0,00 INR

No products in the cart.

ஐக்கியம்! 

எழுதியவர்:   அன்னக்கிளி வேலு

ஓவியம்: தமிழ்

பகுதி – 2

து ஒரு ஞாயிற்றுக்கிழமை. அம்மா போன் பண்ணியிருந்தாள். அவனுக்கு கல்யாணம் பண்ணவேண்டுமாம். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு அவன் இளைத்தே போய்விட்டானாம். மதுரையிலிருந்து திருச்சிக்கு போன் பண்ணினால் மகனுக்கு காதில் விழாது என்பது போல அவ்வளவு சத்தமாய் பேசினாள்.  அம்மாவிடம் எப்படி சொல்லுவது, நான் என் ஆபிஸ் டைபிஸ்ட்டை காதலிக்கிறேன் என்று. அம்மா ஒத்துக் கொள்வாளா.  சொந்தமும் இல்லை, நட்பும் இல்லாமல் யாரோ ஒருத்தியை எப்படிடா கட்டுவது என்று முறைப்பாளோ. காதலாவது கத்திரிக்காயாவது என்று திட்டுவாளோ.

கோயிலுக்கு போய் வந்தால் கொஞ்சம் மனசஞ்சலம் நீங்கும் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினான். மொபெட்டில் போய் கொண்டிருக்கும் போதே, திடீரென்று அவளும் கோயிலுக்கு வந்திருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தான். அப்படி ஏதும் நடக்குமா… வருவாளா… வரமாட்டாளா? அப்படியே வந்தால் தனியாக வருவாளா. யாரையாவது அழைத்துக் கொண்டும் வருவாளா. அது சரி இன்றைக்கு கோவிலுக்கு போகவேண்டும் என்று முதலில் அவளுக்கும் தோன்ற வேண்டுமே. அதுவும் இதே கோயிலுக்குதான் வரவேண்டும் என்று என்ன கட்டாயம். ஆனாலும் அந்த கோயில் அவர்களது ஹாஸ்டலுக்கு நேர் பின்புறம் தான் இருக்கிறது. அதனால் வந்தாலும் வரலாம்.

ஒருவேளை வந்தால்…கொஞ்ச நேரம் உங்களோடு பெர்ஸனலாக பேசவேண்டும் என்று கேட்கலாமா. அதை எப்படி எடுத்துக் கொள்வாளோ.  பேசிக்கொண்டிருக்கும்போதே நான் உன்னை காதலிக்கிறேன் என்று நேரடியாகவே சொல்லலாமா? காதலிக்கிறேன் என்று சொன்னால்தான் அவளுக்கு தெரியுமா. நம்முடைய நடவடிக்கைகளெல்லாம் இதுவரையுமா அவளுக்கு அதை உணர்த்தியிருக்காது?

போகும்போதே ஒரு பூக்காரம்மவிடம் ஒரு பெரிய நல்ல ரோஜாவாக வாங்கிக்கொண்டான்.  கோவிலுக்கு வெளியே ஒரு ஓரமாய் மொபெட்டை நிறுத்தி விட்டு ரோஜாவை எடுத்து கசங்காமல் பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான். என்ன ஆச்சரியம், கடவுளே போய் அவளிடம் சொல்லி இங்கே வரவழைத்தது போல விநாயகர் மண்டபத்தில் கண்களை மூடிக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.  தானும் போய் அவளெதிரே நின்று கண்களை மூடி தியானித்தான். அவள் பார்க்கிறாளா என்று கண்களைத் திறந்து பார்த்தபோது இவனை பார்த்து புன்னகைத்தாள். இருவரது கண்களும் நோக்கிக் கொண்டன. அப்பாடா, நிம்மதி.  மவுனமாய் அவளுடனே எல்லா சாமிகளையும் வேண்டிகொண்டு, வெளிப் பிரகாரம் எல்லாம் சுற்றிக் கொண்டிருக்கும்போது, கொஞ்சம் உட்காரலாமா, என்றான்.  ‘உம்’ சொன்னாள்.  கண்டிப்பாக இன்று நல்லதே நடக்கும். இல்லாவிட்டால் கடவுள் அவளை இங்கே இழுத்துக் கொண்டுவந்திருப்பாரா.

