்றான்!

அவர் புன்னகையோடு, இதுல தண்ணி நிற்காதுன்னு எனக்கும் தெரியும்! நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும்போது இதோட உட்புறம் எப்படி இருந்தது?” என்றார்.

ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது” என்றான் இளைஞன்.

இப்போ பார்” என்றார் தாத்தா. தண்ணீர் பட்டு பட்டு அடுப்புக் கரியின் கறுப்பு நிறம் கலைந்து, கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது!

பெரியவர், தம்பிநீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்! எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை! ஆனாலும், ஒவ்வொரு முறையும் நீரில் நனைய நனைய கூடை சுத்தமாயிடுச்சு! அது போலத்தான், எத்தனை முறை படிச்சாலும் முழு பகவத் கீதையும் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது! ஆனா, படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கு கறைந்து சுத்தமாகிக்கிட்டே இருக்கும்” என்றார்!

அந்த வார்த்தைகள், இளைஞனை ஆழ்ந்து யோசிக்கச் செய்தது! இறை நாமம் சொல்லச் சொல்ல, நம் மன அழுக்குகள் அகலும்! பக்தி காவியங்களைப் படிக்கப் படிக்க இறை சிந்தனை பெருகும்! மன சஞ்சலம் விலகும்! நம் முன்வினைகள் அகலும்!

கே.கெளசல்யா, நங்கநல்லூர்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

படித்தேன்; ரசித்தேன்!

0
வலிமை பெற்ற மனம்! எண்ணங்களின் குவியலே மனம். எண்ணங்களிலிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமை ஆனது. மனம் அலைபாயும்போது சக்தியானது எண்ணத்தினால் சிதறிப்போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போதுதான் சக்தி சேமிக்கப்படுகிறது. மனமும் வலிமை...

எளிய பரிகாரமும் ஏற்றமிகு பலன்களும்!

1
​உடல் நோய் தீர்க்கும் மிளகு தீப வழிபாடு! தீராத உடல் நோயால் அவதியுறுவது, உரிய வயதாகியும் திருமணம் கைகூடாமல் தடைபடுவது, திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறின்றி வருந்துவது, பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றால்...

பத்ராசல திருக்கோலத்தில் ஸ்ரீ கோதண்டராமர்!

- தனுஜா ஜெயராமன் பழங்காலத்தில், ‘ஸ்ரீமாபில க்ஷேத்ரம்’ என்று அழைக்கப்பட்ட சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் விஸ்தாரமான இடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கருவறையில் பிரதான மூலவராகக் காட்சி தருபவர்...

​முற்றும் துறந்தவர்; முழுதும் அறிந்தவர்!

0
- ஸ்ரீதர் தனது அறுபத்தைந்து வயது வரைக்கும் மடத்துக்காகவே தொண்டு செய்து, மகாபெரியவர் பாதமே கதி என்று இருந்தவர் பஞ்சாபகேசன். அதுக்கு மேல் ஆசார்யாளுக்கு கைங்கர்யம் செய்ய அவரோட தள்ளாமை இடம் கொடுக்கவில்லை. அதனால்,...

கேட்டேன்; ரசித்தேன்!

0
ஸ்தூல பஞ்சாட்சரமும்; சூட்சும பஞ்சாட்சரமும்! ‘நமசிவாய’ என்பது ஸ்தூல பஞ்சாட்சரம், ‘சிவாயநம’ என்பது சூட்சும பஞ்சாட்சரம். ‘ஸ்தூல’ என்றால் கண்களால் காணக்கூடியது. ‘சூட்சுமம்’ என்றால் கண்களால் காண முடியாதது. அதாவது, ‘நமசிவாய’ என்று தெளிவாக...