0,00 INR

No products in the cart.

அவ்வப்போது நினைவுபடுத்த… எப்போதும் நினைவில்கொள்ள!

.எஸ்.கோவிந்தராஜன், சென்னை

பொதுவாக, நகரங்களில் அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு இருக்கிறது. அனைவருக்கும் கேஸ் அடுப்பைப் பயன்படுத்தும் விதம் நன்கு தெரிந்திருக்கும்.

மையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும்போது, சமையல் கேஸ் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால், சிலிண்டர் விநியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

வெப்பமான பிற பொருட்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும்போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு வித எரிவாயு சம்பந்தமான அடுப்புகளை வைத்துப் பயன்படுத்தக் கூடாது. சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் ரப்பர் டியூப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சிலிண்டரில் கசிவு இருப்பதாக உணர்ந்தால் உடனே சோப்பு நீர் கலந்து சிலிண்டர் மீது ஊற்றினால் நீர்க்குமிழ் உருவாகும். இதைக்கொண்டு எரிவாயு கசிவை பரிசோதிக்கலாம். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.

நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கேஸ் கசிவு இருப்பதை அறிந்தால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும்.

சிலிண்டர்களை நல்ல முறையில் உபயோகப்படுத்த சில குறிப்புகள் :

மைக்கும்போது, அடுப்பில் பாத்திரங்களை வைத்துவிட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விட்டால் சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இதனால் கேஸ் கசிவு உண்டாகும். பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கேஸ் கசிவு இருக்கும்போது விபத்தை உண்டாக்கக் கூடும்.

ரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து, சரிசெய்து கொள்ள வேண்டும்.

கேஸ் கசிவு ஏற்பட்டால் பதற்றம் அடையாமல் ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது. வெளிப்புறம் இருக்கும் மின் இணைப்பில் மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்.

காற்றோட்டத்துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும். எரியும் நெருப்பு, எண்ணெய் விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும். சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு உங்களின் விநியோகஸ்தர் அல்லது அவசர சேவை மையத்தை தொடர்பு கொண்டு, கேஸ் கசிவு ஏற்படுவதை சரிசெய்து கொள்ளுங்கள்.

ஏ.எஸ். கோவிந்தராஜன்
திரு. கோவிந்தராஜன், பூர்வீகம் கும்பகோணம். 1996ல் சென்னைக்கு மாற்றம். தனியார் நிறுவனங்களில் பணி. கல்கி, ஜெயகாந்தன், ஜானகிராமன், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர். தனது கல்லூரி நாட்கள் முதலே, ஜோக்ஸ், துணுக்குச் செய்திகள், சிறு கட்டுரைகள், கதைகள் எழுதி வருபவர். சிறந்த மிருதங்க கலைஞரும் கூட!.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...