இருவரும் ஒரு ஓரமாய் உட்கார்ந்தனர். கொஞ்சநேரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.  எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து ஒருவழியாய் மெல்ல வாய் திறந்தான்.  ‘ரோஜா… நம்ம ஆபிஸ்க்கு நீங்க வந்து சேர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆகப்போகிறது. என்னை பத்தி ஏதாவது நினைச்சதுண்டா’ என்றான்.  இதை எதிர்பார்த்திருக்க வில்லை என்பது போல புருவத்தைச் சுருக்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள். திடீரென்று அவளது கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.  துடித்துப் போனான் ராஜா.  தடுமாறி ‘ ஸாரி ரோஜா, ஸாரி. நான் தப்பா ஏதும் கேட்டுட்டேனா ‘ என்று பதறினான். கொஞ்ச நேரம் மௌனம்.  பிறகு ஒரு வழியாய் கண்களைத் துடைத்தபடி ‘ ஏன் அப்படி கேட்டீங்க ‘ என்றாள். உடனே தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரோஜாவை எடுத்து நீட்டலாமா என்று யோசித்து எழுந்திருக்க முயன்றான்.

உட்காருங்க என்று சொல்வது போல சைகை காட்டியவள், ‘ நீங்க என்னை லவ் பண்றீங்க அதானே.’ என்றாள்.  என்ன ஆச்சரியம். ஒருவன் தன்னை  காதலிக்கிறான் என்று புரிந்து கொண்டு அதை அவனிடமே கேட்க எவ்வளவு முதிர்ச்சி வேண்டும் ஒரு பெண்ணுக்கு.

‘ கிரேட், ரோஜா யூ ஆர் ரீயலி கிரேட் ‘ சொல்ல வந்து சொல்லாமல் விட்டான்.

றுபடியும் நிஜமாகவே எழுந்து ரோஜாவை எடுத்து அவளிடம் நீட்டினான். ‘இந்த கோவில் வாசலில் வச்சு சொல்றேன் ரோஜா, என் மனசு பூரா நீ தான் நிறைஞ்சிருக்கே.  நீ மட்டும் தான் இருக்கிறே… இதை உன்கிட்டதான் முதல் முதலா சொல்றேன்,  இனி வேற யாருக்கிட்டயும் சொல்லவும் மாட்டேன், அதுக்கான அவசியமும் வராதுனு நினைக்கறேன் ’ என்றான்

அவள் அந்த ரோஜாவை வாங்குவாளா வாங்கமாடாளா என்ற குழப்பத்துடனே நீட்டிக் கொண்டேயிருந்தான். கொஞ்சம் யோசித்து பின் அதை வாங்கிக் கொண்டாள். பிறகு சொன்னாள்.  ‘ நான் சொல்ல போற விஷயத்தை கேட்டிங்கனா உங்க முடிவு நிச்சயமா மாறும் ராஜா ’ என்றாள்.  நெஞ்சு திடீரென்று வேகமாய் அடித்துக் கொண்டது ராஜாவுக்கு.  லேசாய் வியர்த்ததும் கூட. என்ன சொல்றே ரோஜா என்பது போல புருவங்களை சுருக்கியபடி பார்த்தான்.

‘எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு ‘ என்றாள்.  கொஞ்சம் தூக்கித்தான் போட்டது ராஜாவுக்கு. நெஞ்சு வேக வேகமாய் அடித்துக் கொண்டது. கொஞ்ச நேரம் அப்படியே பிரமித்துபோய் உட்கார்ந்து விட்டான்.  பேச நா எழவில்லை.

‘நான் காலேஜ் முடிஞ்சு ரிசல்ட்டுக்காக காத்திருந்தேன், ஒரு வரன் வந்தது. எங்க வீட்டுல எல்லாருக்கும் மாப்பிள்ளையை பிடிச்சுப் போச்சு.  நான் மேற்கொண்டு படிக்கணும்னு சொன்னேன். என்னை ஆதரிக்க யாருமில்ல.  முடிவுல அந்த மாப்பிள்ளைக்கே நான் கழுத்தை நீட்டினேன்.’

