மனதில் அன்பு வேண்டும்.. மியூசிக் ஆல்பம் வெளியிட்ட ஹன்சிகா!

மனதில் அன்பு வேண்டும்.. மியூசிக் ஆல்பம் வெளியிட்ட ஹன்சிகா!
Published on

ராகவ் குமார்.

:தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஹன்சிகாவிற்கு ஒரு தனியிடம் உண்டு. இந்த ஒமிக்ரான் கொரோனா காலகட்டத்தில் பல நடிகைகள் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பரப்பிகொண்டு இருக்க, ஹன்சி அன்பை பரப்பி கொண்டு இருக்கிறார்.   

புகழ் பெற்ற இசை அமைப்பாளர்  சுனிதி சௌகானால் பஞ்சாபி மொழியில் வெளியான ஸ்ரீம் பாகல் என்ற இசை ஆல்பதை ஹன்சிகா வெளியிட, உடனடியாக சில மணி நேரங்களில் அந்த மியூசிக் ஆல்பம் 12 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்து சார்ட் பஸ்டராக  உள்ளது.       

இந்த ஆல்பத்தை பற்றி கூறும் ஹன்சி, "இந்த கோவிட் சூழல் திரை உலகம் உட்பட பல்வேறு துறையில் உள்ள மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த மன இருக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வர நேர்மறையான எண்ணங்களை விதைக்க வேண்டும்.இதற்கு மனதில் அன்பு வேண்டும்.இந்த அன்பை இந்த இசை ஆல்பம் மைய கருத்தாக கொண்டுள்ளது.நாம் மற்றவர்கள் மீது செலுத்தும்  அன்பு மட்டும் தான் இந்த இக்கட்டான நிலைமையில் இருந்து மாற்றும் என தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அதற்கான சிறு படிதான் இந்த இசை வெளியிடு "என்கிறார்

ஹன்சிகா தற்சமயம் பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம்சுருதி,105 மினிட்ஸ்,R. கண்ணன்,என ஒன்பது படங்களை கை வசம் வைத்துள்ளார். நல்ல மனசு இருக்கும் பொண்ணுக்கு எல்லாம் நல்லாத்தானே நடக்கும்?!. இந்த புத்தாண்டில் அழகான குட்டி குஷ்பூ ஹன்சிகாவை திரையில் ரசிகர்கள் ரசிக்கலாம். நேர் மறை எண்ணங்களை விதைக்கும் ஹன்சிக்கு ஒரு ஓஹோ போடலாமா?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com