கொஞ்சம் நிறுத்தி ராஜாவைப் பார்த்தாள். ‘ என்னோட துரதிர்ஷ்டம்….’ என்று திரும்பவும் நிறுத்திவிட்டு மேலே வெறித்து பார்த்தாள். அவளது கண்களில் பொல பொலவென கண்ணீர் கொட்டியது.  ராஜாவுக்கு நெஞ்சு மேலும் அடித்துக் கொண்டது.  ஏதோ பெரிய சோகம் நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. நெஞ்சு கனத்தது.  பேச்சற்று ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.

‘ஒரு நாள் ஆபிஸ் விட்டு வரும்போது, ஒரு லாரி மோதி, ஸ்பாட்லேயே முடிஞ்சு போச்சு.’  ஓ வென அழ ஆரம்பித்து விட்டாள். பார்ப்பவர்கள் தப்பாய் நினைத்து விடுவார்களோ என்று வேறு பயந்தான் ராஜா.

‘என்னை மன்னிச்சுக்க ரோஜா, உன் ஆழ்மனதை நான் காயப் படுத்திட்டேனோனு நினைக்கிறேன்.  ஐயாம் ரியல்லி சாரி,‘  என்றான்.  கொஞ்ச நேர அழுத்தமான சூழ்நிலைக்கு பிறகு ஒரு வழியாய் மூக்கை உறிஞ்சிக் கொண்டு நிமிர்ந்தாள்.

‘சினிமால பார்க்கறோமே, அப்படி நடந்து போச்சு ஒரே மாசத்துல. நான் தனி மரமானேன். என்னை சுத்தி குடும்பமே நின்னும் நான் மட்டும் தன்னந்தனியா நிக்கறமாதிரி ஒரு பிரமை. ’ சொல்லிக்கொண்டே மறுபடியும் மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். ‘ நாட்கள் ஓடுச்சு… மாசம் ஓடுச்சு… வருஷம் ஓடுச்சு… என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்ல யாருக்கும் தைரியம் வரலை. நான் எதாவது வேலைக்குப் போனா  மனசு ஆறும்னு தோணிச்சு. அப்பாவும் சரின்னார்.

‘டைபிஸ்ட் வேலை இருக்குன்னு நம்ப கம்பெனி விளம்பரம் பார்த்தேன். அப்ளை பண்ணேன், இன்டர்வியு நடந்து ஸ்பாட்லேயே ஆர்டர் கொடுத்துட்டாங்க. வந்து வேலைல சேர்ந்திட்டேன். வந்த நாள் முதலாவே உங்கள் நடவடிக்களை கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். முதல்ல லவ்னு சொல்ல முடியல… போகப்போக புரிஞ்சுகிட்டேன்.’  முகத்தை மறுபடியும் துடைத்துக் கொண்டவள், கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள். ராஜாவும் கவனமாய் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

‘இப்போ சொல்லுங்க, எந்த ஆம்பளயாவது என் சோகக்கதையை கேட்ட பிறகும் நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லுவாங்களா. இல்லை நீங்கதான் சொல்லுவீங்களா ’ என்றாள்.

சட்டென நிமிர்ந்தான், ‘ நான் சொல்றேன் ரோஜா. நான் உன்னை விரும்பினது உண்மை. இப்போவும் விரும்பறேங்கறதும் உண்மை. இந்த கோவில் வாசல்ல வச்சு திரும்பவும் சொல்றேன், கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உன்னோடத்தான்.’

அவள் நிமிந்து சொன்னாள், ‘அதுக்கு உங்க வீட்டுல சரி சொல்லணும், உங்க சொந்தகாரங்க சரி  சொல்லணும்.  அதோட எந்த விசயத்தையும் கொஞ்சம் ஆறப் போட்டோம்னா முடிவு மாறும்னு சொல்லுவாங்க.  நான் இந்த ரோஜாவை இப்படியே எடுத்திட்டு போறேன். நீங்க எவ்வளவு டைம் வேணுமோ எடுத்துக்கங்க… எங்க வீட்டில யாரும் மறுக்க மாட்டாங்க, ஏன்னா அவங்களோட முடிவு ஏற்கனவே ஒருதடவை தப்பா போச்சு. எத்தனை நாளானாலும் உங்க முடிவுல மாற்றம் இல்லைன்னு எப்போ வந்து சொல்றீங்களோ, அப்போ இந்த ரோஜா காய்ஞ்சே போயிருந்தாலும் எடுத்து தலையில வச்சுக்கறேன்.  உங்க முடிவு மாறும் பட்சத்துல நான் நொடிஞ்சு போய்ட மாட்டேன்.  ஏன்னா அது எனக்கு புதிசில்லை. நான் கிளம்பறேன் ராஜா.  நான் என் சோகக் கதையச்சொல்லி உங்க மனசை காயபடுத்தியிருந்தா என்ன மன்னிச்சிடுங்க… நான் யார்கிட்டயும் இதுவரை என் கதையை சொன்னதில்லை… நீங்கதான் முதல் ஆள். நீங்கதான் கடைசி ஆளா இருக்கணும்னு சாமியை வேண்டிக்கறேன். என்னால மனத்தவங்க மனசு புன்படறத நான் என்னிக்குமே விரும்பினதில்லை,  விரும்பவும் மாட்டேன். ‘ என்று முடித்தாள்.

ருவரும் எழுந்து மீதி பிரகாரத்தை சுற்றிக் கொண்டு வெளியே வந்தனர்.  வெளியே உட்கார்ந்திருந்த பூக்காரியிடம் நூறு ரூபாய் கொடுத்து மல்லிப்பூ வாங்கி அதை  அவளிடம் நீட்டியபடி, ‘ ரோஜா ஸ்டில் ஐ லவ் யூ .  இதை எங்க அம்மாவே மறுத்தாலும் நான் மாற மாட்டேன்.  நாலு நாளோ, நாலு மாசமோ, நாலு வருஷமோ. எவ்வளவு காலமானாலும் என் முடிவு இதுதான். எனக்கு நீ….. உனக்கு நான். ‘ என்றான்.  ‘ அப்போ நீங்களே அந்த பூவை என் தலையில வச்சி விடுங்க ’ என்று தலையைக் காட்டி நின்றாள்.  ‘ நான் இப்போவே ரெடி. நீங்க எப்போ சொல்றீங்களோ அப்போவே என் கழுத்தை நீட்ட ரெடி. இருந்தாலும் எங்க அப்பா அம்மாகிட்டே ஒரு வார்த்தை சொல்லிடறேன், அவ்வளவுதான் ’ என்றாள். அவளது முகம் ரொம்பவும் மரல்ச்சியாக இருந்தது.

பூவை பின் தலையில் செருகிவிட்டான்.  அங்கே இருமனமும் ஒரு மனதாய் ஐக்கியம் ஆகின.
-முற்றும்.

2 COMMENTS

  1. ராஜா, ரோஜா வாழ்வில் இணைந்து ஐக்கியம் ஆகப்
    போவதாக முடித்திருந்தது அருமை !

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

தலையாயப் பிரச்னை!

சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஒவியம்: பிள்ளை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். முப்பத்தியெட்டு வயது என்று சொன்னால்தான் தெரியும். கொஞ்சம் இளமையாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு மட்டும்தானா? என்ற சந்தேகம் அவனுக்கே உண்டு. தன் நீண்ட...

அம்மா மசாலா!

இரண்டு சிறுகதைகள். ஓவியம்: சேகர் நீ.த.வெங்கட் ‘’அம்மா… உங்க பையன், மருமகள், பேரன் ரெண்டு நாள் இங்க வரப்போறதா சொன்னேளே… உங்களுக்கு ஏதாவது டவுன்லேருந்து சாமான் வாங்கி வர வேண்டுமா? என்று கேட்கத்தான் வந்தேன்” என்று சொன்ன...

பகல் வேஷம்! 

சிரிப்பு சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஓவியம்; பிரபுராம் "நட்டுவான வேடிக்கை சாமியார்"... என்ற ஆதிகாலத்து பழைய  பெயர் பலகை தொங்கிய கேட்டை திறந்து உள்ளே வந்தான் மாணிக்கம். வாசலிலேயே இருபது இருபத்தி ஐந்து பேர் காத்திருக்க... கலைந்த...

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

0
பீட்ரூட் ரோஸ் மில்க் செய்முறை: பீட்ரூட் நன்கு மண் போக அலம்பிவிட்டு காம்புகளை நறுக்கி எடுத்துவிட்டு துண்டு, துண்டாக நறுக்கி தோலுடன் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். பின்பு வடிகட்டி விடவும். தண்ணீர் கொஞ்சமாகவிட்டு...